ஜெபிக்க வைக்கும் ஆவியானவர்

 ஜெபிக்க கற்றுக் கொடுக்கும் ஆவியானவர்.


அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார்.

நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்,'

ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

"ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால்,"

இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

(ரோமர் 8:26-27)


ஜெபத்தில் விசுவாசிகளுக்கு உதவி செய்யும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை பற்றிய மூன்று குறிப்புகள் முக்கியமானவை. 


1) தேவனுடைய பிள்ளைகளுக்கு பரிந்து பேச இரண்டு தெய்வீகமானவர்கள் இருக்கிறார்கள். 

பரலோகத்தில் பிதாவாகிய  தேவனிடத்தில் இயேசு கிறிஸ்து(விசுவாசிகளுக்காக) நமக்காக பரிந்து பேசுகிறார்.

(ரோம 8:34;எபி 7:25;1யோவா 2:1) பூமியில் பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்குள்ளிருந்து வேண்டுதல் செய்கிறார். 


2)"பெருமூச்சுகளோடு"

என்பது ஒருவேளை விசுவாசியின் பெருமூச்சுகளோடு ஆவியானவர் சேர்ந்து விண்ணப்பம் பண்ணுவதை குறிக்கலாம். இந்த பெருமூச்சுகள் உண்மை விசுவாசியின் உள்ளங்களில் ஏற்படுகின்றன. 


3) நம் இருதயங்களில் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே விசுவாசிகளின் ஆவிக்குரிய விருப்பங்களுக்கும் ஏக்கங்களுக்கும் 

மூலகாரணமாவார். ஆவியானவர் தாமே கடைசி நாளின் மீட்புக்காக நமக்குள்ளிலிருந்து பெருமூச்சு விட்டு தவித்து துன்பப்படுகிறார்.

(ரோம 8:23-25).

அவர் "தேவனுடைய சித்தத்தின்படியே" பரிசுத்தவான்களுக்காக பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்கிறார்.


அ) ரோமர் 8: 26 ன் படி நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்யும் ஆவியானவர். 

நமது பலவீனமே தூக்கம் தான். சீஷர்களால் ஒரு மணி நேரம் கூட விழித்திருக்க முடியவில்லை. 

(மத் 26:40,41,ல் இயேசு கிறிஸ்து விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்றார், 

வசனம் 43 இல் 'மறுபடியும்'தூங்கினார்கள். 

அதே சீஷர்கள் பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற பின்பு 

ஜெபத்தில் உறுதியாக தரித்திருந்தார்கள். (அப் 2:42).

பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாமல் இங்கு எவரும் ஜெபிக்க முடியாது என்பது சத்தியம். ஆகையால் நமக்கு பரிசுத்த ஆவியானவர் தேவை, அவர்தான் நம்முடைய பலவீனங்களை மாற்றி நமக்காக வேண்டுதல் செய்கிறார். 


ஆ) ஆவியானவர் எதற்காக நமக்காக ஜெபம் பண்ணுகிறார்.

ரோமர் 8 26 நடுத்தர வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள். 

*நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.*

அதாவது தேவனுடைய திட்டத்திற்கும், சித்தத்திற்கும் மாறாக ஜெபித்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் தேவ சித்தம் என்ன ?

ரோமர் 8:27ன்படி பரிசுத்தவான்களுக்காக விண்ணப்பம் பண்ண வேண்டும். ஜெபம் பண்ண வேண்டும். 

தேவஊழியர்கள் ,

தேவனுடைய பிள்ளைகள் 

தேசத்திலிருக்கும் பரிசுத்தவான்களுக்காக ஜெபிக்க வேண்டுமென்பதே

தேவனுடைய சித்தம். 

இதைத்தான் ஆவியானவர் இந்த பகுதியில் நமக்கு சுட்டிக் காட்டுகிறார், மற்றும், கற்றுக் கொடுக்கிறார்.


தேசத்தில் உண்மையாக ஊழியம் செய்கிற ஒவ்வொரு பரிசுத்தவான்களும் வியாதியினாலும், விபத்தினாலும், பொருளாதார பிரச்சனைனாலும், சத்துருவனுடைய கிரிகளினாலும், பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதை பிதாவாகிய தேவன் விரும்புவதில்லை, ஆகையால்தான் வாக்குக்கு அடங்காத பெருமூச்சுகளோடு ஆவியானவர் பரிசுத்தவான்களுக்காக விண்ணப்பம் பண்ணுகிறார். 


இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக வந்து பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்து முடிப்பதற்கு சீஷர்களின் ஜெபம் தேவைப்பட்டது.

(மத் 26:40-45)

சீஷர்களும் தேவனுடைய சித்தத்தை ஐக்கியத்தோடு செய்வதற்கு இயேசு கிறிஸ்து அவர்களுக்காக ஜெபித்தார். 

(யோவா 17:6-19,வரை)

பவுல் அப்போஸ்தலனுக்கு ஜெபம் தேவைப்பட்டது. 

எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு நிருபங்களிலும் அவன் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதை வாசிக்க முடிகிறது.

(கொலோ 4:4; 1தெச 5:25;2தெச 3:2;எபி 13:18)


ஆபிரகாம் ஜெபித்தது போல 50 நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பிரோ ?

(ஆதி 18:24-28)

தேசம் அழியாமல் இருக்க வேண்டுமானால், நீதிமான்களாகிய பரிசுத்தவான்கள் உயிரோடு காக்கப்பட வேண்டும். 

(1இராஜா 18:4,13).அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். (ரோமர் 8:27)


கடமைக்காக ஊழியர்களுக்காக ஜெபம் பண்ணாதீர்கள். 

உண்மையாக ஊக்கமாக ஜெபம் பண்ணுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை