சகலமும் நன்மை
சகலமும் நன்மைக்கேதுவாக
நடக்கிறது.(ரோம 8:28)
நாம் இந்த உலகத்தில் துன்பங்களை சகிக்க வேண்டியதாக இருக்கும் போது, தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மை இந்த பகுதி மிகவும் உற்சாகப்படுத்துகிறது.
1) தேவன் நம்முடைய வருத்தங்கள், சோதனைகள், உபத்திரவங்கள், துன்பங்கள் இவற்றிலிருந்து நன்மையைக் கொண்டு வருவார். தேவன் கொண்டுவரும் நன்மைகள் நம்மை இயேசு கிறிஸ்துவின் சாயலாக மாற்றி முடிவில் நமக்கு மகிமையைக் கொண்டு வரும்.
2) இந்த வாக்குத்தத்தம், தேவனில் அன்பு கூர்ந்து, இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலம் அவருக்கு கீழ்ப்படிந்து நடக்கிறவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டியிருக்கிறது.(யாத் 20:6;உபா 7:9;சங் 37:17; எசா 56:4-7; 1கொரி 2:9)
"சகலமும்" என்பதில் பாவமும் கவலையீனமும் உள்ளடங்காது.(ரோம 8:6,13; 6:16,21,23; கலா 6:8) தேவன் நன்மைக்கேதுவாக நடத்துவார் என்று கூறிக்கொண்டு ஒருவரும் பாவத்துக்கு இடங் கொடுக்கக் கூடாது. பாவத்தின் சம்பளம் மரணமே.
உத்திரப்பிரதேசத்தில் ஒரு இளம் தம்பதியினர் கர்த்தருக்காக ஊழியம் செய்து வந்தார்கள். அநேக மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்தினார்கள்.
அவர்கள் மூலமாக இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக் கொண்டவர்கள் அந்த இளம் தம்பதியினருக்கு சில உதவிகளை செய்து வந்தார்கள். சில நாட்களில் அந்த உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்துவை அறிவிப்பதில் பிரச்சனைகள். மத சம்பந்தமான பிரச்சனைகள், கிறிஸ்துவை பற்றி யார் அறிவித்தாலும் அவர்களை அடித்து, காயப்படுத்தி, வழக்கு பதிவு செய்து கொண்டு, சிறைச்சாலையில் அடைத்து விடுவார்கள்.
இந்த சூழலில் அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்ய முடியவில்லை, அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்படவில்லை, மிகவும் துன்பப்பட்டார்கள், வாழ்க்கையில் பல கொடுமைகளை அனுபவித்தார்கள். இப்படி நிலைமை இருக்கும் பொழுது அந்த தம்பதியினர்களுக்கு வயிற்றில் ஒரு குழந்தை இருக்கிறது. தங்களுக்கு சாப்பாடு இல்லாத நிலை, செலவுக்கு பணம் இல்லை, உதவி செய்தவர்கள் உதவியை நிறுத்தி விட்டார்கள். இச்சூழலில் தம்முடைய வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படி பராமரிப்பது எப்படி பெற்றெடுப்பது என்ற கவலை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தது.
மறுபடியும் தைரியமாக இயேசுவுக்காக ஊழியத்தை தொடர்ந்தார்கள், கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள் எழும்பி அவர்களை அடித்து, காயப்படுத்தி, வழக்கு பதிவு செய்தனர், அதன்பின் காவல்துறை அவர்களை சிறையில் அடைத்தது.
அப்போதுதான் ரோமர் 8:28 நினைவுக்கு வந்திருக்கிறது. அதை அவர்கள் வாக்குத்தமாக பிடித்துக் கொண்டார்கள். ஜெபித்தார்கள், கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்கள்.
விளைவு என்ன?
வெளியில் சாப்பாடு இல்லாமல் இருந்தவர்களுக்கு சிறைச்சாலையில் மூன்று வேலை சாப்பாடு, தெருத் தெருவாக அலைந்து சுவிசேஷ அறிவித்தவர்களுக்கு சிறைச்சாலையிலே ஒரு பெரும் கூட்டம் இருந்தது, அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார்கள்.
ஜெயில் கைதிகளுக்கான ஆஸ்பத்திரியில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மாதம் மாதம் பரிசோதனையும் மருந்தும் கொடுக்கப்பட்டது ஏற்ற வேளையில் அந்த மருத்துவமனையில் நல்ல ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். ஆமென்.
ஒரு சில வருடங்கள் கழித்து கோர்ட் அவருடைய வழக்கை தள்ளுபடி செய்து அவர்களை விடுதலை செய்த போது
அவர்கள் சொன்ன சாட்சி
சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம்
கர்த்தர் சிறைச்சாலைக்கு கொண்டு போய் மூன்று வேளை சரியான நேரத்தில் எங்களுக்கு உணவு கொடுத்தார்.
சுவிசேஷத்தை அறிவிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்.
பல கைதிகளுக்கு இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதற்கு எங்களுக்கு நேரத்தையும் தைரியத்தையும் கர்த்தர் கொடுத்தார்.
வயிற்றில் வளரும் குழந்தையை பெற்றெடுப்பதற்க்கு சிறைச்சாலை அதிகாரிகள் கண்களில் தயவு கிடைத்து நல்ல ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவத்தின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை கர்த்தர் தந்தார்.
கர்த்தர் சகலத்தையும் நன்மைக்கேதுவாக முடிய பண்ணினார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக என்றார்கள்.
அவர்களுடைய துன்பங்களை மாற்றின அதே கர்த்தர் தான் இன்றைக்கும் நமக்கு நன்மை செய்வார் சோர்ந்து போக வேண்டாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments