எங்கே போகிறது

 கிறிஸ்தவம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. 


நித்திய ஜீவனை நோக்கியா 

அல்லது நித்திய ஆக்கினையை அடையும் படியா ?


கடந்த நாட்களில் அநேக ஊழியர்களுக்கு எதிராக ஆக்டிங் கிறிஸ்டின் என்ற youtube சேனல் நடத்தி வந்த சகோதரன் சார்லஸ் அவர்களை கிறிஸ்தவர்கள் வழக்கு பதிவு செய்து காவலில் அடைத்ததும் அல்லாமல் அடித்ததாகவும் பல வார்த்தைகளைச் சொல்லி நிந்தித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.


பொதுவாக பாரம்பரிய சபைகளில் இருக்கும் அநேகர் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அவர்கள் மதுபானம் பண்ணுவார்கள், பீடி சீக்ரெட் மற்ற பழக்க வழக்கங்கள் ஏராளமாக அவர்களிடம் உள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயர் நாட்களில் மதுபானம் மற்ற நாட்களை விட அதிகமான விற்பனையாகிறது இதை வைத்து புரிந்து கொள்ளுங்கள். 

சார்லஸ் சகோதரன் அவர்களும் இடையன்குடி சிஎஸ்ஐ சபையை சார்ந்தவர்கள் தான்.


அதே நேரத்தில் தன்னுடைய youtube சேனலில் ஊழியர்களை பற்றி விமர்சனம் செய்யும் போது எந்த காரியத்திற்காக அவர் அதை செய்கிறார் என்பதை அனைவரும் கவனிக்கவில்லை.

ஒன்று பிசினஸ், இன்னொன்று சுயநீதி. இவர்கள் என்றுமே திருந்துவதில்லை.


நான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை இன்றைக்கு கேட்க விரும்புகிறேன். 


1) பரலோகம் செல்ல விரும்புகிற ஊழியர்கள் பூமியில் பலநூறு கோடியில் சொத்து சேர்க்கலாமா ?


2) பரலோகம் செல்லக்கூடிய ஊழியர்கள் 110 தொழில்களை செய்கிற அதிபர்களாக மாத்திரமல்ல பங்குச்சந்தையில் முதலீடு சினிமா துறையில் முதலீடு நகை கடையில் முதலீடு பியூட்டி பார்லர் முதலீடு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதலீடு 

டிவி சேனல்களில் முதலீடு 

மசாலா கம்பெனிகளில் முதலீடு 

கல்லூரி ,ஸ்கூல்,மருத்துவ மனை இவை அனைத்தும் விசுவாசிகளின் பணத்தில் தொடங்கப்பட்டவை ஆகும்.

இப்படி பல ஆயிரம் கோடிகளுக்கு முதலாளியாக இருப்பது சரிதானா ?


3) மனுஷ குமாரன் இயேசு கிறிஸ்துவுக்கு தலை சாய்க்க இடமில்லை, பயணம் செய்வதற்கு கழுதை கூட இல்லை. 

ஆனால் ஊழியம் என்ற பெயரில் பல கோடியில் சொகுசு கார் பயணம், சொகுசு பங்களா, ஆடம்பர வஸ்திரங்கள், பெருமையான பேச்சுக்கள் 

இதெல்லாம் சரியானதா ?


4) இவர்கள் எப்பொழுதுமே தங்களுடைய ஊழியத்தை மாத்திரமே பிரஸ்தாபம் பண்ணுகிறவர்கள்.

இயேசு கிறிஸ்து உங்களுடைய ஜெபத்தை கேட்டார் உங்கள் விசுவாசத்தை அவர் பார்த்தார் என்று சொல்வதைக் காட்டிலும். எங்கள் நிகழ்ச்சியை பார்த்தார்கள். எங்கள் இடத்திற்கு தேடி வந்தார்கள். நாங்கள் ஜெபித்தோம். என்று சொல்லி திரளான ஜனங்களை வஞ்சிக்கிற ஊழியர்கள்  இவர்கள் நடத்துகிற கூட்டங்களில் அருகாமையில் இருக்கிற சபைக்குப் போங்கள், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள், என்று எந்தக் கூட்டத்திலாவது சொன்னதாக தெரியவில்லை.


அந்நிய மதத்தில் மனிதர்களை கடவுளாக கருதுகிற அநேகர் உண்டு அதே போலத்தான் கிறிஸ்துவத்திலும் மனித கடவுள்கள் உருவாக்கப்படுகிறார்கள் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறார்கள். 


5) புனித பொருட்களாக எருசலேமின், சீனாய் மலைத் தூண்டுகள், யோர்தானின் தண்ணீர், இஸ்ரவேலின் மணல், ஆசிர்வாத செங்கல், ஆசிர்வாத எண்ணெய், ஆசிர்வாத பேனா, ஆசிர்வாத கர்சீப், ஆசிர்வாதமான உணவு, ஆசிர்வாதமான ஜெபம், ஆசிர்வாதமான புனித பயணம். ஆசிர்வாதமான காணிக்கை, 


கள்ள உபதேசங்கள். 

குழந்தை ஞானஸ்நானம்,

கொடி மரத்தின் நிழல் மூலமாக ஞானஸ்நானம்,

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்லாத ஞானஸ்நானங்கள்,


தேவன் மூவரா அல்லது இருவரா அல்லது ஒருவரா என்ற குழப்பங்கள். 


சத்தியத்தை ஒரு மனிதன் மனதார பேசும் போது பாடுகள் நிச்சயமாக உண்டு. 

பாடுகள் கிடையாது என்று பேசுவது , பாடுபடுகிறவனை அற்புதமாய் எண்ணுவது !!!


பிறருடைய மனைவியை இச்சித்தல், அல்லது அவருடைய பிள்ளைகளை இச்சித்தல், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை உடைய ஊழியர்களை யார் கண்டிப்பது ?


தேவ ஊழியர்களிடம் வார்த்தையில் உண்மை இருக்கிறதா ?


தேவன் விரும்புகிற பரிசுத்தம் காணப்படுகிறதா ?


சபை தேவனுக்காக நடத்தப்படுகிறதா அல்லது சுய தேவைகளுக்காக நிறுவனமாக நடத்தப்படுகிறதா ?


பங்காளர் திட்டம்  

அல்லது ஜெப பங்காளத் திட்டம் வேதத்தின்படி சரியானதா ? 


கிறிஸ்தவத்தில் பல பிரிவினைகளும் பல பிரச்சினைகளும் இருக்கும் பொழுது தனி ஒரு மனிதனை போக்கஸ் பண்ணி தன்னுடைய சேனலையும் அதன் மூலமாக கிடைக்கிற இழிவான ஆதாயத்தையும் விரும்புகிறது தான் ஊழியமா? 


உண்மையாகவே நித்தியத்தை நீங்கள் எங்கே கழிக்க போகிறீர்கள் ?

எழுத வேண்டும் என்று சொன்னால் இந்த whatsapp குரூப் தாங்காது. 


வேதனையுடன் 

 சகோதரன் 

சிலுவை ராஜா 




Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை