மகா வேசி

 மகா வேசி


வெளிப்படுத்தின புத்தகம் 

17-18 அதிகாரங்கள் மகா பாபிலோனின் வீழ்ச்சியைக் குறிக்கின்றன.

(வெளி 16:19-17:5)


1) பாபிலோன் என்பது, சாத்தானின் வல்லமைக்குட்பட்ட அரசியல்,

மதம், பொருளாதாரம், இவற்றில் துண்மார்க்கத்தை புகுத்தும் உலகப் பொது ஆட்சியைக் குறிக்கிறது.

(எரே 50:1, 51:1-64 ஐ பார்க்கவும்)


2) உபத்திரவ காலத்தின் இறுதி மூன்றரை வருடங்களில் பாபிலோன் (அதாவது வேசி) அந்திக்கிறிஸ்துவால் அழிக்கப்படும். 

(வெளி 17:16,17)

அரசியல் பாபிலோன் கிறிஸ்துவின் வருகையில் அவரால் அழிக்கப்படும்.(வெளி 19:11-21)


                   *மகாவேசி*


அ) இது பாபிலோன் என்னும் மதத்தைக் குறிப்பிடுகிறது.

இது எல்லா பொய் மதங்களையும், துர் உபதேச கிறிஸ்த்துவத்தையும் விட பயங்கரமானது, விபசாரம்,வேசித்தனம் இவற்றை வேதத்தின் அடையாளமாக' குறிப்பிடும்போது அது துர் உபதேசங்களையும், தேவனுக்கு உண்மையற்ற நிலையையும் காட்டுகிறது. 

(ஏசா 1:21; எரே 3:9; எசே 16:14-18,32;யாக் 4:4) மட்டுமின்றி மக்கள் தேவனை ஆராதிப்பது போல வேஷமிட்டு வேறு தெய்வங்களைக் தொழுது கொள்வதையும் இது காட்டுகின்றது.

இந்த வேசிக்கும் ஆட்டுக்குட்டியானவரின் மனவாட்டிக்குமுள்ள வித்தியாசத்தை பாருங்கள். 

(வெளி 19:7-8) இந்த வேசி சாத்தானுக்கு கீழ்ப்பட்டவள்.

மணவாட்டியோ கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டவள். சாத்தான் ஒருத்தியை அலங்கரிக்கும் போது, தேவனும் மற்றவர்களை அலங்கரிக்கிறார்.

 (வெளி 19:8)

நித்திய மரணம் வேசியின் பங்கு. மணவாட்டிக்கோ நித்திய மகிமை காத்திருக்கிறது. 


இந்த பொய் மதத்தைக் குறித்து,


1) இந்த வேசி கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், அப்போஸ்தலர்களின் உபதேசத்தையும், தெய்வீக வல்லமையையும், அடிப்படை உபதேசங்களையும் தள்ளி விடுவாள். 

(மத் 24:24; 2 தீமோ 3:5; 4:3)

இன்று நடக்கும் நமது ஆராதனையின் உபதேசங்களை கவனித்துப் பாருங்கள்.


2) பாபிலோனின் தத்துவங்களுடனும் வல்லமையுடனும் அவள் கூட்டாளியாய் உடன்படிக்கை பண்ணுவாள். அதாவது ஒழுக்க கேடுகள் நிறைந்த உலக அரசுடன் ஒட்டிக் கொள்ளுவாள்.(வெளி 3:16) அரசியல், மத வல்லமைகள் ஒன்றாகி தேசங்களின் ஆவிக்குறிய நிலையை கைப்பற்றும். (வெளி 17:18)

தற்போது திருச்சபைகள் அரசியல் தலைவர்களுடன் இணைந்து கூட்டம் நடத்துவதையும், உலக பிரகாரமான சூதாட்டமாகிய கிரிக்கெட் டீமை உருவாக்குவதும், கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதும், அடியாட்களை வைத்து மிரட்டுவதும், அல்லது காவல்துறை மூலமாக செயல்படுவதையும், காண முடிகிறது. இதுதான் வேசித்தனம் அல்லது வேசி. 


3) கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்களை அவளது (மகா வேசியின்)தலைவர்கள் உபத்திரவப்படுத்துவார்கள்.

(வெளி 17:6) பல விசுவாசங்கள், கொள்கைகள் இவற்றின் கலப்படமாக்கி மதம் இருப்பதால் உபதேசங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அவளது மதத்தின் கொள்கை, மதிப்பீடுகள் இலட்சியங்கள் ஆகியவற்றோடு ஐக்கியம், ஒற்றுமை, இவையே அவளது பிரதான நோக்கங்களாகும். அவள் பிசாசுகளுக்கும், தீய ஆவிகளுக்கும் உறைவிடமாக இருப்பாள்.

(வெளி 18:2; ஏசா 47:12-13).


4) எல்லா உண்மை விசுவாசிகளும் அவளை விட்டு வெளியே வரக் கட்டளை பெறுகின்றனர். இல்லையேல் அவளோடு இவர்களும் அக்கினிக்குள்ளாவார்கள். 

(வெளி 18:4)


5) இறுதியில் அவளை அந்திக்கிறிஸ்துவின் மூலம் தேவன் அழிப்பார்.

(வெளி 17:6)


இம் மகா வேசியின் தொடர்பு இவ்வுலகத்தோடு இருக்கும். 


1) மாய்மாலா காரர்களும், 

கள்ள தீர்க்கதரிசிகளும், அவளது உபதேசத்தின் மூலம் உலகப் பிரகாரமான வெற்றி பெறுவார்கள். காரணம் உலக இச்சையில் வாழ்வோரை அவள் தன்னுடன் இணைத்துக் கொள்ளுவாள். 

அம் மதத்தின் கொள்கைப்படி மக்கள் தங்கள் கடவுளுக்குரியவர்கள் என்று அறிக்கை பண்ணவும் அதே வேளையில் வேசித்தனம் பண்ணவும் அனுமதிக்கப்படுவார்கள். 


2) அரசியலுடன் இணைப்பு வைத்துக்கொண்டு, அணி நீதியை சகித்துக் கொள்ளுதல் அவளது முத்திரையாகும். எனவே, வேசியான அந்த விசுவாசத்தை மறுதலிக்கும் சபை தன் செல்வாக்கை தருணம் கிடைக்கும்போதெல்லாம் உலகில் பரப்பும். 

(வெளி 18:3)

2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக இப்பொழுதே ஜெபிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை விட உலக அரசியல் தான் பாதுகாப்பானது என்று எண்ணுகிறார்கள். 


 அந்திகிறிஸ்து, கள்ள தீர்க்கதரிசிகள், வலுசர்ப்பமாகிய சாத்தான்  இவர்கள் கடைசி காலத்தில் வெளிப்படுவார்கள். இந்த நாள் மகா உபத்திரவத்தின் நாள் , மகா கொடுமையின் நாள் உங்களால் நிறைவேறும் என்று வேதத்தின் மூலமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார்.

இந்த வார்த்தையை உங்கள் ஜெபம் நிறைவேற்ற விடாமல் தடுத்து விட முடியுமா ?

கள்ள ஜெப ஊழியர்களே


இயேசுவே உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக 

உம்முடைய சித்தம் பூமியிலே நிறைவேறுவதாக 

இன்று சொல்ல வேண்டிய அநேகருடைய வாய்கள் 

ஊழலுள்ள ஆட்சிகளையும், வேசியின் ஆட்சிகளையும், மத ஆட்சிகளையும்,

ஆசீர்வதித்து ஜெபித்து அப்படிப்பட்ட ஆட்சிகளை தேவனே தரும்படி வேண்டுவது தான் இந்த கள்ள ஜெப ஊழியர்களின் ஜெபம்.


எச்சரிக்கை, விழித்திருப்போம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை