உத்தம விதவைகளாகிய"

 "உத்தம விதவைகளாகிய" விதவைகளைக் கனம்பண்ணு.

(1 தீமோத்தேயு 5:3)


"உத்தம விதவையாய் இருந்து" தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

(1 தீமோ 5:5;லூக் 2:37)


ஜெபம் செய்யும் சிறந்த வேலையைச் செய்யும் விதவைகள் திருச்சபையிலிருந்து (1தீமோ 5:3) அங்கீகாரமும், உதவியும் 

(தேவையானால்) பெற வேண்டும். 

*அன்னாள் என்ற விதவை "தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணி ஆராதனை செய்து கொண்டிருந்தாள்"*

(லூக் 2:37). என்பது திருச்சபையில் நினைவு கூறப்பட வேண்டும். 

ஆதி கிறிஸ்தவ சபை அப்படிப்பட்ட விதத்தை 

"சபைக்காக வேண்டுதல் செய்பவர்" என்றும் "வாசல் காப்பாளர்" என்றும் "தேவனுடைய பலிபீடம்"என்றும்.


*"உத்தம விதவைகளை" விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.* (தீமோ 5:9,10)


எபேசுவிலுள்ள சபையில், பொருளாதார உதவி சபையிலிருந்து பெறத் தகுதி வாய்ந்த அதிகாரப்பூர்வமான பட்டியல் தெளிவாக வைக்கப்பட்டிருந்தது. அதாவது,

பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, 

சகலவித நற்றிணைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்றிணைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும், பரிசுத்த ஆவியானவர் நமக்கு அறிவுறுத்துகிறார். 

விதவைகளுக்கு அரசாங்க உதவியோ, ஓய்வூதியமோ கிடையாது என்பதால் சவை அப்படிப்பட்ட உதவியைச் செய்தது. இந்த உதவியை பெறுவதற்கு சில ஆவிக்குரிய தகுதிகளை காண்பிக்க வேண்டியிருந்தது (1தீமோ 5:9,10)


*அவள் மேல் மனதுருகி.*

(லூக்கா 7:12,13,14)

இந்த உலகில் தனியாக விடப்படுகிறவர்கள், "விதவைகள்" ஆகியோர் மேல் இயேசுவுக்கு விசேஷித்த அனுதாபமும் இரக்கமும் உண்டு. இதுகுறித்து பரிசுத்த வேதாகமம் கீழ்க்கண்டவற்றை கற்பிக்கிறது. 


1) தேவன் தகப்பனற்றவர்களுக்குத் தகப்பனாகவும், விதவைகளின் காரியங்களை விசாரிக்கிறவருமாய் இருக்கிறார்.(சங் 68:5).

அவருடைய தனி கவனத்திலும், பாதுகாப்பிலும் இருக்கிறார்கள். 

(யாத் 22:22,23; உபா 10:18; சங் 146:9; நீதி 15:25)


2) தசமபாகங்கள் மூலமாகவும், நமது திரளான மக்கள் மூலமாகவும், தேவன் தகப்பனற்ற அனாதை பிள்ளைகளுக்கும், "விதவைகளுக்கும்" தேவையானதை கிடைக்கச் செய்கிறார்.

(உபா 14:28,29;24:19-21;26:12,13)


3) அவர்களுக்கு உதவி செய்பவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். 

(ஏசா 1:17,19; எரே 7:6,7; 22:3-4)


4) "விதவைகளையும்", அனாதைகளையும் துன்பப்படுத்துகிறவர்களுக்கும் அவர்களைக் கொள்ளையடித்து ஆதாயம் தேடுகிறவர்களுக்கும் தேவன் எதிராய் இருக்கிறார். 

(யாத் 22:22-24;உபா 24:17;

27:19;யோபு 24:3; 

சங் 94:6,16;சக 7:10).


5) "விதவைகள் தேவனுடைய அன்பையும், இரக்கத்தையும் பெறுவார்கள். (லூக் 7:11-17; 18:2-8; 21:2-4; மாற் 12:42,43).


6)"விதவைகளை" ஆதரிப்பதற்கு ஆதித் திருச்சபைக்கு முன்னுரிமை கொடுத்தது. (அப் 6:1-6).


7) உண்மையான விசுவாசத்துக்கு அடையாளம், அனாதைகளையும்,"விதவைகளையும்" அவர்களுடைய துன்பத்தில் உதவி செய்து காப்பாற்றுவதாகும். 

(யாக் 1:27; 1தீமோ 5:3-8).


எனவே உத்தம விதவைகளை கணிக்க வேண்டும். 

தேவன் எல்லா விதவையும் விசாரித்தாரா ?

லூக்கா 4:25,26 ஐ வாசிக்கும் போது தேசத்தில் பஞ்சம் உண்டாயிருந்த போது இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தன. என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்வதை நாம் பார்க்கிறோம். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்து ஒரு விதவையினிடத்திருக்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றவர்களிடம் அனுப்பப்படவில்லை என வாசிக்கிறோம். சிந்திக்க வேண்டிய ஒரு வேதபகுதியாகும். அவள் உத்தம விதவை, ஆகையால், தம்முடைய பரிசுத்தமான ஊழியக்காரன் எலியாவை, அவளுடைய வீட்டிற்கு அனுப்பி அவன் போஷிக்கப்படவும், அந்த வீட்டார் பஞ்சக் காலத்தில் விசாரிக்கப்படவும், காப்பாற்றப்படவும் தேவன் இரக்கம் கொண்டார்.


அதே போல் தசமபாகம் காணிக்கை வாங்குவோர் திருச்சபைக்கு வருகிற உத்தம விதவைகளை ஆதரிக்கும் காணிக்கையை பயன்படுத்த வேண்டும்.


ஜெபிக்கவும் கர்த்தரை துதிக்கவும் அவர்களைப் பயன்படுத்த வேண்டும்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் சிலுவை ராஜா. 

தொடர்புக்கு 9841711591. சென்னை குன்றத்தூர்.

 





Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை