சீஷனாயிருப்பதற்குரிய நிபந்தனை.

 சீஷனாயிருப்பதற்குரிய நிபந்தனை. (லூக் 14:28-33)

தம்மைப் பின்பற்றவும் தம் சீஷனாய் ஆகவும் விரும்புகிறவன் எந்த தியாகத்தையும் செய்ய ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து போதித்தார். 

சீஷனாக விரும்புகிறவன் இவ்வுலகில் தனக்கு உண்டான உறவுகள், சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். அதாவது, தன் சொந்த பந்தங்கள், குடும்ப உறவுகள் இவ்வுலகில் தமக்குள்ள பொருட்கள், தமது வாழ்க்கை, ஆசைகள், திட்டங்கள், விருப்பங்கள் அனைத்தையும் துறந்து விட வேண்டும். 


(லூக்கா 14:33 ஐ வாசிக்க)

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இதன் பொருள் நாம் இவற்றையெல்லாம் முற்றிலுமாக இழந்து விட வேண்டும் என்பதல்ல, இவற்றைக் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைத்து, அவருடைய ஊழியத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் காத்திருக்க வேண்டும். 

(லூக் 13:24; மத் 7:14; யோவான் 16:33; 2தீமோ 3:12)

சீஷனாயிருக்க விரும்புகிறவர்கள் இந்த நிபந்தனையை பின்பற்ற வேண்டும். 

முயற்சி செய்வோம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென். 

இன்றைய உயர்ந்த முத்துக்கள். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை