அடியும் வாங்க வேண்டிய சூழ்நிலை
சமாதானம் பண்ணுகிறவர்கள் அடிபட வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். இரண்டு வாகனங்கள் எதிர்பாராத நேரத்தில் ஒன்று கொண்டு லேசாக இடித்துக் கொண்டன. இடித்துக் கொண்டதில் குட்டி யானையின் வாகனத்தில் ஏர் ஃபில்டர் உடைந்து விட்டது . அந்த ஏர் பில்டர் விலை 1800 ரூபாய் என்று மெக்கானிக் சொன்னதினால் நான் அருகாமையில் இருந்தபடியினால் ஒரு 1500 ரூபாய் பாதிக்கப்பட்டவருக்கு வாங்கி கொடுத்தேன் google pay மூலமாக... எல்லாம் சமாதானமாக முடிந்தது. திடீரென்று குட்டி யானைகாரர் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டான் நல்லூர் ஏழாவது தெருவில் இருக்கிறேன் என்று சொன்னேன். சுமார் மூன்று மணி நேரம் கழித்து வாகனத்தில் வந்து கொண்டிருந்த என்னுடைய வாகனத்தை மறித்து சாவியை பிடுங்கி கழுத்தில் இரண்டு குத்து குத்தினான். சரியான வீக்கம் வலியும் கூட.. சாவியை எடுக்கும் பொழுது கையை வைத்து தடுத்தேன் உடனே என்னை அடித்து விட்டான் என்று சொல்லிவிட்டான். பிறகு 100க்கு போன் செய்து காவல்துறையை வரவழைத்தேன். தேவ ஊழியரும் பத்திரிகையாளரும் நண்பருமான ஏசுதாசன் ஐயா அவர்களையும் வரவழைத்தேன். ஏண்டா உனக்கு நல்லது தானே பண்ணினேன் அதற்கு ஏன...