கிறிஸ்துவின் போதனையை
கிறிஸ்துவின் போதனையை மீறி நடக்கிற சில சுவிசேஷகர்கள்.
(2யோவா 1:9) கிறிஸ்துவை உடையவர்கள் அல்ல.
ஒரு சிலர் சகோ, சிலுவை ராஜா என்பவர் ஜெபத்திற்கு விரோதமாக பேசுகிறார் எழுதுகிறார் என நினைக்கிறார்கள்.
பொதுவாக இந்த பதிவை வாசிக்கிறவர்கள்,
நான் தேவனுக்கு மட்டுமே உண்மையாக இருப்பேன், அவருடைய பரிசுத்த வேதாகமத்தின் மூலமாக சொல்லப்பட்ட உபதேசத்தை மாத்திரமே கை கொள்ளவும் போதிக்கவும் முயற்சிப்பேன்,
என வைராக்கியமாய் இருக்கிறவர்களுக்கு மாத்திரமே விளங்கும்.
வேதத்தில் எவருமே ஜெபிக்காத, ஒரு ஜெபத்தை ஏறெடுப்பது சரியானதா ?
ஆபிரகாம்,(ஆதி 18:20-32) மோசே,(யாத் 32:32,33)
தாவிது,( 2சாமு 24:17;1நாளா 21:17)
எஸ்தர் (எஸ் 3:13;4:8,16;)
இன்னும் சில பரிசுத்தவான்கள் மட்டுமல்ல,
பவுல் அப்போஸ்தலன்
(ரோம 10:1 இல்) இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே ஜெபமாயிருந்தது.
நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தம்முடைய சொந்த ஜனங்களுக்காக கண்ணீர் விட்டார்.
(யோவா 11:35)
இயேசு கிறிஸ்து உலகத்துக்காக ஜெபம் பண்ண வில்லை, தம்மை பின்பற்றினவர்களுக்காக மாத்திரமே ஜெபம் பண்ணினார்.(யோவா 17:9)
இப்போதும் நமக்காகத் தான் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார்.(1யோவா 2:1)
இதை பவுல் சொல்லும்போது சபையை பற்றிய கவலை என்று எழுதுகிறார்.
திருச்சபைக்காண ஜெபங்கள் பெருக வேண்டும்.
தேவனுடைய சித்தமும் அதுவே (ரோமர் 8:26,27)
தேசத்திற்காக ஜெபம் பண்ண கூடாதா ?
உங்களுடைய அழைப்பு எங்கே ? எந்த இடத்தில் ?அதற்கு வேண்டிய கிருபைகளையும் வல்லமைகளையும் தேவன் தரும்படியாக ஜெபிக்கலாம்.
(அப் 4:30).
இந்த உலகத்திற்கு அவசர தேவை சுவிசேஷமே அறிவிக்கப்பட வேண்டும்.
(மாற் 13:10;16:15;அப் 8:4)
சுவிசேஷத்தை அறிவிப்பதற்குத் தான் பரிசுத்த ஆவியானவர் நம்மில் தங்கியிருக்கிறார்.(லூக் 4:18)
பரம அழைப்பை பெற்றப் சுவிசேஷர்கள்
இயேசுவை கவனித்துப் பார்க்க வேண்டும். (எபி 3:1)
ஒரு சில சுவிசேஷர்கள் இயேசு கிறிஸ்துவை போல்
(மத்4:17;9:35;15:21)
பட்டணங்கள், கிராமங்கள் அலைந்து திரிய முடியவில்லை (அப் 10:38)
கிறிஸ்துவின் பெயரால்,
பெயர், புகழ், ஆஸ்திகள், ஐஸ்வர்யங்கள் திரளாய் பெருகிவிட்டதால்
தன் பணப் பலத்தால் திருச்சபைகளின் தேவைகளில் கொஞ்சம் உதவி செய்து அவர்களை தன்வசப்படுத்தி ஜெபமே ஜெயம் என தாதக மந்திரத்தை பயன்படுத்தி ஜெபம் ஜெபம் என சொல்லி ஒட்டுமொத்த ஜனங்களையும் தன் பக்கமும் திருப்பிக் கொண்ட ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாய்கள்.
*(இந்த சுவிசேஷகர்கள் எந்த சபையில் ஐக்கியமாகயிருந்து எந்த சபையில் திருவிருந்து எடுக்கிறார்கள். எந்த திருச்சபையின் மூலமாக இவர்கள் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்கள்.
சகோதரர் மோகன் சி லாசரஸ், பால் தினகரன், இவர்களைப் போல எவரானாலும் வெளிப்படையாக பதில் சொல்லட்டுமே )
வேதத்தை வாசிக்கும், மற்றும் போதிக்கும் ஊழியர்கள் கூட இந்த நூதனமான ஜெபத்திற்கு அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து செய்கிறவர்களை உற்சாகப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.
அழிந்து போகின்ற ஆத்மாக்களுக்காக ஜெபம் பண்ண கூடாதா ?
உனக்கு பாரம், இரக்கம் இல்லையா எனக் கேள்விகள் அதிகம்.
ஆண்டவரைப் பற்றி அறியாத கேள்விப்படாத மக்களுக்கு ஜெபம் செய்தால் என்ன நடக்கும் அல்லது என்ன நடக்கப்போகிறது? ஒன்றுமே நடக்காது என்பது எனது பதில்.
இயேசு கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்டவனுக்காக ஜெபிக்கலாம்.
ஒரு அவிசுவாசிக்காக ஜெபித்தால் அவன் விசுவாசியாக மாறிவிடுவானா ?
இரட்சிக்கப்பட்டு விடுவானா ?
இரட்சிப்பின் வசனமாகிய சுவிசேஷத்தை கேட்டு விசுவாசிக்கும் போது தான் இரட்சிப்பு உண்டாகும்
(எபே 1:13)
ஜெபத்தால் ஒருவன் இரட்சிக்கப்பட்டு விட்டாள் இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மதக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவருடைய சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை ஆகையால் இந்த வேறொரு சுவிசேஷத்தை, வேறொரு ஜெபத்தை, வேறொரு இயேசுவை அறிவிக்கிற எவனும் சபிக்கப்பட்டவன் என்று வேதம் சொல்லுகிறது.
ஆகையால் வேதத்தின்படி நடந்து கர்த்தருக்கு பிரியமானதை செய்வோம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
Comments