பழைய ஏற்பாடு 4
220 ஆவது தொடர்ச்சி
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றிய ஒர் கண்ணோட்டம்.
5) பாவம், தீமை இவைகளை குறித்த மேலான உணர்வு தீர்க்கதரிசிகளுக்கு உண்டாயிருந்தது.
(எரே 2:12-13,19; 25:3-7;ஆமோ
8:4-7;மீகா 3:8)
கடின குணம், தீய செயல்கள், ஒழுக்கக்கேடு, அநீதி இவைகளைக் கண்டால் அவர்கள் கொதித்தெழுந்தனர். தேவ கட்டளையினின்று சிறிதளவு அகல்வது போல மக்களுக்குத் தெரிகின்ற காரியங்கள் தீர்க்கதரிசியின் பார்வையில் பெரிய அழிவாகத் தெரிந்தது. கண்டுகொள்ளாமல், ஒத்துப் போதல், நடிப்பு, சாக்குபோக்கு, இவைகளை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை,
(ஏசா 32:11; எரே 6:20; 7:8-15,21-23; ஆமோ 4:1;6:1)
தேவனுக்கு நீதியின் மேல் உள்ள பிரியத்தையும், மீறுதலின் மீதுள்ள வெறுப்பையும் குறித்து வேறு யாரையும் விட தெளிவாக தீர்க்கதரிசி போதித்தான்.
(எபி 1:9)
6) தேவனுடைய மக்களின் ஆழமற்ற மேலோட்டமான பரிசுத்த வாழ்வை எதிர்த்துப் பேசியதுடன், நியாயபிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் மனப்பூர்வமாய் கீழ்படியும்படிக்கு ஜனங்களை தீர்க்கதரிசி ஊக்குவித்தான்.
அவன் தன்னை முழுவதும் கர்த்தருக்கு அர்ப்பணித்ததுடன் அரைகுறை ஒப்புக்கொடுத்துதலையும், வெதுவெதுப்பான வாழ்வையும் எதிர்த்தான். தேவ மக்களின் மத்தியில் தேவனுடைய ராஜ்ஜியமும் அவரது நீதியும் கொஞ்சம் கூட குறையாமல் முழுமையாக வெளிப்பட வேண்டும் என்றான்.
7) எதிர்காலத்தைக் குறித்த தரிசனம் தீர்க்கதரிசிக்கு உண்டாயிருந்தது. இது தண்டனை, அழிவு வார்த்தைகள் மூலம் வெளிப்பட்டன.
(ஏசா 63:1-6; எரே 11:22-23;13:15-21;ஆமோ 5:16-20,27) மட்டுமின்றி புதுப்பித்தல், சரி படுத்துதல் எனும் தரிசனங்களும் இதனை உணர்த்துகின்றன.
(உதாரணமாக, ஏசா 61-62; 65:17-66:24; எரே 33; எசே 37) மேசியாவின் வருகையைப் பற்றியும் பல தீர்க்கதரிசனங்கள் கூறியுள்ளன.
8) கடைசியாக தீர்க்கதரிசி ஒரு தனிமையான மனிதனாகவும், தேவனை நேசிக்கும் புருஷன் ஆகவும் காணப்பட்டான்.
(எரே 14:17-18; 20:14-18;ஆமோ 7:10-13; யோனா 3-4)
பாவத்தில் வாழ்கின்ற தேவ மக்களுக்கு சமாதானம், செழிப்பு, பாதுகாப்பு இவற்றை வாக்களிக்கின்ற பொய்தீர்க்கதரிசிகளின் மூலமாக இவர்கள் பல வேலைகளில் துன்புறுத்தப்பட்டனர்.
(எரே 15:15; 20:1-6;26:8-11;ஆமோ 5:10; மத் 23:29-36;அப் 7:51-53) அதே வேளையில் தீர்க்கதரிசிகள் தேவ மனிதர்களாய் இருந்ததால் அவர்களது பண்புகளையும், செய்திகளையும் மக்களாலும், தலைவர்களாலும் தள்ளிவிட முடியாது. (எசே 3:8-11)
தமிழ்நாட்டு தீர்க்கதரிசிகள்
தமிழ்நாட்டைச் சுற்றிவர வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஆசீர்வாதம். தமிழ்நாட்டில் இவர்தான் ஆட்சிக்கு வருவார். காசு பணம் சம்பாதிப்பதற்காக, பெயர் புகழுக்காக இரட்சிக்கப்படாத நடிகைகள் துணை நடிகைகள் கொண்டு வந்து டிவி சீரியல் சினிமா படம் எடுத்து பிலேயாம் தீர்க்கதரிசி போல இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளே டிவி சீரியல் மூலமாக அனுப்பி விடுகிறான்.
இதையெல்லாம் கண்டிக்கும்போது என்னை போன்ற தீர்க்கதரிசிகள், கள்ள தீர்க்கதரிசிகளுக்கு துணை போகும் மக்களாலும் துணை போகும் ஊழியர்களாலும் பாதிக்கப்படுவது அநேகருக்கு தெரியாது.
இவன் மூக்குப்பொடி விட்டால் என்ன?
விபச்சார விடுதியில் நடனம் ஆடினால் என்ன?
டாஸ்மார்க் பார் குத்தகைக்கு எடுத்து நடத்தினால் என்ன ?
பணத்தை வட்டிக்கு விட்டால் என்ன?
பொய் தீர்க்கதரிசனம் சொன்னால் என்ன ?
வறுமையை செழிப்பு என்று சொன்னால் என்ன ?
எல்லாமே தேவன் தான் எனக்கு சொன்னார் என்று சொல்லி ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளக் கூடியவன் இந்த கள்ள தீர்க்கதரிசி.
அநேக ஊழியர்கள்
இவன் கொடுக்கும் எலும்பு துண்டுகளுக்காக,
அதாவது சபைக்கு தேவையான பொருட்களை கொடுப்பதினால் அல்லது கட்டிடம் கட்டிக் கொடுப்பதினால் கள்ள தீர்க்கதரிசிகளுக்கு ஜே போடுகிறார்கள். ஆனால் ஒன்று அறியாமல் போனார்கள், அவனுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட அக்கினி கடலில் இவர்களும் தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விட்டார்கள்.
ஒரு விதத்தில் கிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள் என்பதே உண்மை.
இவைகளத்தான் தீர்க்கதரிசிகள் எச்சரித்தார்கள்.
தொடர்ந்து வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
நாளை தொடரும்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments