உன் இருதயம்
உன் இருதயம் செம்மையாய் இருக்கவில்லை.
(அப் 8:21)
இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்த சீஷர்களுக்கு மட்டும் தான் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் கிடைத்தது என்பது அப்போஸ்தலர் நடபடி புத்தகம் முழுவதும் காணப்படும் உண்மையாகும்.
1) சீமோன் ஆவியின் வரத்தையும், வல்லமையையும் பெற விரும்பினான். மற்றவர்கள் மேல் தன் கைகளை வைத்த உடன் ஆவியானவரின் வரம் கிடைக்க வேண்டும் என்னும் அதிகாரத்தைப் பெற நினைத்தான்.(அப் 8:19)
இவனுடைய வேண்டுதலை ஆண்டவர் நிராகரித்தார். ஏனெனில் அவனுடைய இருதயம் ஆண்டவரிடத்தில் சரியாயிருக்கவில்லை. அவன் இன்னும் அக்கிரமக்காரனாகவே இருந்தான். அவன் பாவ அடிமைத்தனத்துக்குள்ளும் இருந்தான் (அப் 8:22,23)
"தேவனுக்குப் பயப்பட்டு, நீதியானவற்றை செய்கிறவர்களுக்கே"உண்மையான பரிசுத்த ஆவியின் வரம் ஊற்றப்படும்.
(அப் 10:35;10:44-48; 5:32ஐ கவனிக்கவும்)
அ) இன்றைய திருச்சபைகளில் இயேசு கிறிஸ்துவுக்கு தங்களுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்காதவர்கள், பரிசுத்த ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் பேசுவது, தீர்க்கதரிசனம் சொல்லுவது எல்லாமே சாத்தானின் அடையாளமே.
ஆ) உண்மையற்ற மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவர் எப்படி வாசம் பண்ணுவார்.?
நீங்கள் கிறிஸ்தவராக இருக்கலாம், ஒரு தலைமை சபையின் போதகராக இருக்கலாம்,நீங்கள் பேசும் வார்த்தையில் உண்மையில்லை என்றால் நீங்கள் தேவனுக்கு கீழ்படியாதவர்,(அப் 5:32)தேவனுடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காதவர், ஆகையால் நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள முடியாது. ஒருவேளை நீங்கள் ஆரம்ப காலத்தில் உண்மையாக இருந்து பெற்றுக் இருக்கலாம். காலங்கள் கடந்து செல்ல செல்ல நீங்கள் உண்மையற்றவர்களாக மாறி இருக்கலாம். நாம் உண்மையற்றவராய் மாறும் பொழுது பிசாசின் பிள்ளைகளாக மாறி விடுகிறோம்(லூக் 22:3;அப் 5:3;) நம்மில் எத்தனை பேர் உணர முடியும் .
இ) இன்றைய திருச்சபைகளில் அந்நிய பாஷையில் பேசுகிறவர்களை கவனிக்க வேண்டும்.
தேவனுக்கு உகந்தவர்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்கள், வாழ்க்கையில் கானும் ஆவியின் நிறைவுகளை வெளிப்படையாக காண முடியும். அவர்களிடத்தில் நல்ல கனிகள், தேவனுடைய வரங்கள், கிருபைகளால் நிறைந்து காணப்படுவார்கள்.
ஆனால் ஆவியில் நிறைகிறவர்கள், பண ஆசையில், பொருளாசையில், அடுத்தவர் மனைவியுடன், அடுத்தவர் கணவனுடன் விபசாரம், காதல் திருமணங்கள், பிறருடைய சொத்துக்களை உரிமை கோருதல், கள்ள தீர்க்கத்தரிசனம் உரைத்தல்,
சுய முயற்சியில் ஊழியத்தை செய்தல், இரட்சிக்கப்படாதவர்களிடத்தில் காணிக்கை வாங்குதல், உடன் ஊழியர்களை அற்பமாக எண்ணுதல், விசாரிப்பின்மை, குற்றம் சாட்டாதே என்று பிரசங்கம் பண்ணி தன்னுடைய வீட்டுக்குள் மனைவியுடனும் மற்ற நபர்களுடனும் உடன் ஊழியரை குறை சொல்லி வெளியே அனுப்புவது. கோள் சொல்வது, மற்றவர்களுடைய ஊழிய வளர்ச்சியை தடுப்பது, சாபமான வார்த்தைகளை சொல்லி நிந்திப்பது,
தேவனுடைய வார்த்தையை சொல்லாமல் உலக தத்துவங்களையும் தத்துவ வசனங்களை அனுப்புவது.
மற்றவர்களுக்கு செய்த தவறுகளுக்காக மனஸ்தாபப்படாமல் இருப்பது, மனைவியை அடிப்பது, பிள்ளைகளை சபிப்பது, வாங்கின கடனை கொடுக்காமல் இருப்பது, இப்படிப்பட்டவர்கள் ஆவியில் நிரம்பி அந்நிய பாஷையில் பேசுவது சரிதானா ?
உண்மையான பரிசுத்த ஆவியானவர் தானா ?
2) பெந்தகோஸ்தே நாளுக்கு முன்னும் பின்னும் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், உயிர்த்தெழுந்த ஆண்டவர் மீது பக்தி உள்ளவர்களாய் இருந்தார்கள். (அப் 1:2-14;2:32) அவர்கள் இடைவிடாமல் ஜெபம் பண்ணுவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
(அப் 1:14; 6:4)
அவர்கள் உலகத்தை விட்டும், பாவத்தை விட்டும் விலகி
(அப் 2:38-40) அப்போஸ்தலர்களின் போதனைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள். (அப் 2:42;6:4) புதிய ஆவியின் அருட்பொழிவு அல்லது மறுபொழிவு, தங்களுடைய வாழ்வில் பாவங்களை விட்டும், வாழ்க்கையை விட்டும் விலகிக் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும் வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
(அப் 2:42;3:1,19,22-26;4:8,19-35;
5:29-32;8:14-21;9:1-19;10:34-47;
19:1-6;24:16)
ஆவியினால் வழிநடத்தப்படுதல், ஆவியின் படி வாழுதல் என்பவை ஆவியானவரால் நிறைந்திருப்பவர்களுக்குரிய நிபந்தனைகளாகும்.
(கலா 5:16-25;எபே 5:18)
3) எந்த ஒரு அசாதாரண அனுபவமும் ஆவியில் ஞான ஸ்நானம் என்று கூறப்பட்டு, அது பாவ வழிகளில் தொடர்ந்து வாழும் ஒருவனுக்குக் கிடைத்ததாகக் கூறினால், அது கிறிஸ்துவிடமிருந்து வந்தது அல்ல. (1யோவா 4:1-6) அது ஒரு போலி ஞானஸ்நானம் ஆகும். அத்துடன் இணைந்த செயல்களாக அசுத்த ஆவியின் கிரியைகளும் வல்லமைகளும் வெளிப்படும்.
(மத் 7:21-23;2தெச 2:7-10)
தொடர்ந்து தியானிப்போம். கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments