திருச்சபை

 திருச்சபை 

(அப். 12:5)


புதிய ஏற்பாட்டுத் திருச்சபையின் தரங்களும், அதிகாரப்பூர்வமான தகுதிகளும் அமைப்பும் அடிப்படைத் திட்டங்களும் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்திலும். புதிய ஏற்பாட்டின் வேறு பல பகுதிகளிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.


1) முதலாவது, முக்கியமாக தேவனோடும், இயேசு கிறிஸ்துவோடும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் உள்ளூர் மக்கள் கூட்டம் ஒரு திருச்சபையாகும். இவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சபையாக ஐக்கியப்பட்டிருப்பார்கள்.

(அப் 13:2; 16:5;20:7; ரோம 16:3,4; 1கொரி 16:19; 2கொரி 11:28; ஏபி 11:6)


2) சபையின் வல்லமையுள்ள சாட்சியின் மூலமாக பாவிகள் இரட்சிக்கப்படுவார்கள்.

மறுபிறப்படைவார்கள், தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறுவார்கள். திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் ஆண்டவருடைய இராபோஜனத்திலும் பங்கு பெறுவார்கள். கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

(அப் 2:41,42; 4:33;5:14; 11:24; 1கொரி 11:26).


3) புது விசுவாசிகளுக்குப் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பது போதிக்கப்பட்டு அதைப் பெற்றுக் கொள்ள வழி நடத்தப்படும். பரிசுத்த ஆவியின் நிறைவின் வெளிப்படையான அடையாளங்களும் வல்லமையும் வெளிப்படுத்தப்படும். 

(அப் 2:39)


4) பரிசுத்த ஆவியின் வரங்கள் செயல்படுத்தப்படும். (ரோம 12:6-8; 1கொரி 12:4-11; எபே 4:11,12) அவற்றில் அதிசயங்களும், அற்புதங்களும், அடையாளங்களும் நோய்களைக் குணமாக்குதலும் அடங்கும்.

(அப் 2:18,43;4:30;5:12;6:8 14:10;19:11;28:8;மாற் 16:18).


5) பரிசுத்தவான்கள் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வதற்கு உதவியாக திருச்சபைக்கு ஐந்து வகையான தலைமைப் பொறுப்புகளை தேவன் தந்துள்ளார்.

(எபே 4:11-12;)


6) விசுவாசிகள் அசுத்த ஆவிகளைத் துரத்துவார்கள்.

(அப் 5:16; 8:7;16:18;19:12; மாற் 16:17).


7) கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் போதித்த ஆதி போதனைகளுக்கு அனைவரும் உண்மையான விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள் .(அப் 2:42;எபே 2:20) கர்த்தருடைய வார்த்தையைப் படித்து, ஆராய்ச்சி செய்யவும், கீழ்படியவும் மக்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள். 

(அப் 6:4; 18:11; ரோம 15:18; கொலோ 3:16; 2தீமோ 2:15).


8) வாரத்தின் முதல் நாள் 

(அப் 20:7; 1கொரி 16:2) சபை மக்கள் ஒன்றாகக் கூடி வந்தனர் 

கர்த்தரைத் தொழுது கொள்வார்கள். எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளாலும், ஆவியின் வெளிப்பாடுகளினாலும் போதிக்கப்படுவார்கள். 

(1கொரி 12:7-11;14:26;1தீமோ 5:17).


9) பரிசுத்த தேவனுக்கு முன்பாகத் திருச்சபையானது பயத்தோடும், நடுக்கத்தோடும், பக்தியோடும் கூடி நிற்கும்.

(அப் 5:11) திருச்சபையின் பரிசுத்தத்திற்காக மக்கள் தீவிர கவனம் செலுத்துவார்கள். பரிசுத்த வேதாகம விசுவாசத்துக்கு உண்மையில்லாத சபை அங்கத்தினர்களையும், போதகர்களையும் கட்டாயப்படுத்தித் தண்டித்துச் சீர்படுத்துவார்கள்.(அப் 20:28; 1கொரி 5:1-13;மத் 18:15)


10) அப்போஸ்தலர்களால் விதிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள், தெய்வ பயம், பக்தி, ஒழுக்கம், இவற்றில் சிறந்தவர்கள் சபை மூப்பர்களாகவும், கண்காணிகளாகவும், அபிஷேகம் பண்ணப்படுவார்கள், அவர்கள் திருச்சபையை மேற்பார்வை செய்வார்கள், தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் பரிசுத்தமாக காத்துக் கொள்வார்கள். (மத்18:15; 1கொரி 5:1-5; 1தீமோ 3:1-7; தீத் 1:5-9;)


11) திருச்சபையின் உலக பிரகாரமான காரியங்களைக் கவனிக்க "உதவிக்காரர்கள்"நியாயமிக்கப்படுவார்கள். (1தீமோ 3:8).


12) திருச்சபை அங்கத்தினர்களிடையே பரிசுத்த ஆவியால் ஏற்படும் ஐக்கியமும், அன்பும், கூட்டுறவும் காணப்படும். 

(அப் 2:42; 44-46;யோவா 13:34) இது உள்ளூர்த் திருச்சபையில் மட்டுமல்ல, பரிசுத்த வேதாகமத்தை விசுவாசிக்கும் திருச்சபைகளிலும் காணப்படுகிறது. அவை கூடி இயங்கும். (அப் 15:1-31; 2கொரி 8:1-8).


13) திருச்சபையானது உபவாசித்து ஜெபிக்கும் சபையாக இருக்கும்.

(அப் 1:14;6:4;12:5;ரோம 12:12;கொலோ4:2;எபே 6:18).


14) தங்களைச் சுற்றியுள்ள மக்களின் கலாச்சாரங்களையும், உலகெங்கும் பரவியுள்ள கருத்துக்களையும் விட்டுவிலகி, விசுவாசிகள் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள் கொள்வார்கள். 

(அப் 2:40;ரோம 12:2; 2கொரி 6:17;கலா 1:4;1யோவா 2:15,16).


15) இந்த உலகம், அதன் வழிகள் இவற்றில் இருந்து துன்பங்களும், பாடுகளும் வரும்.

(அப் 4:1-3;5:40;9:16;14:22). 


16) வேறு தேசங்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்ட திருச்சபையானது நற்செய்திப் பணியாளர்களை அனுப்பும்.

(அப் 2:39; 13:2-4).


ஒரு திருச்சபையின் மக்களிடையே மேற்படி 16 தன்மைகளும் இல்லாதிருந்தால் அது தன்னை ஒரு திருச்சபை என்று அழைக்க தகுதியுள்ளதல்ல... என கட்டுரை விளக்குகிறது. எனவே ஒரு நாள் நான் சளைத்து போகாதபடிக்கு முயற்சி செய்து கொண்டே இருக்கும் நிச்சயமாக இந்த 16 அம்சங்களும் நம் சபையில் அல்லது ஊழியத்தில் பிரயாசப்படுவோம். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென். 




Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.