நெகேமியா ஜெபம்
நெகேமியா. (1:1) நெகேமியா யூதாவின் ஆளுநராக கி.மு. 444-ல் பெர்சியாவை விட்டு எருசலேமுக்குப் போனான். எஸ்றா அங்கேபோன பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்தது. எருசலேமின் சுவரைத் திரும்ப எடுப்பிக்கவும், நகரத்தைப் பலப்படுத்தவும், பெர்சிய ராஜாவிட மிருந்து பெற்ற கட்டளையோடு நெகேமியா வந்தான் (2:7-8). அதிகமான எதிர்ப்புக்கும் மத்தியில் 52 நாட்களில் நெகேமியா சுவரைக் கட்டி முடித் தான் (6:15). அவன் திறமைசாலியும், துணிச்சலானவனும், விடாமுயற்சி யுள்ளவனும் மற்றும் ஜெபிக்கும் மனிதனாகவுமிருந்தான். (2:4) மேலும் மக்களுக்கு ஆவிக்குரிய புத்துணர்ச்சியைக் கொண்டு வருவதற்கு எஸ்றாவுடன் ஒத்துழைத்தான். (அதி 8). துக்கித்து உபவாசித்து மன்றாடினான். (1:4) நெகேமியா தன் மக்களுக்காகவும், யூதாவின் தேவனுடைய வேலைக்காகவும் ஆழ்ந்த பாரமடைந்திருந்தான். எருசலேமிலும், யூதாவிலுமுள்ள தேவமக்களுக்கு நேரிட்ட பெரும் துன்பம் தொல்லைக்காக, நான்கு மாதங்கள் (வச 1 உடன் 2:1ம்) அதிக கண்ணீரோடு தன் இருதயத்தைத் தேவனிடத்தில் ஊற்றி உபவாசித்து மன்றாடினான். (அப் 20:31) அவனுடைய ஜெபமானது, பாவ அறிக்கை (வச 6-7) தேவனிடம் ...