தேவனை தேடுவதற்காக அவசியம் இது

 தேவனை தேடுவதற்கு அறிவு தேவையா அல்லது தெய்வ பக்தி தேவையா ?


அறிவு என்பது படித்து அல்லது காதினால் கேட்டு புரிந்து கொள்வது ஆகும். 


தெய்வ பக்தி என்பது தேவன் மீது நம்பிக்கை வைப்பதாகும். 

இன்றைக்கு நாம் எப்படி தேவனை தேடுகிறோம் என்பதையும் அவர் மீது எப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதையும் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளப் போகிறோம். 


உலகத்தில் ஒரு பெரியவர் இப்படிச் சொன்னார். 

அறிவு வந்தால் பக்தி போய்விடும் பக்தி வந்தால் அறிவு போய்விடுமென்று,


இன்று அறிவின்  பிரசங்கங்களை நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

திருக்குறள், சித்தர்களின் கருத்துக்கள், பல தத்துவங்கள், மற்ற மதங்களிலுள்ள சம்பவங்கள் இவைகளை எல்லாம் படித்து அதை வேதத்தோடு ஒப்பிட்டு தங்களின் அறிவு திறமையை வெளிப்படுத்துகிறார்கள். 

இது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது.

பக்தி இல்லாத அறிவாளிகளை உருவாக்கும். 


பக்தி என்பது இயற்கை அப்பாற்பட்டதாகும்.


யோவான் இரண்டாம் அதிகாரத்தில் கானாவூர் திருமணத்தில் நடந்த அற்புத திராட்சைப் பழ ஜூஸ்.

அந்த ஜூஸ் இயற்கையான பழத்திலிருந்து வர வில்லை 

அது தண்ணீரிலிருந்து வந்த ஜூஸ். 

அறிவாளிகள் ஏற்றுக்கொள்வார்களா ?

அறிவாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் திராட்சை கொடி வளர்ந்து பூத்து காய்த்து  கனியாகி ஆலையில் பிழிந்து ஜூஸாக துருத்திகளில் பாதுகாக்கப்பட்டு பின்பு பரிமாறப்பட வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகும். காத்திருந்து குடித்துவிட்டு செல்வார்களாக ?

ஆனால் இயேசு கிறிஸ்து தண்ணீரை நிரப்பின பின்பு மொண்டு பரிமாறுங்கள் என்று சொன்னார். கன்னிமை நேரத்திலே தண்ணீர் திராட்சை பழ ஜூஸ் ஆக மாறியது. தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் மாத்திரமே இதை ஏற்றுக் கொள்ள முடியும். அவரால் எல்லாம் கூடும். எல்லாவற்றையும் செய்ய அவர் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை பக்தியுள்ளவனால் மாத்திரமே சொல்ல முடியும்.


ஆகையால் தான் வேதம் சொல்லுகிறது 

பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொள்கிறார்.

(சங் 4:3, அப் 2:5; 10,2,7; 13,43;)

மொத்தத்தில் தேவ திட்டமே தேவ பக்தியுள்ள  சந்ததியை

உருவாக்கவே 


வேதத்தை வேதாகம கல்லூரியில் சென்று படிப்பது மிகவும் நல்லது. வேதத்தை அறிய வேண்டும். வேதத்தின் மூலமாக தேவனை அறிகிற அறிவு நமக்கு தேவை.

ஆனால் ஆனால் வேதகாம கல்லூரி படிப்பு உனக்குள்ளிருக்கும் தெய்வ பயத்தை, பயபக்தியை  உனக்குள் அதிகரித்தால் தேவனுக்காக ஊழியம் செய்ய முடியும்.

வெறுமனே  வேத அறிவு மாத்திரம் இருந்தால் 

அது யாருக்கும் பிரயோஜனம் இல்லை. 

மத் 2ஆம்  இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கும்போது அங்கே வேத அறிவு இருந்தது சிலருக்கு 

ஆனால் கிறிஸ்து மீது பயபக்தி இல்லை. மாறாக கொலை வெறி இருந்தது. 

ஏரோது முதல் வேதபாரகர்கள் வரை 


பைத்தியமான பிரசங்கம்.

அதனாலே ஜனங்களை இரட்சிக்க தேவனுக்கு பிரியம் உண்டாயிற்று

ஆகையால் தேவனுடைய ஊழியர்கள் ஒரு பயபக்தியோடு தேவனை சேவிக்க முயற்சி செய்யுங்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 







Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை