உபத்திரங்களிலேயும்

 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

(ரோமர் 5:4)


வேதத்தில் பல ஆசிர்வாதங்கள் இருந்தாலும் 

இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பினால் உண்டாகும் "ஆசீர்வாதங்களில் ஒன்றாக உபத்திரவத்தை" பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் சேர்த்திருக்கின்றார். 

அநேக பிரசிங்கமார்கள் காலையிலிருந்து மாலை வரை ஆசீர்வாதம். ஆசிர்வாதம். ஆனால் பவுல் அப்போஸ்தலன் உபத்திரவத்தை ஆசீர்வாதமாக எண்ணுகிறான்.

ஆசீர்வாதம் எல்லாருக்கும் தேவைதான். ஆனால் அவைகளை எப்படி அடைய வேண்டும் என்று அநேகர் கற்றுக்  கொடுப்பதில்லை.


டிவியில் ஒரு விளம்பரம் போகிறது, பணம் தேவையா? 

உங்கள் நகையை விற்று விடுங்கள் என பல நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்கிறார்கள். விற்பதற்கும், கடன் வாங்குவதற்கும் விளம்பரம் செய்கிறவர்கள்,  தங்கத்தை எப்படி சம்பாதிப்பது என்பதை எவரும் கற்றுக் கொடுப்பதில்லை. 

அது போல தான் இன்றைய ஊழியமும்.

நாம் விஷயத்திற்கு வருவோம். 


1)"உபத்திரவம்"என்ற வார்த்தை நம்மை அழுத்தும் எல்லாவிதமான துன்பங்களைக் குறிக்கிறது. இதில் பணத் தேவை, சரீர தேவை, துன்பமான சூழ்நிலைகள், துக்கத்தினால் அழுத்தம், வியாதி, கொடுமைப்படுத்தப்படுதல், கீழ்த்தரமாக நடத்தப்படுதல், தனிமை ஆகியவையும் சேரும். 


2) இந்த துன்பங்களின் மத்தியில் தேவனுடைய கிருபை, அவருடைய முகத்தை அதிக ஆவலோடு தேடத் தூண்டுகிறது. (சங்5:3)அது வாழ்க்கையில் வரும் துன்பங்களையும், கஷ்டங்களையும் மேற்கொள்ளும் ஒரு விடாமுயற்சியின் ஆவியையும், நல்ல குணத்தையும் உருவாக்குகிறது. நம்மை சோர்வுக்குள்ளும், நம்பிக்கைமயில்லாத நிலைக்கும் தள்ளுவதற்கு பதிலாக உபத்திரவம் விடா முயற்சியையும், (ரோம 5:3) விடாமுயற்சி, நிரூபிக்கப்பட்ட நன்னடத்தையையும் கொண்டு வருகின்றது.(ரோம 5:4) நிரூபிக்கப்பட்ட நன்னடத்தை, ஏமாற்றமடைந்து விடாத (ரோம 5:5) ஒரு முதிர்ச்சியடைந்த நம்பிக்கையை கொண்டு வரும்.


3) தேவனுடைய கிருபை, நம்முடைய தற்போதைய பிரச்சனைகளுக்கும் அப்பால் நோக்கி தேவன் பேரில் திடமான நம்பிக்கை வைக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. புதிய வானம், புதிய பூமியில் அவருடைய நீதியும், தெய்வீகமும் நிலைநாட்டும் படியாக வரப்போகும், நம் ஆண்டவருடைய வருகையின் பெயரில் ஒரு தனிப்பட்ட நம்பிக்கை வைக்கவும் செய்கிறது. (1தெச 4:13;வெளி 19-22) அதே நேரத்தில் பூமியில் உள்ள நம்முடைய உபத்திரவத்தில் நம்மை தேற்றி, கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம் அருகே கொண்டுவரும் பரிசுத்த ஆவியினால் தேவ அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்படுகிறது.

(யோவா 14:16-23)

உபத்திரவங்கள் நம் வாழ்க்கையில் வரும் பொழுது புலம்பல் பாடல் பாடாமல், சங்கீதம் பாடி உபத்திரவத்திலும் மேன்மை பாராட்டுவோம். பரமதேசம் செல்லும் வழியில் நடப்போம். கர்த்தரின் ஆவியால் நிரப்பப்பட்டு தேவ அன்பை வெளிப்படுத்துவோம். 

கர்த்தரமை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.






Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை