விருதுநகர்
பொதுவான கருத்துக்கள்.
மீடியாவில் விருதுநகரை சேர்ந்த சுவிசேஷகர் டேவிட் கணேஷ்
திருச்சியில் பலதரப்பட்ட சபைகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வாலிபர்கள் மத்தியில் ஒரு ஜெப குறிப்பை அறிமுகப்படுத்துகிறார்.*
*அதாவது சாப்பாடு சாப்பிடும் போது, அதை நன்றாக பிணைந்து, கையில் உருண்டையாக எடுத்து, அதை வாயாண்டை கொண்டு போகும்போது, மோகன் சி லாசரஸ் நன்றாக இருக்க வேண்டும் என்றும், 50,000 வாலிபர்கள் திருச்சியில் கூடிவர வேண்டும் என்றும், அதன் செலவு 50 லட்சத்தை சந்திக்கவும் ஒரு லட்சம் கொடுப்பவர் 50 பேரரை தேவன் ஏற்படுத்தித் தரும்படியாகவும் செய்கையின் மூலம் விளக்கிய ஒரு ஷாட் வீடியோவாகும்.*
எனக்கு ஒன்றுமே புரியவில்லை, *கிறிஸ்தவத்தில் என்ன நடக்கிறது என்பதையும் அநேக ஊழியர்கள் அறிந்து கொள்ள விரும்பவில்லை.
ஆக எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது போல என்னால் இருக்க முடியவில்லை.*
ஒவ்வொரு திருச்சபையில் இருக்கும் வாலிபர்கள்
அந்தந்த சபைக்கு தாவீது போன்றவர்கள், கோலியாத்தை வீழ்த்தக் கூடியவர்கள். (1சாமு 17:50)
பொல்லாங்கனை ஜெயிக்கிற
பலவான்கள்.(1யோவா 2:13,14)
எசாயா 3:4 ல் வாலிபர்களை அதிபதிகளாக்குவேன் என்று எழுதப்பட்டிருக்கிறது.
வேதத்தில் எத்தனையோ வாலிபர்களை கர்த்தர் உயர்த்திருக்கிறார்.
அப்படிப்பட்ட வாலிபர்களை பல ஆயிரங்களை கூட்டிக் கொண்டு போய் இழிவான ஆகாயத்திற்காக, பெயர் புகழுக்காக, அந்தக் கள்ள ஓநாயோடு செல்பி எடுப்பதற்கும் பாபிலோன் ராஜாவிடம் அடமானம் வைப்பது சரிதானா ?
ஒவ்வொரு சபை வாலிபர்களுக்கு இந்த டேவிட் கணேஷ் என்ன சொல்லி இருக்க வேண்டும்.
*நீ சாப்பிடும் போதெல்லாம் உன்னை ஆவிக்குரிய நன்மைகளால் போசிக்கும் உன் ஊழியர்களுக்காக ஜெபம் பண்ணு.*
*உன் சபையில் இன்னும் அநேக வாலிபர்களை தேவன் தரும்படியாகவும் அல்லது நீ ஆதாயப்படுத்த வேண்டும் என்று ஜெபிக்க சொல்லி இருக்கலாமே.*
*உன்னுடைய சபை இன்னும் அபார வளர்ச்சி அடைவதற்கும், ஊழியத்திற்கு தேவையான பண தேவைகள் , பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கலாமே.*
*அதுபோல எங்கள் ஊழியங்களுக்காகவும் நீங்கள் ஜெபம் பண்ணுங்கள் , உங்கள் காணிக்கைகளை தாருங்களென்று சொல்லி இருக்கலாமே.*
ஏன் அப்படி சொல்லவில்லை ?
*அரசியல்வாதி சீமான் சொல்வது போல் சொல்லுகிறேன்.
ஆத்துமாதாயம் ஊழியம் என்னுடையது.
சபை என்னுடையது.
மந்தை என்னுடையது. வாலிபர்களினுடையது.
ஆனால் இவர்கள் ஒரு உழைப்பு இல்லாமல், ஒரு சொட்டு வேர்வை சிந்தாமல், நான் வளர்த்த ஆடுகளின் பாலை குடிப்பதற்கு அவ்வளவு ஆவலா?*
*உனக்கு வெட்கமா இல்லை.*
அவனோடு கூட மேடையில் உட்கார்வதற்கும், அவனோடு கூட கை குலுக்குவதற்கும்,
உன்னை அறிமுகம் செய்து கொள்வதற்கும், உன் சபை வாலிபர்களை அவர்களிடத்தில் அடமானம் வைக்கிறாயே ஊழியர்களே உங்களுக்கு இது வெட்கமாக தோன்றவில்லை.
*வேதத்தை புரிந்து கொள்ளாத ஊழியர்கள்,
கள்ள ஊழியர்களை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாத சிலர் நாங்கள் ஊழியர்களை குற்றப் படுத்த மாட்டோம் குறை சொல்ல மாட்டோம் என்று சொல்லி தன்னையும் கெடுத்துக் கொண்டு சபையும் கெடுத்துக்கொண்டு ஒருநாள் அழியப் போகிறார்கள்.
நான் இன்றைக்கு தைரியமாக சொல்லுவேன்.
எனக்கு பணம் சம்பாதிக்க எவனும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஊழியத்தில் எவனோடு கை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும்.
இந்த 20 ஆண்டு காலமாக இந்த ஊழியத்தில் உண்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே என் உபதேசத்தை எனக்கு நானே போதித்துக் கொண்டிருக்கிறேன்.
மற்றவர்களுக்கு இதை ஃபார்வேர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
மற்ற வெளி கூட்டங்களில் இதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறேன் ,
ஊழியத்தை தேவனுக்காக நான் செய்கிறேன்,
என்னுடைய வளர்ச்சிக்காக அல்ல
வளர்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது.
ஆனால் உண்மையாய் இருப்பதற்கு ஒரே வழி சத்தியத்தை மனதார பேசுவது.
ஆகையால் இழந்து போகாதே உன் சபை வாலிபர்களை.
(அப்போஸ்தலர் 20:28-30)
*ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.*
நான் போனபின்பு *மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.*
*உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.*
இந்த ஒரு வசனத்தை புரிந்து கொண்டால் போதும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
சிலுவை ராஜா
சென்னை குன்றத்தூர்.
Comments