இரட்சிப்பின் உறுதி
இரட்சிப்பின் உறுதி 1 யோவா 5:13ல் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற விரும்புகிறான். அதாவது, கிறிஸ்து திரும்பிவரும்போது அல்லது மரணம் வரும்போது அவனோ அல்லது அவளோ பரலோகத்தில் ஆண்டவராகிய இயேசுவோடு இருக்கும்படி அவரிடம் போவதற்குரிய நிச்சயம் (பிலி 1:23) ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். யோவான் தன் முதல் நிருபத்தை எழுதுவதற்கான அவனுடைய நோக்கம் என்னவென்றால் தேவனடைய மக்கள் அந்த நிச்சயத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்பதாகும் (1 யோவா 5:13). ஒரு கடந்த கால மனந்திரும்புதலின் அனுபவம் இரட்சிப்பின் ஒரு உறுதியையோ அல்லது உத்தரவாதத்தையோ அமைத்துக் கொடுக்கும் என்று யோவான் இந்த நிருபத்தில் எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை கவனிக்கவும் தற்போது எந்த முக்கியத்துவமும் பெறாத ஒரு கடந்தகால அனுபவத்தை அல்லது ஒரு விசுவாசத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிற...