இது கிரியையினால் உண்டானதல்ல.
இது கிரியையினால் உண்டானதல்ல.
(எபே 2:9)
நற்கிரியைகளைச் செய்வதனாலோ, அன்பை வெளிப்படுத்தும் செயல்களை செய்வதாலோ, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ள தீவிரமாக முயற்சிப்பதாலோ, உங்களுடைய ஜெப முயற்சினாலோ ஒருவன் இரட்சிக்கப்பட முடியாது. ஒருவன் தேவனுடைய கிருபையினால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும். இதற்கான காரணங்களை கீழே தருகிறேன்.
1) இரட்சிக்கப்படாத அனைவரும் ஆவிக்குரிய நிலையில் செத்தவர்கள்.
(எபே 2:1)
அவர்கள் சாத்தானின் ஆதிக்கத்துக்குள் இருக்கிறார்கள்.
(எபே 2:2)
அவர்கள் பாவங்களுக்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள்.
(எபே 2:3)
தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறார்கள்.
(எபே 2:3).
2) ஒருவன் இரட்சிக்கப்படுவதற்காக, தேவன் வைத்துள்ள இரட்சிப்புக்கான ஈவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
(எபே 2:4,5)
அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். அதனால் வருகிற இரக்கமே கிருபை.(ரோம 4:7,8; நீதி 28:13;)
சுவிசேஷத்தை கேட்டு மனந் திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள்.
(அப் 18:8,)
கிறிஸ்து இயேசு ஒவ்வொரு தனி மனிதனுக்கான தண்டனையை ஏற்றுக் கொண்டு கல்வாரி சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். மீண்டும் அவர் வருவார், என்பதை சுவிசேஷமாக அறிவிக்க வேண்டும். இதை விசுவாசித்து உண்மையாக மனந்திரும்பும் போது தேவனுடைய கிருபையை பெற்றுக் கொள்கிறான்.
(ரோம 10:13-15; 1கொரி 15:2,3,4;).
அவன் ஆவிக்குரிய நிலையில் புத்துயிர் பெற்றிருக்க வேண்டும்.
(கொலோ 1:13)
புது திருஷ்டியாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
(எபே 2:10; 2கொரி 5:17)
பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
(யோவா 7:37-39; 20:22)
இவையனைத்தையும் எந்த மனிதனும் தன் சொந்த முயற்சியால் பெற்றுக் கொள்ள முடியாது.
3) விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையினால் இரட்சிப்பைக் கண்டடையலாம்.
(எபே 2:5,8;)
தேவனுடைய கிருபை வரங்களில் கீழ்க்கண்டவைகள் அடங்கும்.
அ) முதலாவது விசுவாசம் கொள்ளவும், மனந்திரும்பவும் அழைப்பு,(அப் 2:38) இந்த அழைப்புடன் ஒரு மனிதனுக்குள் பரிசுத்த ஆவி கிரியை செய்யத் தொடங்கும்.
அவனிடத்திலோ அல்லது அவளிடத்திலோ, தேவனிடத்தில் திரும்புவதற்குரிய வல்லமையையும், திறமையையும், அது கொடுக்கிறது.
ஆ) இயேசு கிறிஸ்துவை ஆண்டவரும் இரட்சகருமாக விசுவாசித்து, ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பினால், அவர்கள் ஆவினால் புதுப்பிக்கப்பட்டு மறுபிறப்படையக் கூடுதலான தேவ கிருபையை பெற்றுக் கொள்வார்கள்.
அவர்கள் பரிசுத்த ஆவினால் நிரப்பப்படுவார்கள்.
(அப் 1:8; 2:38; எபே 5:18)
இ) கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் மாறுவார்கள் தொடர்ந்து கிறிஸ்துவ வாழ்க்கை வாழ தேவனுடைய கிருபை வரத்தை பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.
பாவத்தை எதிர்க்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் கிருபையைப் பெறுவார்கள்.
(ரோம 8:13,14; 2கொரி 9:8)
விசுவாசிகள் அவர்களுக்குள் கிரியைச் செய்யும் தேவனுடைய கிருபையினால் அவருக்காக வாழ முயற்சிப்பார்கள்.
(1கொரி 15:10)
தேவனுக்குத் தங்களை அர்ப்பணித்த விசுவாசிகளில் தேவனுடைய கிருபை செயல்பட்டு, தேவனுடைய நல்ல நோக்கத்தின் படி செய்யச் சித்தங்கொள்ளவும், செயல்படவும் செய்கிறது.
(பிலி 2:12,13)
ஆரம்பம் முதல் முடிவு வரை இரட்சிப்பு என்பது தேவனுடைய கிருபையினால் கிடைக்கிறது.
ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியையினால் உண்டானதல்ல;
என்னுடைய ஜெபம், என்னுடைய முயற்சி, என்னுடைய வேத வாசிப்பு, என்னுடைய விடாமுயற்சி ஊழியம்,
என்னுடைய ஊழிய பயிற்சி,
என்று ஒருவனும் மேன்மை பாராட்ட முடியாது. பெருமை பாராட்டவும் முடியாது.
இரட்சிப்பு கர்த்தருடையது.
புரிந்து கொள்ளுகிற தேவஜனங்கள் பாக்கியவான்கள்.
தேவ சமூகத்தில் தேவனுடைய இரக்கத்தையும் கிருபையும் பெற்றுக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments