பாவப்பரிகார நாள்
பாவப்பரிகார நாள் (லேவி 16:32,33). “அபிஷேகம் பெற்றவனும்... ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக் கடவன். பரிசுத்தஸ்தலத்துக்கும். ஆசரிப்புக் கூடாரத்துக்கும், பலிபீடத்துக்கும், பிராயச்சித்தஞ் செய்து, ஆசாரியருக்காகவும், சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக் கடவன்." பிராயச்சித்தம் செய்வதன் அவசியம்: பாவ நிவிர்த்தி செய்தல்' என்னும் சொல் 'கப்பர்' என்னும் எபிரெயச் சொல்லிலிருந்து வந்த 'கிப்புரீம்' என்றும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இதன் பொருள் 'மூடிமறைத்தல்' என்பது. இச்சொல்லுக்குப் பாவத்துக்குச் சமமான பிராயச்சித்தமாக (மீட்கும் பொருள் அல்லது பிணைத்தொகை) ஒரு தொகையைச் செலுத்தி, பாவத்தை மூடி மறைத்து விடுவதாக ஒரு கருத்து உள்ளது. இதற்குச் செய்யப்பட்ட பாவத்துக்குத் தகுந்த ஈடு செலுத்தப்பட்டுவிட்டது என்று பொருள் கொள்ளுவார்கள். (யாத் 30:12; எண் 35:31; சங் 49:7; ஏசா 43:3 ஆகிய வசனங்களை கவனிக்கவும்). 1) பிராயச்சித்தம் செய்வதன் அவசியம், இஸ்ரவேலர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் காணப்படாவிட்டால் அவர்கள் தேவனுடைய ...