Posts

Showing posts with the label எல்லாவற்றிலும் வாழ்ந்து

எல்லாவற்றிலும் வாழ்ந்து

Image
எல்லாவற்றிலும் வாழ்ந்து.  (3யோவா 1:2) விசுவாசிகள் ஆரோக்கியமுள்ள வர்களாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவருடைய ஆசீர்வாதங்கள் காணப்படவும் தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார். நாம் எல்லாவற்றிலேயும் வாழ்ந்து சுகித்திருக்கவே தேவன் விரும்புகிறார். அதாவது நம்முடைய வேலைகள், திட்டங்கள், நோக்கங்கள், ஊழியங்கள், குடும்ப வாழ்க்கை மற்றும் யாவும் அவருடைய சித்தத்தின் படியும், வழிநடத்துதலின்படியும் ஆசீர்வதிக்கப்படவே அவர் விரும்புகிறார். எனவே, கிறிஸ்துவின் மீட்பின் மூலம் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் நம் முடைய சரீர தேவைகள் மற்றும் ஆவிக்குரிய தேவைகள் ஆகிய இரண்டினையும் நமக்கு பூர்த்திச் செய்கிறது.  சரீர பிரகாரமான செழிப்பினைக் குறித்தும் ஆவிக்குரிய வாழ்க்கை யின் செழிப்பினைக் குறித்தும் வேத வசனங்கள் நமக்குப் போதிப்பவை கள் பின்வருமாறு:  (1) எல்லாவற்றிலும் வாழ்ந்து (கிரேக்க பதம் கிரியோரே) என்பதின் கிரேக்க மொழிபெயர்ப்பின் அர்த்தங்கள் என்னவெனில்,  "நல்ல பிரயாணம்,  நல் வழியில் நடத்தப்படுதல்" என்பவையாகும். இந்த அர்த்தத்தை மனதில் கொண்டவராகவே யோவான் இதை எழுதியுள்ளார்....