வேதாகமப் பயிற்சி
கிறிஸ்தவர்களுக்கு வேதாகமப் பயிற்சி.
*"அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி".*
(2தீமோ 2:2).
வேத வாக்கியங்களில் காணப்படும் உண்மையான ஆதி அப்போஸ்தல உபதேசத்தைப் பாதுகாப்பதும், மற்றவர்களுக்கு அதை கலப்படம் செய்யாமல், திரித்துக் கூறாமல் ஒப்புவிப்பதும் திருச்சபையின் கடமையாகும். இதற்கு திருச்சபையில் வேதாகமப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
1) வீட்டிலோ, சபையிலோ, வேதாகம பள்ளியிலோ, வேதாகமப் பயிற்சி அல்லது வேதாகமக் கல்வி அளிக்கப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் பரிசுத்த வேதாகமம் கொடுக்கிறது.
அ) உண்மையுள்ள விசுவாசிகள், பரிசுத்த வேதாகமம் கூறும் உண்மையான விசுவாசத்தையும் (1தீமோ 4:6,11;2தீமோ 2:2), நீதிக்குரிய (அல்லது தேவபக்தியற்ற) தகுதிகளையும் (ரோமர் 6:17;1தீமோ 6:3ஐ வாசி) பற்றிய அறிவு பெறவும் (2தீமோ 3:15;ஏரே 2:8), அதைக் காத்துக் கொள்ளவும் ( 2தீமோ 1:14 ) அதைப் போதிக்கும்படி கிறிஸ்துவின் நற்செய்தி ஒப்புவிக்கப்பட பயிற்சி வேண்டும்.
ஆ) பயிற்சி பெறுவோருக்கு தாங்கள் "பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாகப் போராட வேண்டும்" (யூதா 3 ஐ,வாசி) அதன் மேலான அவசியத்தைக் காண்பிக்கவும், எல்லா தவறான பரிசுத்த வேதாகம உபதேசங்களுக்கும் எதிராக போராடத்தக்க வகையில் அறிவைக் கொடுக்கவும் (அப்20:31;கலா 1:9; 1தீமோ 4:1;6:3-4;தீத் 1:9; குறிப்புகளைப் பார்க்கவும்) பயிற்சி தேவை.
இ)"தேவ பக்திக்குரிய போதனை"கொடுப்பதன் மூலம் நன்னடத்தையில் தொடர்ந்து வளர்வதற்கு பயிற்சி பெறுவோரை வழிநடத்த (1தீமோ 6:3;யோசு 1:8;சங் 1:2-3; 119:97-100;மத் 28:20;யோவா 17:14-18;1தெச 4:1;1தீமோ 1:5ன் குறிப்பு 4:7,16;2தீமோ3:16) பயிற்சி தேவை.
ஈ) மற்ற விசுவாசிகளைப் பலப்படுத்தி, முதிர்ச்சிக்குக் கொண்டு வரும்படி மாணவர்களை போஷிக்க, அதனால் அவர்களோடு சேர்ந்து வீட்டிலும், ஸ்தல சபையிலும், கிறிஸ்துவின் சரிரத்திலும் கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிக்கிறது
(எபே 4:11-16) அவர்களுக்கு பயிற்சி தேவை.
உ) பயிற்சி பெறுவோருக்கு பூமியிலுள்ள தேவனுடைய இராஜ்ஜியத்தைப் பற்றியும், சாத்தானின் வல்லமைக்கு எதிராக அதன் போராட்டத்தைப் பற்றியும் ஒரு ஆழமான புரிந்து கொள்ளுதலையும் அனுபவத்தையும் கொண்டுவர (எபே 6:10-18) பயிற்சி அளிக்க வேண்டும்.
ஊ) பரிசுத்த ஆவியின் வல்லமையினால் எல்லா நாடுகளிலும், இறந்து போன மக்களுக்கு நற்செய்தி பணி புரிந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தங்களை முழுதும் மனதோடு அர்ப்பணிக்கும்படி,
சுவிசேஷத்தின் நித்தியமான சத்தியத்தின் மூலம் பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்க வேண்டும். (மத் 28:18-20;மாற் 16:15-20) எனவே பயிற்சி தேவை.
எ) நம்மில் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் படி பயிற்சி பெறுவோரை நடக்க தூண்டுவதன் மூலமும் (ரோம 8:14), பரிசுத்த ஆவியானால் ஞானஸ்நானமும் அவர்களை கொண்டு வருவதன் மூலம் (அப் 2:4) அவர்களுடைய ஆவிக்குரிய அனுபவத்தை ஆழமாக்க பயிற்சி வேண்டும்.
மேலும், புதிய ஏற்பாடு பரிசுத்தவான்களில் ஆவிக்குரிய தீவிரத்தோடு (2தீமோ 4:8;தீத் 2:13); இயேசு கிறிஸ்துவின் மகிமையான வருகைக்கு அவர்கள் வாஞ்சையோடு காத்திருக்கும் படி, ஜெபிக்கவும் (மத் 6:9) உபவாசிக்கவும் (மத் 6:16) ஆராதிக்கவும் அவர்களுக்குப் போதிப்பதன் மூலம், கிறிஸ்துவின் அன்பு, அவரோடுள்ள தனிப்பட்ட ஐக்கியம், பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் (யோவா 17:3,21,26;எபே3:18-19) ஆகிய அனுபவப் பயிற்சி பெறுவோரில் ஆழமாக்கவும் பயிற்சி அளிக்க வேண்டும்.
2) தேவனின் முழு தூண்டுதலால் அருளப்பட்ட வார்த்தையாகிய வேத வாக்கியங்களுக்கும் (2தீமோ 1:13-14; எஸ்றா 7:10) பரிசுத்த ஆவியானவருக்கும் அவருடைய உண்மை, நீதி, வல்லமை ஆகிய ஊழியங்களுக்கும் (2தீமோ 1:14) அதிக உண்மை உள்ளவர்களால் மாத்திரம் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது, இப்படிப்பட்ட பரிசுத்த வேதாகம பயிற்சி நோக்கங்களிலிருந்து தெளிவாகிறது.
3) உண்மையான பரிசுத்த வேதாகம பயிற்சி
பரிசுத்த வேதாகம நடவடிக்கைகள், உண்மைகளை மாத்திரம் அறிந்து கொள்வதற்கு அல்லாமல் உண்மையான நீதியை (அதாவது அறிவது, நடப்பது, செய்வது) வலியுறுத்துவதாகவும் கவனிக்கவும். வேறொரு வாக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்ட பெரிய உபதேசங்கள் கல்வி சம்பந்தமானவை அல்ல. அவை வாழ்வையும், சாவையும் குறித்த விஷயங்களாய் இருப்பதால் அவை கற்பிப்பவரிடமிருந்தும், பயிற்சி பெறுவோரிடமிருந்தும் தனிப்பட்ட பதிலையும், தீர்மானத்தையும் எதிர்பார்க்கிறது.
(யாக் 2:17;பிலி 1:9 ஐ பார்க்கவும்)
ஒவ்வொரு திருச்சபையும்
தங்களிடம் இருக்கும் விசுவாசிகளுக்கு பரிசுத்த வேதாகம பயிற்சி மிகவும் தேவை.
ஒவ்வொரு போதகரும் தங்கள் பிள்ளைகளுக்கு கவனம் செலுத்துவது நல்லது தான் அதே நேரத்தில் மக்களைப் பார்த்து நான் உங்களுக்கு ஆவிக்குரிய தகப்பன் என்று சொல்லுகிற நீங்கள் அவர்களுக்கு உண்மையை கற்றுக் கொடுக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளைப் போல...
மேலும் ஒவ்வொரு விசுவாசிகளும் வேதத்தை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று தன்னார்வமாக...
கிறிஸ்துவின் பணியில்
சகோடரன்
சிலுவை ராஜா
Comments