பெண்களுடைய வீடுகளில்
எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற "பெண்பிள்ளைகளுடைய வீடுகளில்" இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
(2 தீமோத்தேயு 3:7)
திருச்சபைகளில் தொடர்ந்து விபச்சார பாவங்கள் பெருகிக்கொண்டே இருக்கிறது.
கிட்டத்தட்ட லோத்துவின் காலத்துக்கு வந்து விட்டோம்.
(லூக் 17:28)
தேவனுடைய பிள்ளைகள் ஊழியர்களை அறிந்து பழக வேண்டும், (எபி 13:7)
*கடந்த நாளில் ஒரு பிரபல பாடகர் ஜான் ஜெபராஜ் , மற்றும் நித்தியம் டிவி
இந்நாட்களில் சார்லஸ் ரோ* பயங்கரமான மிகவும் கேவலமான வீடியோக்கள் பரவி கிறிஸ்துவின் வாசனையை கெடுத்துக் கொண்டிருக்கிறது, திருச்சபைகள் பயங்கரமான துர்நாற்றமெடுத்து நம்மையும் வாந்தி பண்ண வைக்கிறது.
இந்நிலையை சிந்தித்துப் பாருங்கள்.
காரணம் என்ன ?
Fashion worship songs
ஒருவிதமான நடனம். பாடலுக்கு முதலிடம் வசனத்திற்கு முதலிடம் இல்லை. அதாவது சத்தியம் இல்லை.
*ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்லுகிறார்.*
1 தீமோத்தேயு 2:4 இல்
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், *சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.*
தேவனுடைய பிரதான சித்தம் அவர்கள் சத்தியத்தை அறிகிற அறிவை அடைய வேண்டும். சத்தியங்கள் இன்றைக்கு இல்லை சபையில்....
பாடல் சத்தம், துதி சத்தம், குதி சத்தம், நடன சத்தம், விசில் சத்தம், இழவு வீட்டு சத்தம், குறைவு இல்லை.
ஆனால்,
ஒரு மனிதனை விடுதலையாக்குகிற சத்தியம் சபையில் இல்லை.
இயேசு கிறிஸ்து சொன்னார்.
யோவான் 8:32 இல்
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
உம்முடைய வசனமே சத்தியம்.(யோவான் 17:17)
ஆகையால் மனதார சத்தியத்தை பேசுங்கள்.
(சங்கி 15:2) சத்தியத்தை பேசும்போது மதிப்பிருக்காது, மரியாதை இருக்காது, பிசாசை பார்த்தது போல பார்ப்பார்கள்,
(கலா 4:16)ஆனால், பரலோகம் சத்தியத்தை பேசுகிறவனையே ஏற்றுக் கொள்ளும்.
அன்பானவர்களே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட விதத்தில் ஊழியர்களோடு உங்கள் மனைவியையோ உங்கள் பெண் பிள்ளைகளையும் பேசுவதற்கும், ஜெபிப்பதற்கும் அனுமதிக்காதீர்கள்.
யாரையும் இங்கு நம்புவதை தவிர்க்கவும்.
பிரசங்க கலையை கற்றுக்கொண்டு, திறமையாக பேசுகிறார்களே ஒழிய தேவனுக்கு அஞ்சி இவர்கள் நடப்பது இல்லை.
எவ்வளவு பெரிய பரிசுத்தவான் என்று நீங்கள் நினைத்தாலும் அவனுக்குள் இச்சை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக பிசாசு துரத்துகிறவர்கள், பில்லிய சூனிய கட்டு உடைக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்கள், இவர்களும் உங்களை தொட்டு ஜெபம் பண்ண அனுமதிக்காதீர்கள்.
நான் இந்த ஊழியத்துக்கு வந்து பார்த்த விதத்தில் இப்படிப்பட்டவர்களே அநேக பெண்கள் விஷயத்தில் விழுந்தவர்கள் ஆவர்.
ஆகையால் ஜாக்கிரதையா இருங்கள்.
ஜாக்கிரதையாக இருங்கள். கள்ள ஓநாய்கள் ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்டிருக்கிறது,
கர்த்தர் தான் உங்களை பாதுகாக்க வேண்டும்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments