வேதத்தின் மகத்துவம்
வேதத்தின் மகத்துவம்.
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள் –( Hos. 8:12)
முன்னாட்களில் வேத புத்தகம் எல்லோருக்கும் கிடைக்கவில்லை மதகுருமார்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. மேலும் அது கிரேக்கு மற்றும் லத்தின் மொழியில் இருந்ததால் மற்ற ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாது அதனால் போதிக்கிறவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.ஜனங்கள் சத்தியத்தை அறியாததினால் தவறான போதனைகள் பரவ ஆரம்பித்தது.
இதனை கண்ட John wycliff (1320 -1384 A.D) என்ற ஊழியர் வெகு ஜனங்கள் புரிந்து கொள்ளும் படி வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். பல உபத்திரங்களை சந்திக்க நேரிட்டது.
இதே போல் John Hus (1372 -1415 A.D) என்ற ஊழியர் cezh மொழியில் வேதத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். இதினிமித்தம் அவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார்.
William tynadle (1494 – 1536 A.D) என்ற ஊழியர் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பதற்காக கழுத்து நெரிக்கப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்டார். அவரின் கடைசி ஜெபம் ‘தேவனே இங்கிலாந்து தேசத்தின் மன்னரின் கண் களை திறந்து விடும்’அந்த ஜெபத்தின் விளைவாக வந்தது தான் King James Version.
அநேக தேவ மனிதர்கள் வேதாகம மொழிபெயர்ப்புக்காக தங்கள் வாழ்கையை அர்பணித்திருந்தனர். தேவ மனிதர்களின் தியாகம் மற்றும் விலை கிரையத்தின் பலனே இன்றைக்கு நம்முடைய கையில் வேத புத்தகம் காணப்படுகிறது.
தேவனுடைய கற்பனைகளை நோக்கும் போது நாம் வெட்கப்படுவதில்லை (Ps 119:6) தேவனுடைய கட்டளைகளை ஆராயும் போது விசாலம் உண்டாகிறது (Ps 119:45)
ஆண்டவராகிய இயேசு தன்னுடைய 12ம் வயதிலே வேத வசனத்தில் நிறைந்து காணப்பட்டார். வார்த்தையினாலே வனாந்திரத்தில் சாத்தானின் சோதனைகளை ஜெயித்தார்.
கோலியத்தை சந்திக்கும் முன்பாக தன் பையை கூழாங்கற்களை கொண்டு தாவீது நிரப்பியது போல நாமும் சவால்களை சந்திப்பதற்கு வார்த்தையினால் நிரம்பி இருக்கவேண்டும்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments