நல்ல திராட்சை ரசம்
நல்ல திராட்சை ரசம்.
பழங்கால ஆசிரியர்கள் பலர் கருத்துப்படி 'நல்ல'(நேர்த்தியான) திராட்சரசம் ருசி மிகுந்தது. அதை ஒருவர் ஏராளமாக, தாராளமாக எந்தத் தீங்குமின்றி குடிக்கலாம்.
(அதாவது குளிக்க வைத்து சர்க்கரைப் பொருள் அழிக்கப்படாத திராட்சரசம்)
"விலை குறைவான"திராட்சரசம் என்பது அதிக அளவில் தண்ணீர் கலந்த திராட்சை ரசமாகும்.
1) ரோம ஆசிரியராகிய பிளனி இதை உறுதிப்படுத்தி உள்ளார். அவர் மிகத் தெளிவாக 'சபா' என்று அழைக்கப்படும் "நல்ல திராட்சரசம்" புளிக்க வைக்க படாது என்று கூறுகிறார். 'சபா'என்பது திராட்சைப்பழ சாற்றை, அதின் இனிப்பு சுவை அதிகரிக்கும்படி மூன்றில் ஒரு பங்காக குறையும் வரை கொதிக்க வைத்த ரசமாகும்.
(IV, 13) இன்னொரு இடத்தில் அவர் எழுதுவதாவது "திராட்சை ரசத்தின் வீரியத்தை வடிகட்டி அகற்றி விட்டால் அது மிகவும் நன்மை கொடுக்கக் கூடியதாய் இருக்கும்"
(பிளினி இயற்கை சரித்திரம்,XIV,23-24) பிளினி புளுடார்க்,ஹோரேஸ் ஆகியோர் நேர்த்தியான ரசம் 'தீங்கற்ற, கலங்கமில்லாத'வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.
2) சில ரபீக்கள் கொதிக்க வைத்த திராட்சை ரசத்தையே பரிந்துரைக்கிறார்கள் என்று ரபீக்களின் சாட்சிகள் வலியுறுத்துகிறார்கள். மிஷ்னா கூறுவதாவது "யெகுடா என்ற ரபீ, அது (ஏறெடுக்கப்படும் காணிக்கையாக, கொதிக்க வைத்த திராட்சரசம்) சீர்படுத்துவதால் அதை அனுமதிக்கிறார்"
3) கிரேக்க பண்புச்சொல்'நல்லது'என்பதை 'அகதாஸ்' என்று சொல்லாமல் "ஒழுக்க நெறியில் தலையில் சிறந்ததும், பொருத்தமானதும்"என்ற அர்த்தம் கொண்ட 'கலோஸ்' என்று மொழிபெயர்ப்பது குறிப்பிடத்தக்கது.
அ) ஜனங்கள் திருப்தியடைந்த பின்பு (யோவா 2:10)
இந்த சொற்றொடர் கிரேக்க வார்த்தையான 'மெதுஸ்கோ'எந்த இரண்டு அர்த்தங்களும் வார்த்தையைக் குறிக்கும்.
1) குடித்து போதையில் இருந்தவர்கள்.
2) திருப்திமடைந்திருந்தார்கள்
(போதையில்லாமல்)
யோவான் 2:10ன்படி நாம் இரண்டாவது அர்த்தத்தையே கொள்ள வேண்டும்.
(1) இந்த வசனத்தை யார் எப்படி மொழிபெயர்த்தாலும் சரி, கல்யாண வீட்டில் புளிக்க வைத்த திராட்சை ரசம் குடிக்கப்பட்டது என்ற கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பந்தி விசாரிப்புக்காரன் பரிமாறப்பட்ட பானங்களின் வகையைக் குறிக்காமல், பொதுவாக கல்யாண கொண்டாட்டங்களில் பின்பற்றப்படும் செயலையே கூறினார்.
(2) எந்த வகையிலும் இயேசு கிறிஸ்து குடிகார ரோடு பங்கு கொண்டு மது வழங்கினார் என்று பொருள் கொள்ளவே முடியாது.
இன்றைய உயர்ந்த முத்துக்களின் கருத்துக்கள்
தேவனுடைய பிள்ளைகள் தவறான உபதேசங்களுக்கு செவி கொடுக்க வேண்டாம். வேதத்தை திரும்பத் திரும்ப வாசியுங்கள் அது உங்களுடைய மன கண்களைத் திறந்து தேவனை தரிசிக்க கூடிய பார்வை உங்களுக்கு தரும்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
Comments