அழைத்தவர் போல
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, "நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;" நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். (யோவான் 15:16) தேவன் பரிசுத்தராய் இருப்பது போல, அவராலும் அவரது ஊழியத்தாலும் தெரிந்துகொள்ளப்பட்ட நாமும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பது வேதாகமத்தின் முதன்மையான கட்டளையாகும். 1} "நம்மைத் தெரிந்துகொண்ட தேவன் பரிசுத்தராய் இருப்பது போல" : (லேவி 19:2; 20:26;) 1. அழைத்தவர் பரிசுத்தர் என்பதால் நாமும் பரிசுத்தராய் இருக்க வேண்டும் நம்மைத் தெரிந்துகொண்டு அழைத்த தேவன் தூய்மையானவர். எனவே, அவரைப் பின்பற்றும் நாமும் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் பரிசுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வசன ஆதாரம்: "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்." — 1 பேதுரு 1:15 2. தேவன் பரிசுத்தராய் இருப்பதால் நாமும் பரிசுத்தராய் இர...