கிறிஸ்தவர்கள்
பொதுவான சிந்தனைக்கு.
அடுத்தவர் மனைவி அடுத்தவர் கணவனோடு கிறிஸ்தவர் கூடி வாழ்வது சரிதானா.?
திருச்சபை என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது இயேசு கிறிஸ்து ரொம்ப நல்ல தெய்வம் அடுத்து கிறிஸ்தவர்கள் நல்லவர்களாக, உண்மையுள்ளவர்களாக இருப்பார்களென்று, ஆனால் வேதத்தை தொடர்ந்து வாசித்து கிறிஸ்துவோடு நெருங்க நெருங்க அநேக கிறிஸ்தவர்களை நாம் வெறுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
*ஏனென்றால் சபை என்றாலே பிரித்து எடுக்கப்பட்டவர்கள் கூடுகிற இடம்.*
அதுதான் திருச்சபை.
*பரிசுத்தமுள்ள தேவனை பரிசுத்த சிந்தையோடு துதித்து, மகிமைப்படுத்தி, ஸ்தோத்தரித்து, அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து, கனத்தையும் மகிமையும் தேவாதி தேவனுக்கு நாம் செலுத்துகிற ஒரு இடம் தான் நாம் கூடுகிற சபையாகும்.*
பாவம் உலகத்திலிருந்து மனிதனுக்குள் வருகிறது, அல்லது பிசாசு மூலமாக மனிதனுக்குள் வருகிறது, இன்னும் சொல்லப்போனால் மாம்சத்தின் இச்சையினால் பாவம் நமக்கு வருகிறது.
உலகத்திற்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு அதைக் கேட்டவர்கள் விசுவாசித்து தங்களுடைய பாவத்தை அறிக்கை செய்து விட்டு விட்டு, வெளிப்படையாக மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று, அந்நிய பாஷையில் பேசி வருகின்ற ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ சபையில் அடுத்தவருடைய கணவனையோ அல்லது அடுத்தவருடைய மனைவியோடு நீங்கள் வாழ்வது சரியா ?
இப்படிப்பட்ட ஆண்களும், பெண்களும் உண்மையாகவே மனந் திரும்பியவர்களா ?
உண்மையான அபிஷேகத்தை பெற்று அந்நிய பாஷை பேசுகிறவர்களா ?
திருச்சபைக்கு செல்லும் திருமணமான பெண் இன்னோர் பெண்ணின் கணவனுடன் வேசித்தனம் செய்வது அல்லது விபச்சாரம் செய்வது சரியா ?
இவர்களுடைய கள்ளக்காதலை கண்டு தாலி கட்டிய கணவர் நாண்று கொண்டு சாகிறார், அவரை அடக்கம் பண்ணின பின்பும் அதே கள்ளக்காதலுடன் சபைக்கு செல்கிறாள். சபை போதகர் சொல்கிறார், இதுதான் கர்த்தருடைய சித்தமென்று.....
கள்ளக் காதலனுக்கு மனைவி இருப்பதையும் அறிந்துக் கொண்டு, அவளுடைய வீட்டில் சபையை ஆரம்பிக்கிறார்.
இதேபோல ஆண்களும் தங்கள் மனைவிகளுக்கு தெரியாமல் அடுத்தவருடைய மனைவியுடன் வாழ்வது கிறிஸ்துவத்திற்கு, கிறிஸ்துவ வாழ்க்கைக்கு தகுதியானதா?
ஏன் சபை இவர்களை கண்டிக்கவில்லை.?
15 ஆண்டுகள் 20 ஆண்டுகளாக சபைக்குச் செல்லும் ஒரு சில ஆண்கள் ஒரு சில பெண்கள் இப்படிப்பட்ட பாவத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்துவதற்கு முயற்சிக்கவில்லையே
சபைக்குப் போனால் நல் ஒழுக்கங்களையும், பயபக்தியையும் கற்றுக் கொள்வார்கள், தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்து நித்திய வாழ்வை சுதந்தரித்துக் கொள்வார்கள் என நம்பிக்கை இல்லாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
சில கள்ள ஊழியர்களும் நல்ல ஊழியர்களை போல நடித்து பல மனைவிகளை உடையவர்களாக வலம் வருகிறார்கள்.
கணவனை இழந்த விதவைகள் சிலர் ஊழியம் செய்கிறார்கள் ஆனால் விபசார கண்களுடைய ஊழியர்களை தன் வசப்படுத்தி அவர்களோடு இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வாழ்வது கிறிஸ்துவுக்கு முன்மாதிரியானதா ?
சபையில் பெரிய கூட்டம் இருப்பதைவிட பரிசுத்தமானவர்கள் இருக்கிறார்களா என்பதை உண்மை ஊழியன் புரிந்து கொள்ள வேண்டும்.
*திருச்சபையின் நோக்கம்*
பரிசுத்தம்தான் நமது உயிர் நாடி .
பரிசுத்தம்தான் நமது பேச்சு.
பரிசுத்தம் தான் நம்முடைய வாழ்க்கை.
பரிசுத்தம்தான் நம்முடைய குடும்பம்.
பரிசுத்தம் தான் நம்முடைய ஊழியம்.
பரிசுத்தன் தான் நம்முடைய பரவசம்.
நம்முடைய சபையில் ஆட்களே வராமல் போனாலும் ஒரு ஊழியன் பரிசுத்தமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
(தெருவில் போய் நாலு பேருக்கு சொல்லி விடலாம்)
கொரிந்து சபையில் விபச்சாரம் செய்த ஒருவனை பவுல் அப்போஸ்தலன் சபையை விட்டு நீக்கியது போல இப்படிப்பட்டவர்களை ஒரு வேளை இவர்கள் உங்களுக்கு பல ஆயிரங்களை காணிக்கையாக தரலாம், வேண்டாம் இந்த அவலட்சனமான காணிக்கை
அவனை,அவளை, புறம்பே தள்ளிப் விடுங்கள்.
திருச்சபைகள் பரிசுத்தமாய் இருக்கட்டும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments