இருதயம்

 "இருதயம்"


"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்றுப் புறப்படும்."

(நீதிமொழிகள் 4:23)


*இருதயத்தைக் குறித்த விளக்கம்.*


பொதுவாக தலையும் அதற்குள் இருக்கும் மூளையும்தான் மனித செயல்களின் மையமென்றும், அவைகளைக் கட்டுப்படுத்துகின்றன என்றும் இக்காலத்து மக்கள் கூறுகின்றனர். 


ஆனால் பரிசுத்த வேதாகமம் இருதயம் தான் மையமானது என்றும் "அதிந்தத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும்",

(நீதி 4:23; லூக் 6:45) என்றும் கூறுகின்றது. பரிசுத்த வேதத்தின் படி மனித புத்திக் கூர்மை, உணர்ச்சி, செயல்திறன், இவை அனைத்தும் மனிதனது இதயத்திலே மொத்தமாக அமைந்துள்ளது. 

(மாற் 7:20-23) வாசிக்கவும். 


1) இருதயம் நமது புத்திக் கூர்மையின் மையமாகும். மனிதர்களின் காரியங்களை இருதயத்தில் அறிகின்றனர். 

(உபா 8:5)

இருதயத்தில் ஜெபிக்கின்றனர். 

(1சாமு 1:12-13), தங்கள் 

இருதயத்தில் தியானிக்கின்றனர். 

(சங்கம் 19:14),

தேவனுடைய வசனத்தை இருதயத்தில் மறைத்து வைக்கின்றனர். (சங் 119:11),

தங்கள் இருதயங்களில் திட்டங்களை உருவாக்குகின்றனர். 

(சங்கம் 140:2),

வார்த்தைகளை இருதயத்தில் பத்திரப்படுத்துகின்றனர். 

(நீதி 4:21)

இருதயத்தில் விசுவாசிக்கின்றனர். 

(ரோமர் 10:9)

இருதயத்தில் நினைக்கின்றனர். 

(மாற் 2:8)

இருதயத்தில் சந்தேகப்படுகிறார்கள். 

(மாற் 11:23)

இருதயத்தில் சிந்திக்கின்றனர். 

(லூக் 2:19)

இருதயத்தில் பாடுகின்றனர்.

(எபே 5:19)

மனதில் உருவாகும் இக்காரியங்கள் அனைத்தும் இருதயத்தோடு இணைந்தவை ஆகும். 


2) நமது உணர்ச்சிகளின் இருப்பிடமும் இருதயமே. 

பரிசுத்த வேதம் மன மகிழ்ச்சியான இருதயத்தைப் பற்றிக் கூறுகிறது.(யாத் 4:14)


அன்புள்ள இருதயம். 

(உபா 6:5)

பயமுள்ள இருதயம். 

(யோசு 5:1)

தைரியமான இருதயம். 

(சங் 27:14)

மனந்திரும்பும் இருதயம்.

(சங் 51:17)

கவலையுள்ள இருதயம்.

(நீதி 12:25)

கோபமுள்ள இருதயம்.

(நீதி 19:3)

உயிர்பிக்கப்பட்ட இருதயம். 

(ஏசா 57:15)

கதறுகின்ற இருதயம். 

(எரே 4:19;ரோமர் 9:2)

பூரிப்பான இருதயம்.

(ஏரே 15:16)

புலம்புகின்ற இருதயம். 

(புல 2:18)

தாழ்மையான இருதயம். 

(மத் 11:29)

பொங்குகின்ற இருதயம். 

(லூக்கா 24:32)

கலக்குகின்ற இருதயம். 

(யோவான் 14:1)

மேற் கூறிய இருதயத்தின் செயல்கள் அனைத்தும் அடிப்படைத் தன்மையில் நமது உணர்ச்சிகளாகும்.


3) இறுதி இருதயம் மனித சித்தத்தின் உறைவிடம் ஆகும். 


தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ள மறுக்கும் கடினமுடைய இருதயத்தைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம்.(யாத் 4:21).


தேவனுக்கு ஒப்படைக்கும் இருதயம். (யோசு 24:23),

ஏதாவது செய்யத் துடிக்கும் இருதயம்.(2நாளா 6:7),

தேவனைத் தேடுவதற்கு தன்னை அர்ப்பணிக்கும் இருதயம். (1நாளா 22:19),

தீர்மானங்களைச் செய்யும் இருதயம்.(2நாளா 6:7),

ஆண்டவரிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பும் இருதயம். 

(ரோமர் 10:1)

இந்த கிரியைகள் அனைத்தும் இருதயத்தில் மனிதனுடைய சித்தத்தின்படி நடைபெறுகிறது என்பதை நாம் வேதத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நாளைய தினத்தில் தேவனற்ற இருதயத்தைப் பற்றி பார்ப்போம். 

தொடர்ந்து வாசியுங்கள் மற்றவர்களுக்கு பார்வேர்ட் பண்ணுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோடரன் 

சிலுவை ராஜா





Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை