செத்த பின் பிழைப்பான்

 ஒரு மனிதன் செத்தபின் பிழைப்பானோ ?.

(யோபு 14:14)


கல்லறைக்குச் சென்ற மனிதன் திரும்பி வருவானா? 

என்ற நம்பிக்கை அநேக கிறிஸ்தவர்களிடத்தில் இல்லாமல் இருக்கிறது. 


மரத்தைக் குறித்த நம்பிக்கை இருக்கிறது. அதை வெட்டிப் போட்டாலும் திரும்பத் தழைக்கும், அதில் வேர் தரையிலே பழையதாகி (அழுகி) அதன் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும் அதற்கு நம்பிக்கை உண்டு. 

அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்.(யோபு 14:7-9)


அவன் மரித்து கல்லறைக்குள் பிரவேசித்த பின்னர்

(யோபு 14:10,13),

தேவன் அவனை வெளியே கொண்டு வரும்படி அழைப்பார் என்று யோபு விசுவாசித்தான்.(யோபு 14:15;1கொரி 15:20;1தெச 4:16,17) 

வேறு வார்த்தைகளில் சொன்னால் தன் சொந்த உயிர்த்தெழுதலில் யோபு உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தான். தேவனுடைய பிள்ளைகள் பேரில் தேவன் வைத்திருக்கும் ஊக்கமான அன்பின் அடிப்படையிலேயே இந்த நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பு அமைந்துள்ளது. அதாவது "உமது கைகளின் கிரியையின் மேல் விருப்பம் வைப்பீராக"(யோபு 14:15). ஒரு வினாடி நேரத்தில் யோபு தேவனை அடையும்படியான ஒரு உன்னதமான விசுவாசம் அறிக்கை செய்தான். 

(யோபு 19:25-26)


*என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்.*


முடிவில் தேவன் தனக்கு நியாயம் செய்வார் என்று நம்பிக் கொண்டு, தன் பாடுகள் வேதனையின் மத்தியிலேயும், பெரிதான விசுவாசத்தோடும் யோபு தேவனைப் பற்றிக் கொண்டிருந்தான்.

(யோபு 13:15;14:14-15).

யோபு தேவனைத் தன்னுடைய 

"மீட்பராக" அல்லது சகாயராகக் கண்டான்; பரிசுத்த வேதாகம காலத்தில் ஒரு "மீட்பர்" என்பவர் இக்கட்டு காலத்தில் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் உதவி செய்யவும் மிகவும் அன்போடு வருகிற ஒரு உறவினர் ஆகவும். 

(லேவி 25:25;உபா 25:5-10;ரூத் 1:4; மற்றும் ஆதி 48:16;யாத் 6:6;ஏசா 43:1; ஒசி 13:14 இவைகளை வாசிக்கவும்) துன்பப்படுகிற ஒரு குடும்பத்தினருக்கு நியாயம் செய்பவராகவும் இருந்தார். 


*அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார்.*


பரிசுத்த ஆவியின் ஏவுதலினாலே, கூறிய யோபுவின் சாட்சியானது, தமது ஜனத்தைப் பாவத்தின்றும்,ஆக்கினையினின்றும் இரட்சிப்பதற்கு வரவிருந்த மீட்பராகிய இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக் காட்டுகிறது.

(ரோம 3:24;கலா3:13;4:5;எபே 1:7;தீத் 2:14).

அந்த மீட்பர் மரண பயத்திலிருந்து அவர்களை விடுதலை பண்ணும் படியாகவும் (எபி 2:14-15;ரோம 8:23), அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கவும் (யோவா 3:16;ரோம 6:23), இனி வரும் கோபாக்கினைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவும்

(1 தெச 1:10) மற்றும் அவர்களுக்கு வெளியரங்கமாய் நியாயம் செய்யவும் வருவார். 

(வெளி 19:11-21;20:1-6) இந்த தெய்வீக மீட்பரை கண்ணால் காணக்கூடிய வெளிப்பாட்டினை இங்கே யோபு முன்கூட்டியே சொல்லி இருக்கிறான்.


*நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.*


அவனுடைய சரீரம் கல்லறையில் அழுகி மக்கிப்போன பின்பு, சரீரப் பிரகாரமாக உயிரோடு எழுந்து தன் மீட்பரை பார்க்க போவதாக யோபு உறுதியுடன் கூறினான். காலம் நிறைவேறிய பின் கிறிஸ்துவின் வருகை, மரித்தோர் உயிர்த்தெழுதல், இறுதியில் தேவனுடைய உண்மை விசுவாசிகளுக்கு நியாயம் செய்யப்படுவது ஆகியவை யாவும் இப்பகுதியில் ஒரே விதையில் அடங்கியிருப்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை கிறிஸ்தவனுடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டார்.

(சங் 16:10;49:15;எசா 26:19;தானி 12:2;ஒசி 13:14;)


*என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்.*

(சங் 16:10)

தேவனோடுள்ள நேரடித் தொடர்பானது, விசுவாசிகளுக்கு தேவனோடுள்ள எதிர்கால வாழ்வின் நம்பிக்கையையும் அவர்களை அவர் பாதாளத்தில் தள்ளி விடமாட்டார் என்கிற நிச்சயத்தையும் கொடுக்கும். 

(எபிரேயம் ஷிபோல்-பாதாளம்; சங் 73:26) அப்போஸ்தலனாகிய பேதுரு, பவுல் ஆகிய இருவரும் இந்த வசனம் கிறிஸ்துவையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் குறிப்பாக தொடர்புபடுத்தியுள்ளனர்.

(அப் 2:25-31;13:34-37)


1) பாதாளம் என்பது பழைய ஏற்பாட்டில் 66 முறை காணப்படுகிறது. அது "கல்லறை" இன்று 55 முறையும், மற்றும் "மரணம்"என்று 6முறையும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. சில அறிஞர்கள் பாதாளம் என்பது"கல்லறை"என்று தான் எப்பொழுதுமே பொருள்படும் என்று நம்புகின்றனர், மற்றவர்களோ அதற்கு அது மட்டும் பொருளல்ல என்று எண்ணுகிறார்கள்.


2) பொதுவாக, பாதாளம் என்பது தண்டனைக்குரிய ஒரு இடமாக பழைய ஏற்பாடு நோக்குகிறது. 

அ) தன் குமாரனாகிய யோசேப்பை இழந்ததினாலே, அவன் பாதாளத்திற்கு (பூமியின் தாழ்விடம்) இறங்குவேன் என்று யாக்கோபு குறிப்பிட்ட பொழுது (ஆதி 37:35), அவன் தான் தேவனுடைய நியாயத் தீர்ப்புக்குக் கீழ் அடங்கிருக்க வேண்டும் என்று அவன் உணர்ந்தான்; அதனால் தான் அவன் ஆறுதலுக்கு இடம் கொடுக்கவில்லை; யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான் என்று அவன் கேள்விப்படுகிற வரை அவன் தேவனைத் தேடியதற்கான ஆதாரம் இல்லை.


ஆ) பாதாளம் (பூமியின் தாழ்விடம்) என்பது "துன் மார்க்கர்"போகக்கூடிய இடம் என்று தாவீது தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

(சங் 9:17),

அசீரியாவிலுள்ள திகிலாத் பிலேசர் என்ற அஞ்ஞானியான அரசன் தான் மரித்த போது அவன் வெற்றி கொண்ட மன்னர்களைப் பாதாளத்தில் சந்திக்க போவதாக ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறான்.

(எசா 14:9-10)


இ) இஸ்ரவேலர் மரணத்தின் போது பாதாளத்திற்குப் போக எதிர்ப் பார்க்கவேயில்லை என்று பல வேத பகுதிகள் குறிப்பிடுகின்றன. ஆனால் மாறாக தேவனுடைய சமூகத்தின் ஆசிர்வாதங்களை அனுபவிக்கக் கூடிய இடத்திற்குப் போவதையே எதிர்பார்த்ததாகக் குறிப்பிடுகின்றன. தாவீது மரித்த போது, கர்த்தருடைய வீட்டில் என்றென்றைக்கும் வாசமாயிருப்பதையே எதிர்பார்த்திருந்தான்.

(சங் 23:6) தன் ஆத்துமாவை பாதாளத்திற்குத் தப்புவித்து மீட்டு அவனைப் பரலோகத்தில் நம்மிடத்திற்கு ஏற்றுக் கொள்வார் என்று மற்றொரு சங்கீதக்காரன் நம்பினான்.(சங் 49:15;73:14-15)

ஞானவான்களான, தேவனுக்குப் பயந்தவர்களின் பாதை "கீழான பாதாளத்திற்குப் போவதை விட்டு விலகி," உன்னதத்திற்கு போகும் என்று சாலமோன் சாட்சியாகக் கூறுகிறான்.

(நீதி 15:24).


*அவரை நானே பார்ப்பேன்.*

(யோபு 19:27)


காலம் நிறைவேறிய பின் கிறிஸ்துவின் வருகை மரித்தோர் உயிர்த்தெழுதல், தன்னுடைய மீட்பரான தேவனைப் பார்க்க வேண்டும் 

என்னும் யோபுவினுடைய விருப்பம், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவனுடைய மற்ற எல்லா விருப்பங்களைக் காட்டிலும் மேலானது.(யோபு 23:3). முழுமையான மீட்பில் கர்த்தருடைய முகத்தைக் காணும் அந்த நாளைக் காண யோபு ஏங்கினான்.


அதுபோலவே, புதிய ஏற்பாட்டின் விசுவாசிகளும் தங்களுடைய இரட்சகருடைய வருகைக்காகவும் (1கொரி 1:7;1தீமோ 4:8) அவரோடு நிறைவாக வாழும் நாளை காணவும் ஆவலோடு இருக்கிறார்கள்."அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள்."

(வெளி 21:3) மேலும் அவர்கள் "அவருடைய முகத்தைத் தரிசிப்பார்கள்."(வெளி 22:4)

யோபுவை போல நாமும் நம்முடைய மீட்பர் இயேசு கிறிஸ்துவை காண ஒவ்வொரு நாளும் ஏங்குவோம். மான்கள் நீரோடையே வாஞ்சித்து கதறுமா போல நாமும் அவரையே வாஞ்சித்து வாழ்வோம். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.




Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை