கள்ள ஊழியர்களிடம் ஐக்கியம் கொள்ளும் ஊழியர்கள்.
போதகர் கூடுகை மூலமாக ஒட்டுமொத்த திருச்சபைகளும் இணைந்து ஆடுகளை ஓநாயினிடத்தில் ஒப்படைத்தல். பணத்திற்காக, பெயர், புகழுக்காக, (வருமான வரி ரைடு மூலமாக 120 கோடி மற்றும் 4 1/2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு பிரபல ஊழியர்களுடன் கூட்டணி அமைக்கும் ஊழியர்கள் ஐக்கியம்.) திருச்சபை என்பது தேவனுடைய இரத்தத்தால் சம்பாதிக்கப்பட்டது. மந்தையைத் தவறாக வழிநடத்தி, சுய லாபத்திற்காகப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு வேதம் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது. அதற்கான சில வேத ஆலோசனைகள் : மந்தையை மேய்ப்பதே பொறுப்பு, வியாபாரம் அல்ல: சபை மக்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். அவர்களை லாபத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது."உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து... கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும்; அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாகமாயும்..." (1 பேதுரு 5:2) மந்தை சிதறடிக்கப்படுவதற்கு நீங்களே பொறுப்பு: தவறான போதகர்களிடம் மக்களை விடுவது அவர்களை அழிவுக்கு நேராக நடத்துவதாகும்."என் மேய்ச்சலின் ஆடுகளை அழித்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ!" (எரேமியா 23:1) சுயநலத்திற்காக மக்களைப் பயன...