அவர்கள் பிதாக்கள்

 ..... அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

(லூக்கா 6:23)


பழைய ஏற்பாட்டு மக்கள் பல வேளைகளில் தீர்க்கதரிசிகளையும், அவர்களுடைய செய்திகளையும் புறக்கணித்தார்கள். 

(1இரா 19:10;மத் 5:12;23:31,37;அப் 7:51,52);


1) இன்றைய திருச்சபைகள் தேவன் தங்களுக்குள் தீர்க்கதரிசிகளை அனுப்பி, 

(1கொரி 12:28;எபே 4:11)

தலைவர்களையும், மக்களையும் வேத வசனங்களுக்கு ஒத்தாற் போல் நீதியும், உண்மையும் வாழவும், உலகத்திலிருந்து பிரிந்து வாழவும் அழைக்கிறார் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

(வெளி 2,3 அதிகாரங்களை வாசிக்கவும். 


2) இஸ்ரவேலர் அந்த தேவனையும், அவருடைய வார்த்தைகளையும் விட்டுவிட்டு, அதன் பலனாக தேவனுடைய இரட்சிப்பையும், ஆசீர்வாதங்களையும் இழந்தது போல, இன்றைய திருச்சபையும் அதே நிலையை அடையலாம். அதே நேரத்தில் அவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய நற்செய்திக்குச் செவி கொடுத்துப் பாவத்துக்கு விலகி, ஆண்டவருக்கு உண்மையுடன் தங்களை அர்ப்பணித்தால், அவர்கள் தொடர்ந்து தேவனுடைய மக்களாயிருப்பார்கள். தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகளைப் புறக்கணிக்கும் திருச்சபைகள் தேவனால் புறக்கணித்துத் தள்ளப்படும்.

(லூக் 13:34,35; வெளி 2,3, அதிகாரங்கள்) 


3) சாத்தான் துணிகரமாகத் திருச்சபைகளுக்குள் கள்ள போதகர்களை அனுப்புவான்.

(மத் 13:24-30; 36-43) இவர்கள் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு சமமான அதிகாரம் உண்டு என்று கூறி, தாங்கள் கூறும் உரைகள் தவறற்றவை என்றும், திருச்சபைகள் அவர்களைத் தண்டிக்க முடியாது என்றும் கூறுவார்கள். இத்தகைய கள்ள போதகர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

அல்லது விலக வேண்டும் 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை