ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள். ரோமர் 12:12

 

லூக்கா 10:2 இல் அப்பொழுது அவர் (இயேசு கிறிஸ்து) அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; எனவே அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்

1. மெய்யான தேவனை அறியாத திரளான ஜனங்களை இரட்சித்து தமது மந்தையில் சேர்க்கும்படியாய் ஊழியர்களை எழுப்பி தரும்படி ஜெபிப்போம். – ( சங் 2:8 )

2. விடமுடியாத தீய பழக்கங்களில் அகப்பட்டவர்களை விசுவாசிகள் மூலமாக சபைக்கு அழைத்து வந்து அவர்களை கர்த்தர் விடுதலை செய்யும்படியாய் ஜெபிப்போம். – (யோ 8:38)

3. தேவபிள்ளைகள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி ஜெபிப்போம். – ( எபே 6:11 )

4. தேவபிள்ளைகள் யாவரும் சமாதானமும் ஒருமனமும் உள்ளவர்களாயிருக்க ஜெபிப்போம். – ( எபே 4:3 )

5. பரிசுத்த வாழ்வைக்குறித்த வைராக்கியம் விசுவாசிகளுக்குள் காணப்பட ஜெபிப்போம். – ( 1 தேச 4:3,7)

6. விசுவாசிகள் வீட்டில் தேவனை அறியாதவர்களை கர்த்தர் இரட்சிக்கும்படி ஜெபிப்போம். ( அப் 16:31)

7. விசுவாசிகள் யாவர் வீட்டிலும் குடும்ப ஜெபம் நடைபெற ஜெபிப்போம். – ( யோசு 24:15 )

8. கடன் பிரச்சினைகளில் உள்ள தேவ பிள்ளைகளை கர்த்தர் விடுதலையாக்கி ஆசீர்வதிக்கும்படியாய் ஜெபிப்போம். – ( உபா 28:12 )

9. தேவ பிள்ளைகள் யாவரும் எப்பொழுதும் நல்ல சரீர ஆரோக்கியத்தோடு இருக்க ஜெபிப்போம் – ( யாத் 15:26 )

10. கிறிஸ்துவின் சிந்தை ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் காணப்படாமல் ஜெபிப்போம். ( பிலி 2:5 )

11. தேவபிள்ளைகள் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க ஜெபிப்போம். – ( பிலி 4:4 )

12. விசுவாசிகள் காலத்தை வீணடிக்காமல் ஜாக்கிரதையோடு செலவிட ஜெபிப்போம். ( எபே 5:16 )

13. ஆகாத சம்பாஷணைகள் விசுவாசிகளுக்குள் காணப்படாதபடி ஜெபிப்போம். ( I கொரி 15:33 )

14. விசுவாசிகள் ஞாயிறு ஆராதனைகளை தவற விடாமல் கர்த்தரை ஆராதிப்பதில் வைராக்கியம் ஜெபிப்போம். – எபி ( 10:25 )

15. ஒவ்வொரு விசுவாசிகளும் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாயிருக்க ஜெபிப்போம். – ( கொரி 9:16 )

16. விசுவாசிகள் தங்கள் ஜெப வாழ்க்கையையும் வேத தியானிப்பையும் சரியாய் காத்துக் கொள்ள ஜெபிப்போம் – (1 பேதுரு 4:7, யோ 5:39 )

17. நல்ல வேலையில்லாத தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் நிரந்தர வேலை கொடுக்க ஜெபிப்போம். (III யோ 2)

18. திருமணத்திற்காக காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் ஏற்ற துணையை கொடுக்க ஜெபிப்போம். – ( ஆதி 2:18 )

19. சபையிலே கர்த்தர் கொடுக்கும் தம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்பட்டியகூடிய பெலனை கர்த்தர் விசுவாசிகள் யாவருக்கும் கொடுக்க ஜெபிப்போம். – ( யாக் 1:22 )

20. விசுவாசிகள் ஒருவரும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்காமல் கர்த்தருக்குள் உறுதியாக நிலைத்திருக்க ஜெபிப்போம். ( யூதா 24 )

21. விசுவாசிகளின் வீடுகளில் அநேக வீட்டுக்கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட ஜெபிப்போம். – ( மாற்கு 2:1-12)

22. விசுவாசிகள் யாவரும் ஆராதனைக்கு சரியான நேரத்திற்கு வரும்படி ஜெபிப்போம். – ( எபே 5:16 )

23. ஒவ்வொரு விசுவாசிகளும் அதிகாலையில் கர்த்தரைத் தேடுகிறவர்களாகக் காணப்பட ஜெபிப்போம். – (நீதி 8:17)

24. தேவ பிள்ளைகளின் கைகளின் பிரயாசங்களையெல்லாம் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். – ( ஆதி 26:12 )

25. ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும்படி ஜெபிப்போம். – (ரோமர் 8:14)

26. கர்த்தருடைய சத்தத்திற்கு முற்றும் கீழ்படியக்கூடிய இருதயம் தேவ பிள்ளைகளுக்கு எப்பொழுதும் காணப்படும்படி ஜெபிப்போம். – ( அப் 9:6 ) 

27 அற்புதங்களை பெறுகிற ஒவ்வொரு அவிசுவாசிகளும், இரட்சிக்கப்பட்டு விசுவாசிகளாகி சபையில் சேர்க்கப்பட ஜெபிப்போம். – 

( மாற்கு 10: 46-52)

தொடர்ந்து ஜெபியுங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் ஆமென்.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை