Posts

Showing posts with the label பஸ்கா பண்டிகை

பஸ்கா பண்டிகை.

Image
  பஸ்கா பண்டிகை  கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1300 வருடங்களுக்கு முன்பாக இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களுடைய கூக்குரல் தேவனுடைய சமூகத்தை எட்டியதால், ஜனங்களை விடுவிக்கும்படி கேட்க மோசேயையும் அவருடைய அண்ணன் ஆரோனையும் பார்வோனிடம் அனுப்பினார். அந்தக் கர்வம் பிடித்த பார்வோன் அவர்களை விடுதலை செய்ய மறுக்கவே, தேவன் எகிப்து தேசத்தை அடுத்தடுத்து பல வாதைகளால் வாதித்தார். இறுதியாக, பத்தாம் வாதையைக் கொண்டு வந்தபோது எகிப்தின் முதற்பேறனைத்தும் செத்துமடிந்தன. அதற்குப் பிறகே அவர்களை விடுதலை செய்தான். பழைய ஏறப்பாட்டு பஸ்காவை யாத்திராகமம் 12 கி.மு. 1513-ஆம் ஆண்டு, ஆபிப் என்றழைக்கப்பட்ட எபிரெய மாதத்தின் (பிற்பாடு நிசான் என்றழைக்கப்பட்டது. நிசான் மாதம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருகின்றது) 14-ஆம் தேதி பஸ்கா பலிக்கு, 10-ஆம் தேதியிலிருந்தே அவர்கள் தயாராக வேண்டும். அதாவது பஸ்கா பலியிடுவதற்கு தேவையான ஆட்டுக்குட்டி, நான்கு நாட்களுக்கு முன்பாக தெரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். (யாத் 12:3) பலியாகப்போகும் இந்த ஆடானது அவர்களுடைய வீடுகளில் நான்கு நாட்கள் கட்டி வைக்...