அடியும் வாங்க வேண்டிய சூழ்நிலை

சமாதானம் பண்ணுகிறவர்கள் அடிபட வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். 

இரண்டு வாகனங்கள் எதிர்பாராத நேரத்தில் ஒன்று கொண்டு லேசாக இடித்துக் கொண்டன. இடித்துக் கொண்டதில் குட்டி யானையின் வாகனத்தில் ஏர் ஃபில்டர் உடைந்து விட்டது . அந்த ஏர் பில்டர் விலை 1800 ரூபாய் என்று மெக்கானிக் சொன்னதினால்  நான் அருகாமையில் இருந்தபடியினால் ஒரு 1500 ரூபாய் பாதிக்கப்பட்டவருக்கு வாங்கி கொடுத்தேன் google pay மூலமாக...

எல்லாம் சமாதானமாக முடிந்தது. திடீரென்று குட்டி யானைகாரர் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டான் நல்லூர் ஏழாவது தெருவில் இருக்கிறேன் என்று சொன்னேன். சுமார் மூன்று மணி நேரம் கழித்து வாகனத்தில் வந்து கொண்டிருந்த என்னுடைய வாகனத்தை மறித்து சாவியை பிடுங்கி கழுத்தில் இரண்டு குத்து குத்தினான். சரியான வீக்கம் வலியும் கூட.. சாவியை எடுக்கும் பொழுது கையை வைத்து தடுத்தேன் உடனே என்னை அடித்து விட்டான் என்று சொல்லிவிட்டான். பிறகு 100க்கு போன் செய்து காவல்துறையை வரவழைத்தேன். தேவ ஊழியரும் பத்திரிகையாளரும் நண்பருமான ஏசுதாசன் ஐயா அவர்களையும் வரவழைத்தேன்.

ஏண்டா உனக்கு நல்லது தானே பண்ணினேன் அதற்கு ஏன் என்னை அடிக்கிறாய் என்று கேட்டதற்கு 300 ரூபாய் குறையாக கொடுத்து விட்டீர்கள் அது மாத்திரம் அல்ல நான் இன்றைக்கு வாகனம் ஓட்டவும் போகவில்லை எனக்கு மேலும் பணம் வேண்டும் என்று கேட்டான். 

வண்டியின் சாவி எடுத்துக் கொண்டு வேகமாக நடந்து சென்றான் வழியில் முன்னால் நண்பர்களும் பாஸ்டர் சாத்ராக் அவர்களும் அவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். 

காவல்துறையும் வந்தது உடன் இருந்தவர்கள் அவனை மன்னித்து விடுங்கள் கேஸ் போட வேண்டாம் என்று சொல்லி பொதுவாக சமாதானம் பண்ணி அனுப்பி விட்டார்கள்.

அடி வாங்கி கழுத்து வீக்கம் கொண்டு வலியோடு துடிப்பவன்  நானாக இருந்தாலும் 
உடன் இருந்தவர்கள் எதிரியை கண்டிக்காமல், தண்டிக்காமல் விட்டுவிட்டனர். 

எல்லாம் நன்மைக்கே
உங்கள் கருத்துக்களையும் எனக்கு தெரிவியுங்கள். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

ஈரான் (ஏலாம்) இஸ்ரேல் யுத்தம்.

பிரபல ஊழியர்களை தேடி....