தேவனுடைய ராஜ்ஜியம் யாரை விட்டு நீக்கப்படும்.
தேவனுடைய ராஜ்யம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை மட்டும் குறிப்பதல்ல; அது தேவனுடைய ஆளுகையையும், அவருடைய வல்லமையையும், நீதியையும் குறிப்பதாகும். சுருக்கமாகச் சொன்னால், எங்கே தேவனுடைய விருப்பம் நிறைவேறுகிறதோ, அங்கே அவருடைய ராஜ்யம் இருக்கிறது. இதைக் குறித்த ஒர் சிறு முன்னுரை. 1). ராஜ்யத்தின் வருகை இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் தமது ஊழியத்தைத் தொடங்கியபோது, அவர் அறிவித்த முதல் செய்தி தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியதுதான். "காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்" (மாற்கு 1:15). இது தேவன் மனிதர்களிடையே ஆளுகை செய்ய விரும்புவதைக் காட்டுகிறது. 2). ராஜ்யத்தின் தன்மை தேவனுடைய ராஜ்யம் என்பது வெளிப்படையான ஆடம்பரங்களைக் கொண்டது அல்ல; அது மனிதனின் உள்ளான மாற்றத்தைக் குறிப்பது. "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது" (ரோமர் 14:17). 3). ராஜ்யத்தைத் தேடுதல் ஒரு விசுவாசியின் வாழ்வில் முதல் முன்னுரிமை தேவனுடைய ராஜ்யத்திற்கே இருக்க வேண்டு...