பழைய ஏற்பாட்டு சட்டம்
பழைய ஏற்பாட்டுச் சட்டம். (யாத் 20:1,2) "தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே." சீனாய் மலையில் இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மிகவும் முக்கியமானது, தங்கள் தலைவனாகிய மோசேயின் மூலம் தேவன் கொடுத்த கற்பனைகள் தங்களுக்குக் கிடைத்ததாகும். மோசேயின் நியாயப்பிரமாணம், (எபிரெய மொழியில் தோரா, அதன் பொருள், போதனைகள் என்பதாகும்.) மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். (a) ஒழுக்கநெறிக் கட்டளைகள்; பரிசுத்த வாழ்வுக்கு ஆதாரமான சட்டங்கள் (யாத் 20:1-17) (b) ஆட்சிமுறைக் கட்டளைகள்: இஸ்ரவேலின் சட்டரீதியான மற்றும் சமூக வாழ்க்கை சம்பந்தப்பட்ட விதிகள். (யாத் 211-23:33); (C) தெய்வீக வழிபாடு சம்பந்தமான கட்டளைகள்: இஸ்ரவேலர் ஆண்டவரை வழிபடவேண்டிய விதம், பலிகள் பற்றிய விதிகள் உள்ளடங்கிய சடங்காச்சாரங்கள் (யாத் 24:12 முதல் 31:18 வரை). பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின் தன்மை, வேலை ஆகியவை பற்றிய கீழ்க்கண்ட கருத்துக்களைக் கவனிக்கவும். (1) தேவன் தமது மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பாகவே...