தேவனால் எல்லாம் கூடும்.

 தேவனால் எல்லாம் கூடும்.

இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத்தேயு 19:26)

மனிதனால் இந்த உலகத்தில் செய்ய முடியாத காரியங்கள் எவ்வளவோ இருக்கிறது. 
ஆனால் தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை .(லூக்கா 1:37) என்று வேதம் சொல்லுகிறது. 

 உலகத்தில் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது பாருங்கள்.
ஆனால் அவைகளால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்பதை அநேகர் கவனிக்க தவறி விட்டார்கள். 

விஞ்ஞானத்தால் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. 

விஞ்ஞானத்தால் மக்களுடைய வியாதிகளை குணமாக்க முடியாது. 

விஞ்ஞானத்தால் மக்களுடைய பசியை போக்க முடியாது. 

விஞ்ஞானம் மக்களை ஒரு நாளும் பாதுகாக்க முடியாது. 

விஞ்ஞானம் எப்போதுமே தன்னுடைய வளர்ச்சியையும், மக்களை அழிக்கும் ஆற்றலையும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயங்களையும், மக்களை அடிமைப்படுத்தும் ஆற்றலை மட்டுமே கொண்டுள்ளது.
ஆகையால் மனிதனால் அநேக பிரச்சினைகளை தீர்க்க முடியாது. 

ஆகையால் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், மனுஷனால் கூடாதவைகள் தேவனால் கூடும்.

விஞ்ஞானங்கள் மருத்துவத்துறைகளில் பல வளர்ச்சிகள் அடைந்திருந்தாலும், தீர்க்க முடியாத புற்று நோய்கள், குஷ்டரோகங்கள், எய்ட்ஸ், காசநோய், சர்க்கரை வியாதி,
டயாலிசிஸ், இதேபோல் பல வியாதிகள் உள்ளன, ஆனால் மருத்துவ விஞ்ஞானங்கள் மாற்றத்தை கொண்டு வர முடியாது. தீர்க்க முடியாத மருந்து மாத்திரைகளை கொடுத்து பல மில்லியன் கோடிகளை சம்பாதிக்கிறார்களே ஒழிய, நோயற்ற வாழ்வை கொடுக்கக்கூடிய விஞ்ஞானம் வரவில்லை. 

ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் நோயற்ற வாழ்வை இந்த பூமியிலும் இனிவரும் நித்திய ராஜ்யத்திலும் தர முடியும் என்பது நிச்சயம், அது சத்தியம்.

தீர்க்க முடியாத வியாதிகளில் ஒன்று குஷ்டம். 
இந்த குஷ்டத்தை மனித மருத்துவர்களால் சுகமாக்க முடியவில்லை. மாறாக அவர்களை புறம்பே ஒதுக்கி வைக்க தான் தெரிந்தது, ஒதுக்கி வைக்காவிடில் அது மற்றவர்களுக்கும் பரவி விடும் தன்மையை கொண்ட நோய் ஆகும். ஆதலால் அவர்களை புறம்பே வைத்தார்கள்.

வேதத்தில் குஷ்டரோகி ஒருவன் இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வந்தான்.(மத்8:2,3;)
இயேசு கிறிஸ்து அவனை தொட்டு சுகமாக்கினார்.
அவர் சுகமாக்கியது மாத்திரமல்ல  அவரைப் பின்பற்றிய சீஷர்களுக்கு அதைப் பற்றிய கட்டளை கொடுத்தார். (மத் 10:8 இல்) வியாதியுள்ளவர்களை குணமாக்குங்கள்,
குஷ்டரோகிகளை சுத்தம் பண்ணுங்கள் என்றார்.

அன்னை தெரேசா அவர்கள் தங்களுடைய ஊழிய பகுதிகளில் ஒன்று குஷ்டரோகிகளை சுத்தம் பண்ணுதல், எத்தனையோ குஷ்டரோகிகளை தன் கையினால் கழுவி, துடைத்து, மருந்து போட்டு, ஜெபித்து இயேசுவின் நாமத்தில் குணமாக்கி உள்ளார்கள். அநேக சாட்சிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

மனுசனால் கூடாதவைகள் தேவனால் கூடும். 
இந்த உயர்ந்த முத்துக்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிற தேவனுடைய பிள்ளைகளே (எபிரேயர் 11:6 இல்) சொல்லப்பட்ட வார்த்தையின்படியே தேவனை விசுவாசியுங்கள் அவரை முழு மனதோடு நம்புங்கள், அவர் தம்மை தேடுகிறவர்களுக்கு பலனளிக்கிறவர் என்பதை நீங்கள் விசுவாசிகள் கர்த்தர் பயங்கரமான காரியங்களை நம் வாழ்க்கையில் செய்வாராக ஆமென். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Anonymous said…
உண்மை ஆமென்

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை