ஒரு மனுஷன்
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷன். (2கொரி 12:2)
பவுல் தம்மைக் "கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷன்" என்கிறான்.
அவன் வெளிப்பாடுகள் பெறும்படியாக பரலோகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டான். ஒருவேளை அவை கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றியும், விசுவாசிகளுக்கென்று முன் ஆயத்தம் பண்ணப்பட்ட சொல்லி முடியாத மகிமைகளைப் பற்றியதாயும் இருந்திருக்கலாம்.
(2கொரி 12:7;ரோம 8:18;2தீமோ 4:8)
பவுலுக்கு அளிக்கப்பட்ட இந்த பெரிய சிலாக்கியமும், வெளிப்பாடும் அவருடைய அப்போஸ்தல ஊழியத்தில், அநேக விதமான கடினமான துன்பங்களைச் சகித்துக் கொள்ள அவனைத் தகுதிப்படுத்தி அவனை பெலப்படுத்தியது.
மூன்றாம் வானம்
மூன்று வானங்கள் இருப்பதாக பரிசுத்த வேதாகம வாக்கியங்கள் குறிக்கின்றன.
முதல் வானம் பூமியை சுற்றிலும் இருக்கக்கூடிய மண்டலம்.
(ஒசி 2:18;தானி 7:13)
2) இரண்டாம் வானம் நட்சத்திரங்கள் இருக்கக்கூடிய இடம்.
(ஆதி 1:14-18)
3) மூன்றாம் வானம்
பரதீசு என்று அழைக்கப்படுகிறது.
(2கொரி 12:3-4; லூக்கா 23:43;வெளி 2:7).
அது தேவனுடைய வாசஸ்தலமாகவும், பிரிந்து போன எல்லா விசுவாசிகளின் வீடாகவும் உள்ளது.
(2கொரி 5:8;பிலி 1:23)
அது எங்கு உள்ளது என்று வெளிப்படுத்தப்படவில்லை.
ஆகையால் கிறிஸ்துவின் நிமித்தம் வருகிற விமர்சனங்களோ, சிந்தனைகளோ, தூஷனங்களோ, சாபங்களோ, மிரட்டல்களோ, அல்லது உயிர் சேதமோ எது வந்தாலும் மகிமையான பரலோகம் நமக்காக தயாராக உள்ளது, என்ற ஒரு சந்தோசம் நமக்கு எப்போதும் உள்ளது.
(யோவான் 14:1-3)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
Comments