இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எதற்காக சிந்தப்பட்டது ?
கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்பது மிகவும் உன்னதமானதும், பரிசுத்தமானதும், விலையேறப்பெற்றதுமாக இருக்கிறது. விசுவாசிகளாகிய நமக்கு பாவமன்னிப்பையும், மீட்டெடுப்பையும், பிசாசின் மேல் ஜெயத்தையும் தருவது இயேசுவின் இரத்தம் மட்டுமே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருப்பினும், இன்றைய நாட்களில் பல விசுவாசிகள் அறியாமையின் காரணமாகவோ அல்லது தவறான போதனைகளின் விளைவாகவோ, "இயேசுவின் இரத்தத்தைக் கார் மீது தெளிக்கிறேன், வீட்டின் மீது தெளிக்கிறேன், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் மீது தெளிக்கிறேன்" என்று ஜெபிக்கும் வழகத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்துகளிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் தங்கள் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர்கள் இப்படிச் செய்தாலும், இந்த வகையான ஜெபமுறைக்கு வேதாகமத்தில் எந்தவொரு புதிய ஏற்பாட்டு ஆதாரமும் இல்லை என்பதே வேதாகம சத்தியம். தேவனுடைய வார்த்தையின்படி, இயேசுவின் இரத்தம் உலகப் பொருட்களுக்காகச் சிந்தப்படவில்லை; அது மனிதனுடைய ஆத்துமா மீட்படைவதற்காகவே சிந்தப்பட்டது. எனவே, விலையேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தை வேதாகம ந...