பழைய ஏற்பாடு 2

 218 வதின் தொடர்ச்சி. 

பழைய ஏற்பாட்டை தீர்க்கதரிசிகளை பற்றி ஒர் கண்ணோட்டம்.


ஆவிக்குரிய மனிதனும், தேவனுடைய வார்த்தையும். 


எபிரேய சரித்திரத்தில் தீர்க்கதரிசி என்பவன் மற்றொரு மதத் தலைவன் அல்ல; மாறாக தேவனுடைய ஆவியாலும் அவரது வார்த்தையாலும் மேற்கொள்ளப்பட்டவனாவான். (எசே 37:1,4)

அவனுக்குள் ஆவியும் வார்த்தையும் இருந்ததால் கீழ்கண்ட மூன்று குணாதிசயங்களையும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி வெளிப்படுத்துகிறான். 


1) வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக அறிவு. 


மக்கள், சம்பவங்கள், வீட்டின் உண்மை இவற்றைக் குறித்த தெய்வீக வெளிப்படுத்தல்களை அவன் உணர்ந்தான். இந்த அறிவின் முக்கிய நோக்கமே தேவனுடைய பிள்ளைகளை தேவனுக்கும், அவரது உடன்படிக்கைக்கும் உண்மை உள்ளவர்களாய் வாழும்படி உற்சாகப்படுத்துவதாகும். 

போதனை, கண்டிப்பு, எச்சரிப்பு, போன்றவை மூலமாக தேவனுடைய பிள்ளைகளுக்கு அவரது சித்தத்தை வெளிப்படுத்துவதே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் சிறப்பு அம்சமாகும். 

தனது நியாய தீர்ப்பு நிகழும் முன்பே மக்களுக்கு அறிவிக்க தீர்க்கதரிசிகளை தேவன் உபயோகித்தார். 

இஸ்ரவேல், யூதா ஆகியவற்றின் இருண்ட சரித்திரத்தின் பின்னணியில் மேசியாவை குறித்தும், தேவனுடைய இராஜ்ஜியத்தை குறித்தும், எதிர்கால சம்பவங்களை குறித்தும் தீர்க்கதரிசனங்கள் வெளிப்பட்டன.


2) தெய்வீகமாக கொடுக்கப்பட்ட வல்லமை. 

தேவனுடைய ஆவினால் நிரம்பும் போது தீர்க்கதரிசிகள் அற்புதம் என்கிற நிலைமைக்கு இழுக்கப்பட்டனர். தேவ வல்லமை அனுபவியாத இவ்வுலகில் தீர்க்கதரிசிகள் மூலமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் தேவனுடைய ஜீவனும் வல்லமையும் வெளிப்பட்டன. 


3) விசேஷித்த வாழ்க்கை முறை. 

தேவனுக்காக வாழ்வதற்கென்று உலகின் சாதாரணமான இன்பங்களை தீர்க்கதரிசிகள் வெறுத்து வாழ்ந்தனர். 

தேவனுடைய மக்கள் நடுவிலிருந்த விக்கிரக ஆராதனை, ஒழுக்கச்சீர்கேடுகள், தீமைகள், ஆகியவற்றுக்கு எதிராகவும், ராஜாக்கள், ஆசாரிர்கள் ஆகிய அவர்களின் வாழ்விலிருந்த ஊழல்கள் இவற்றுக்கெதிராகவும் அவர்கள் குரல் எழுப்பினார்கள். இஸ்ரவேலிலே பரிசுத்தமும், நீதியுமான மாற்றங்களுக்கென்று போராடினார்கள். தேவனுடைய ராஜ்ஜியம் அவரது நீதி இவற்றுக்கான போராடி தங்களது வாழ்வில் வரக்கூடிய அபாயங்களையும் பொறுப்பெடுத்தாமல் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார்கள். 


நாளை தொடரும். 

தொடர்ந்து வாசியுங்கள் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். 

உங்களுக்காக நான் எழுதுவதினால் நானும் பயன் அடைகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை