ஒரு அசுத்த ஆவி. (மாற் 12:43)

 ஒரு அசுத்த ஆவி.

(மாற் 12:43)


மத்தேயு 12: 43 முதல் 45 வரை உள்ள வசனங்கள் அசுத்த ஆவிகள் மனிதர்களை பிடித்திருப்பது சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. 


1) அசுத்த ஆவிகள் தாம் ஏற்கனவே எந்த மனிதனில் புகுந்திருந்ததோ, அது வெளியேறி சென்ற பின்னும் மீண்டும் அதே நபருக்குள் செல்ல விரும்பும்.

(மத் 12:44).


2) அந்த நபரின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் நிறைந்திருந்தால் அசுத்த ஆவி அங்கு நுழைய முடியாது. 

(மத் 12:44; 1கொரி 6:19; 2கொரி 

6:15,16).


3) ஒரு தேசம் முழுவதும் அல்லது சமுதாயம் முழுவதுமே அசுத்த ஆவி பிடித்ததாக மாறிவிடும் அளவுக்கு அந்த சமுதாயத்தினர் தீய இன்பங்களை நாடி அலைய முடியும். 

(மத் 12:45; வெளி 16:14),


நம்மிடமிருந்து எத்தனையோ பொல்லாத செயல்பாடுகள் நம்மை விட்டு வெளியேறி உள்ளது. 

பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரப்பப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் அவர் நமக்கு பாதுகாப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

நாம் அவரை துக்கப்படுத்தி அவரை விட்டு விலகும் போது 

நம்மை விட்டுப் போன எல்லாத்தையும் குணங்களும் ஏழு மடங்காக நம்மிடத்தில் திரும்பி வருகிறது. 

நீங்கள் பின் மாற்றத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவனிடத்தில் போய் பாருங்கள். இது உங்களுக்கு புலப்படும். 

ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் ஜெபத்திலும், வேதவாசிப்பிலும் ,ஊழியத்திலும், கவனத்தை அதிகமாக செலுத்துங்கள். 

தற்போது ஒரு கிறிஸ்தவனை பயன்படுத்தி இன்னொரு கிறிஸ்தவனை பிசாசு அழிக்க முயற்சிக்கிறான்.

தேவனோடு தொடர்பில்லாத பேர் கிறிஸ்தவன் பக்தி உள்ள கிறிஸ்தவனை, அழிக்கும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறான். 

ஆகையால் மனிதரிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஆதலால் ,கிறிஸ்த்தவனிடம் மிக மிக கவனமாக இருங்கள். 


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார. ஆமென் 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை