தேவனற்ற இருதயம்

 தேவனற்ற இருதயத்தின் நிலை.


ஆதாமும் ஏவாளும் சாத்தானின் சோதனையைப் பின்பற்ற விழைந்து நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்த போது, அத்தீர்மானம் அவர்களது இருதயத்தைப் பெரிதும் பாதித்தது.

அவர்களது இருதயம் தீமையினால் நிறைந்தது. எனவே தற்போது ஏரோமியாவின் சாட்சியின் படி "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,  அதை அறியத்தக்கவன் யார் ?" (எரே 17:9) எரேமியாவின் கண்டுபிடிப்பை இயேசு கிறிஸ்து உறுதி செய்தவுடன் தேவனுடைய சமூகத்தில் ஒரு மனிதனைத் தீட்டானவனாக ஆக்குவது அவன் ஒரு சடங்காச்சாரமான ஒரு கற்பனையை மீறுவதனால் ஏற்படுவதில்லை. 

இருதயத்தில் மறைந்திருக்கும் துன்மார்க்கத்திற்கு செவி கொடுத்து பொல்லாத சிந்தனை, விபச்சாரம், வேசித்தனம், கொலை பாதகம், களவு, பொருளாசை, துஷ்டத் தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷனம், பெருமை, மதி கேடு, இவற்றை செய்வதே பாவமென்று கூறினார்.

(மாற் 7:21-22) இருதயத்தில் மறைந்திருக்கும் பாவத்தைப் பற்றி குறிப்பிட்ட இயேசு கிறிஸ்து, கோபம் என்னும் பாவம் கொலைக்கும் சமமானது என்றும் 

(மத் 5:21-22) இச்சை என்னும் பாவம் வேசித்தனத்தைப் போன்றது என்றும் கூறினார். 

(மத் 5:27-28; யாத் 20:14)


தீமையைச் செய்யத் துணியும் இருதயமானது கடினமாகும் அபாயம் உண்டு.

தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய ஒரு மனிதன் தொடர்ந்து மறுத்து, தனது சொந்த துன்மார்க்க வழியிலே நடக்கத் துணிந்தவனாயின், தேவன் அவனுடைய இருதயத்தை கடினமடைய அனுமதிப்பதுடன், பரிசுத்த வேதத்தின் மேல் அவனது வஞ்சையையும், பரிசுத்த ஆவியின் மேலுள்ள தாகமும் அழிந்து விடுகின்றது.

(யாத் 7:3;எபி 3:8)

பார்வோனின் இருதயம் இப்படி கடினப்பட்டதை வாசிக்கிறோம். 

(யாத் 7:3; 13, 22-23; 8:15,32; 9:12;

10:1; 11:10; 14:17).


ரோம அரசாட்சியிலும் இந்தக் கடின இருதயம் தொடர்ந்ததை பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான்.

(ரோம 1:24,26,28).

இதே நிலை அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியிலும் தொடரும் எனக் கூறுகிறான்.

(2தெச 2:11,12)

இருதயத்தை கடினப்படுத்தக் கூடாது என எபிரெயர் நிரூபத்தை எழுதியவர் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறார்.

(எபி 3:8-12) தேவ சித்தத்தை தொடர்ந்து தள்ளிவிடும் ஒருவனுக்கு கடின இருதயமே மிஞ்சும். 


*புதிதாக்கப்பட்ட இருதயம்.*


பாவம் நிறைந்த இருதயத்துக்கு தேவனளிக்கும் பதில் 'புதிதாக்கப்படுதலாகும்' இது பாவத்திலிருந்து மனந் திரும்பி, பிதாவாகிய தேவனிடத்தில் வந்து இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது உருவாகின்றது. 


1)  *புதிதாக்கப்படுதல் இருதயத்தில் நிகழ்கிறது.* 

இருதயத்தில் மனஸ்தாபமடைந்து இயேசு கிறிஸ்துவை தேவன் என்று அறிக்கை விட்டு பாவ மன்னிப்படைபவர்கள் 

(ரோம 10:9) புதிய இருதயத்தை தேவனிடத்திலிருந்து பெறுகிறார்கள். 

(சங் 51:10; எசே 11:19).


2)  *ஆவிக்குரிய பிறப்பை அனுபவிக்கும் மக்களின் இருதயத்தில் தேவனை நேசிக்கும், அவருக்கு கீழ்ப்படியும் வாஞ்சையை தேவன் உருவாக்குகிறார்.*


 இருதயத்திலிருந்து புறப்பட வேண்டிய அன்பைக் குறித்து தேவன் மீண்டும் மீண்டும் தமது பிள்ளைகளிடம் வலியுறுத்துகிறார். 

(உபா 4:29; 6:6)

இவ்வாறு தேவனிடம் கொள்ளும் அன்பும், பக்தியும், அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து நம்மை பிரிக்க முடியாது.

(சங் 119:34,69,112)

இயேசு கிறிஸ்து நம் முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், தேவனிடத்தில் அன்பு கூறுவதிலும், நமது அயலாரிடத்தில் அன்பு கூறுவதிலும் எல்லா கற்பனைகளும் அடங்கி இருக்கிறது என்றார். 

(மத் 22:37-40).


3)  *கீழ்படிதலின் மிக முக்கிய அம்சம் நேசமாகும்.*

பல வேலைகளில் தேவனுடைய பிள்ளைகள் கீழ்ப்படிதலுக்கு பதிலாக வெளிப்படையான மதச் சடங்குகளை நடத்துகின்றனர். 

(பண்டிகை நாட்கள், காணிக்கை, பலி போன்றவை) உண்மையான அன்பை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. 

(ஏசா 1:10-17; ஆமோஸ் 5:21-26;

மீகா 6:6-8; உபா 10:12)

தேவனைச் சேவிக்கும் வாஞ்சையின்றி வெளிப்புறத்தில் காட்டப்படும் சடங்குகள் மாய்மாலமென்று

தேவனால் கண்டிக்கப்படுகின்றன. 

(மத் 23:13-28; லூக்கா 21:1-4)


4) மறுஜென்மம் அடைந்த விசுவாசிகளின் இருதயத்தில் பல ஆவிக்குரிய செயல்முறைகள் நடைபெறுகின்றன. அவர்கள் முழு இருதயத்தோடும் தேவனைத் துதிக்கின்றனர்.

(சங் 9:1)

இருதயத்தில் தியானிக்கின்றனர். 

(சங் 19:14)

இருதயத்திலிருந்து தேவனிடத்தில் கதறுகின்றனர். 

(சங் 84:2)

முழு இருதயத்தோடு கர்த்தரை தேடுகின்றனர். 

(சங் 119:2,10)

இருதயத்தில் தேவ வார்த்தைகளைப் பதித்து வைக்கின்றனர்.

(சங் 119:11)

முழு இருதயத்தோடும் தேவனை நம்புகின்றனர்.

(நீதி 3:5)

இருதயத்தில் ஊற்றப்பட்ட தேவ அன்பை அனுபவிக்கின்றனர்.

(ரோம 5:5)

இருதயத்தில் தேவனைப் பாடுகின்றனர்.

(எபே 5:19;கொலோ 3:16).


உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து தேவ சமூகத்தில் சரி செய்து அவர் விரும்புகிறதை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தமிழ்நாடு ,இந்தியா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை