வாக் வித் ஜீசஸ்
பொதுவான சிந்தனைக்கு.
வாக் வித் ஜீசஸ்
(Walk with Jesus )
நிகழ்ச்சியை
பார்க்கிறவர்கள் பாக்கியவான்களா ?
அல்லது,
இயேசு கிறிஸ்துவின் வசனத்தின்படி நடக்கிறவர்கள் பாக்கியவான்களா ?*
லூக்கா 11 ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, *ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் 'பாக்கியமுள்ளவைகளென்று' சத்தமிட்டுச் சொன்னாள்.*
அதற்கு அவர்: அப்படியானாலும், "தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்."*
அந்த ஸ்திரீ சொன்னது போல், சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களும் Walk with Jesus நிகழ்ச்சியை பார்க்கிற நீங்கள் பாக்கியவான்கள் என்கிறார்.*
ஆனால் இயேசு கிறிஸ்து சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தையை காத்துக் கொள்ளுகிறவர்களே "அதிக பாக்கியவான்கள்" என்கிறார்.
ஒரு நிகழ்ச்சியை பார்த்து நாம் ஒருநாளும் பாக்கியவான்களாக முடியாது. ஆனால், தேவனுடைய வார்த்தையின் மூலமாக நாம் பாக்கியவான்களாக மாற முடியும்.
*பிசாசின் தந்திரம் அல்லது வஞ்சிக்கும் ஆவிகள்.*
நீங்கள் வேதத்தை வாசிக்கமல் எப்பொழுதும் அவர்களுடைய நிகழ்ச்சிகளை மாத்திரம் பார்த்து, அவர்களுடைய தொடர்பிலே தொடர்ந்து நீங்கள் இருக்கும் படியாக இந்த நிகழ்ச்சிகள் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
*வாங்க ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியும் இந்தத் திட்டத்தில் ஒன்றுதான்.*
நீங்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது உங்கள் மூலமாக அவர்கள் எதிர்பார்த்திருக்கிற காரியங்களும் நடக்கிறது.
அடுத்து ஆன்லைன் மூலமாகவும் youtube சேனல் மூலமாகவும் பல விளம்பரங்கள் மூலமாகவும் பல லட்சங்கள் வருமானமாகவும் வருகிறது.
*நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
பிரபல சுவிசேஷகர் டாக்டர் ஜீவானந்தம் ஐயா மூலமாக அநேக கிராம சபைகள் பட்டணத்திலுள்ள சபைகள் வளர்ச்சி அடைந்தன.
ஆத்துமாக்களால் சபை நிரப்பப்பட்டது.
சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களால் ஒரு கிராமத்தில் ஒரு ஆத்துமாவாவது இரட்சிக்கப்பட்டு சபைக்கு வருகிறதா ?
மாதம் மாதம் நாலுமாவடிக்கு போய் விடுவார்கள். வீட்டு பக்கத்துல இருக்கிற சின்ன சபையில் அங்கத்தினர்களாக இருக்க மாட்டார்கள்.
காரணம் அவர்கள் ஒரு நாளும் உங்கள் சபை ஊழியர்களுக்கு உண்மையாக இருங்கள்.
உங்கள் சபையை விட்டு வேறு எங்கும் போகாதீர்கள், அலையாதீர்கள்.
இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் அருகாமையில் இருக்கிற சபையில் ஞானஸ்நானம் பெற்று அங்கத்தினர்களாக இருங்கள். அவர்களுக்கு கீழ்ப்படிந்த அடங்குங்கள் என்ற போதனை ஒரு நாளும் இல்லை.
ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கிற ஒவ்வொருவரும் பெரிய நஷ்டத்தை அடைகிறார்கள்.
1)பெரிய நஷ்டம்
முதலாவது வேத வாசிப்பை விட்டு விடுகிறார்கள்.
1) பெரிய லாபம்.
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
(சங்கீதம் 1:2)
2) பெரிய நஷ்டம்
சபை கூடி வருதலை விட்டு விடுகிறார்கள்.
2) பெரிய லாபம்.
உம்முடைய (சபை)பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
(சங்கீதம் 65:4)
3) பெரிய நஷ்டம்.
குடும்பங்களில் ஜெபம் இல்லை,
3) பெரிய லாபம்.
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
(நீதிமொழிகள் 8:34)
4) பெரிய நஷ்டம்.
உங்களால் தேவனுடைய கட்டளை நிறைவேற்ற முடியாது.
4) பெரிய லாபம்.
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.(மத்தேயு 28:18-20)
கர்த்தர் கூட இருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்.
இப்படி அநேக காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதேபோல நானும் ஒரு சில காரியங்களை விவரித்து காண்பித்திருக்கிறேன்.
நிகழ்ச்சி பார்ப்பவர்கள் பாக்கியவான்களா ?
*அல்லது பரிசுத்த ஆவியானவரின் மூலம் தேவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளின்படி செய்பவர்கள், வாழ்பவர்கள், நிறைவேற்றுபவர்கள், கிறிஸ்துவுக்காக பாடுபடுபவர்கள்,ஜெபிப்பவர்கள், துதிப்பவர்கள், பாக்கியவான்களா ?*
*இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.*
(மாற்கு 13:5-6)
ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
சென்னை குன்றத்தூர்.
Comments