பல கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள்.
பல கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள். (மத் 24:11) கடைசி நாட்கள் நெருங்கி வரும்போது, கள்ள தீர்க்கதரிசிகளும், போதகர்களும் உலக மக்கள் மத்தியில் அதிகமாகக் தோன்றிக் கிரியை செய்து கொண்டிருப்பார்கள். இக்காலத்தில் கிறிஸ்துவ சமுதாயம் முழுவதும் உலகெங்கும் விசுவாசம் குறைந்த நிலையிலேயே காணப்படும். தேவனுடைய வார்த்தைக்கும், பரிசுத்த வேதாகமம் கூறும் நீதிக்கும் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். இன்றைக்கு எழுப்புதல் வரும் என்று பேசுகிறவர்கள். எழுப்புதலுக்காக ஜெபிக்கிறவர்கள். தயவு செய்து சிந்திக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 1) உறுதியான விசுவாசிகள் கூட வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையுடன் முரண்படுவதாயிருந்தாலும் கூட, அவர்களுக்கு கூறப்படும் புதிய போதனைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த நிலை திருச்சபைகளில் பிரிவினைகளை ஏற்படுத்தும். (1தீமோ 4:1; 2தீமோ 3:8; 4:3) இவ்வாறு புரட்டு உபதேசங்களைப் போதிப்பவர்கள் கூட சபைப் பிரிவுகளில் உயர்ந்த பதவிகளை பிடித்துக் கொள்வார்கள். இறையியல் பள்ளிகளிலும் இடம் பிடித்துக் கொள...