Zoom meeting
தேசத்திற்க்காக திறப்பிலே நின்று ஜெபிக்க வேண்டும், ஆகையால் அதிகாலையில்
Zoom meeting ல் வாருங்கள் என தொடர்ந்து அழைப்பு கொடுக்கிறார்.
நான் ஏற்கனவே சொன்னதை மறுபடியும் சொல்லுகிறேன். வாசியுங்கள்.
எசேக்கியேல் 22:30 ஐ,
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
இந்த வசனத்தின் ஆரம்பத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
*"நான்" தேசத்தை அழிக்காத படிக்கு," யார் இந்த நான் "
இந்த "நான்" என்ற வார்த்தைக்கு தகுதியானவர் ஒருவர் தான் அவர் நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே.*
(லேவி 18:4-7,21)
அப்படியானால் தேசத்தை அழிப்பவர் யார் ?
என்ன காரணத்திற்காக ?
மனுஷனுடைய அக்கிரமம்,
இருதயத்தின் நினைவுகள்
தோற்றங்கள், நித்தமும் பொல்லாததே (ஆதி 6:5)
கர்த்தரையே மனஸ்தாபட வைத்தது மனுஷனின் பாவம்.(ஆதி 6:6)
தாம் உண்டாக்கின மனுஷன் முதல், வானத்தின் கீழ் பூமியில் இருக்கிற யாவையும்
நிக்கிரகம் பண்ணுவேன்; என முடிவு செய்தார். (ஆதி 6:7,17; 7:21-23)
*முழு உலகமே அழிந்தாலும் ஒரு மனிதன் காக்கப்பட்டான். அவன்தான் நீதிமானாகிய நோவா.* (ஆதி 7:1)
அதேபோல்,( ஆதி 18:20,21; 19:24,இல்)
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,
நான் போய் பார்த்து அறிவேன் என்று சொல்லி அந்தப் பட்டணத்தை அக்கினினாலும் கந்தகத்தினாலும் அழித்து போட்டார்.
*இங்கு பட்டணமே அழிந்தாலும் ஒரு மனிதன் காக்கப்பட்டான்.அவன் தான் நீதிமானாகிய லோத்து*
(2 பேது 2:8)
இந்த அழிவுகள் எதினால் நடந்தது ?
தேவனுக்கு விரோதமான பாவத்தைச் செய்வதினால் அழிந்தது என்பதை மேலே உள்ள வசன ஆதாரத்துடன் நாம் பார்த்தோம்.
இப்பொழுது சுவரை அடைக்க ஒரு மனிதனையும் காணோம். (எசேக் 22:30)
*அதாவது பரிந்து பேசும் ஜெபத்தினால், திறப்பிலே வேலியாக நிற்கவோ, அல்லது சுவரிலுள்ள ஓட்டையை அடைக்கவோ "தேவனால் ஒருவனையும்" கண்டுபிடிக்க முடியவில்லை.*
அவரே சொல்லிட்டார் ஒருவனையும் காணேன்.
(எசே 22:30)
ஏன் ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை?
139 சங்கீதத்தில் அவருடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை எனப் பார்க்கிறோம்.
எபிரேயர் 4:13 இல் அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை என வாசிக்கிறோம்.
தேவன் நீதியுள்ளவர் என்பதை மறந்து விடக்கூடாது.
பாவம் செய்தவனுக்கு தக்க தண்டனையை நிச்சயமாக கொடுப்பார்.
அதே நேரத்தில் அவர் இரக்கம்முள்ள தேவன் . தன் தவறுக்காக மனஸ்தாபப்பட்டு அதை அறிக்கை செய்து விட்டு விடும்போது அவருடைய இரக்கம் அவனுக்கு நிச்சயம் உண்டு.
ஆனால் இங்கு பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்கு சொல்வது
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
(ரோமர் 3:23)
*அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;*
*எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்;* நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
*கர்த்தரின் பார்வைக்கு நீதிமான் ஒருவனும் இல்லை.*
*பாவிகளுக்கு தேவன் செவி கொடுப்பதில்லை. என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.*
(யோவா 9:31)
ஆகவே பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் மனிதனாக அனுப்பினார். ஆமென் அல்லேலூயா.
திறப்பிலே நிற்கவும்,
சுவரை அடைக்கவும்,
ஜனங்களை இரட்சிக்கவும்,
இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வந்தார்.(யோவா 6:38)
பிதாவாகிய தேவன் ஒரு சரீரத்தை மரியாளின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியானவர் ஆயத்தம் பண்ணி இருந்தார்.
(மத் 1:20;எபி 10:5 இல் வாசிக்கிறோம்)
முழு உலகமே பாவம் செய்து ஏகமாய் கெட்டுப் போனது, இவர்கள் ஒரு நாளும் பாவம் நிவர்த்தி பெற முடியாது.
நியாயப்பிரமாணத்தின் படி பலி செலுத்தி பாவம் நிவர்த்தி செய்வதற்கும் ஆசாரியன் இல்லை. லேவியன் இல்லை, இவர்களுக்கென்று பலி செலுத்தி இவர்களை பரிசுத்தப்படுத்த எவரும் இல்லை. ஒட்டு மொத்த உலகத்திற்கே பலி கொடுக்க வேண்டுமானால் மிருகங்களும் இல்லை.
தேவன் பரிசுத்தர்.
தேவன் நீதியுள்ளவர்.
ஆகையால் அவர் காணிக்கையையும் பலியையும் விரும்பவில்லை.
(எபி 10:4,6,8)
அதே நேரத்தில் அவர் இரக்கம் உள்ளவர்.
எப்படியாகிலும் தம் ஜனத்தை பாவத்திலிருந்து மீட்டு விட வேண்டும் என்பதற்காகவே
தேவகுமாரன் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வெளிப்பட்டார்.
மாத்திரமல்ல
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
இன்றைக்கும் நமக்காக கல்வாரி சிலுவையில் திறப்பிலே நின்று பிதாவே இவர்களை மன்னியும் என்றும், இன்றும் திறப்பிலே நின்று பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். அடிக்கப்பட்ட வண்ணமாக நிற்க கண்டேன்.
(லூக்கா 23:34;எபி 10:10,12 வெளி 5:6)
தேவன் செய்து முடித்ததை
இன்றைய அறியாமை அல்லது வேதத்தை புரிந்து கொள்ளாத ஊழியர்கள்
திறப்பிலே நின்று ஜெபிப்போம் வாருங்கள் என்று அழைப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
ஒருவேளை நான் தான் அறியாமல் இருந்தால் இந்த திறப்பின் வாசலை குறித்து எனக்கு தெளிவு படுத்துங்கள்.
தேசம் அழியாமல் இருக்க வேண்டுமானால் இந்த தேசம் நினிவே பட்டணத்தை போல உபவாசித்து தேவனை நோக்கி கதறி பாவ மன்னிப்பை பெற வேண்டும்.
நினிவே பட்டணத்திற்கு ஒரு யோனா அனுப்பப்பட்டது போல எல்லா கிராமங்களுக்கும் எல்லா பட்டணங்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கிற ஊழியர்களை பிதாவாகிய தேவன் எழுப்பி தரும்படி ஒவ்வொரு நாளும் சபை ஜெபிக்க வேண்டும். அல்லது சபை ஊழியர்களை அனுப்ப வேண்டும்.
இதைச் செய்யாமல் நீ திறப்பில் நின்று என்ன பயன்
அறியாமையுள்ள ஊழியனே .
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா.
சென்னை குன்றத்தூர்.
Comments