அக்கினி கடல்.

 அக்கினி கடல்.


(வெளி 20:14)


பரிசுத்த வேதாகமம் இங்கு இழந்து போனவர்களின் முடிவை சித்தரிக்கும் படத்தை காண்பிக்கிறது. 


1) உபத்திரவத்தையும், வியாகுலத்தையும் பற்றியது கூறுகிறது. (ரோமர் 2:9)


@) அழுகையையும் பற்கடிப்பையும் பற்றி சொல்லுகிறது;

(மத் 22:13;25:30)


@) நித்திய அழிவு (2 தெச 1:9)


@) அக்கினிச்சூளை

(மத் 13:42,50)

மேலும்

@அந்தகாரச் சங்கிலி 

(2பேது 2:4)


@நித்திய தண்டனை (மத்25:46)


@நரகத்திலே அக்கினி அவியாதிருக்கும் (மாற் 9:43)


@) அக்கினியும் கந்தகமும் ஏரிகிற கடல் (மத் 19:20)

'அந்தச் சூளையின் புகை இரவும் பகலும் ஓய்வின்றி மேலே எழும்பிக் கொண்டிருந்தது'.(மத் 14:11) என்றெல்லாம் பரிசுத்த வேதாகமம் நமக்கு கூறுகிறது. 

'தேவனுடைய கரத்தில் விழுவது பயங்கரமாயிருக்குமே'

(எபி 10:31) அந்த மனிதன் பிறவாதிருந்தானால் நலமாய் இருக்கும் (மத் 26:24; 10:28)


2) பாவத்தில் வாழுபவர்களுக்கு மேல் வரப்போகும் ஆக்கினை குறித்து புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் நன்கு அறிந்திருந்தனர். எனவே தான் அவர்கள் கண்ணீருடன் போதித்தார்கள். 

(அப் 20:19) மட்டுமின்றி துர் உபதேசங்களுக்கு எதிராகவும், தவறுகளுக்கு எதிராகவும் பிரசிங்கத்தனர். 

(பிலி 1:17; 2தீமோ 1:4)


3) துன்மார்க்களுக்கு வரும் நித்திய தண்டனையைக் குறித்த இந்த உண்மையானது, காலம் பிந்தி போவதற்கு முன்னதாக சுவிசேஷத்தை உலக முழுவதும் சுமந்து சென்று, பாவிகளை மனந்திரும்பச் செய்து கிறிஸ்துவை அவர்கள் ஏற்றுக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுக்க நம்மை அதிகமாய் தூண்டக் கூடியதாய் இருக்கிறது. (யோவா 3:16)


சில வசனங்களை வாசிக்கும் போது நமக்கு சம்பந்தம் இல்லாதது போல தோன்றலாம். ஒருமுறைக்கு இருமுறை வாசித்து பாருங்கள். நன்றாக புரியும். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை