ஆரோக்கியமான வசனத்தைப் பொறுக்க மனதில்லாமல்.
ஆரோக்கியமான வசனத்தைப் பொறுக்க மனதில்லாமல்.
(2தீமோ 4:3-4)
திருச்சபையின் வரலாறு முழுவதிலும் சிலர் ஆரோக்கியமான வசனத்தை நேசிக்க மறுத்துள்ளனர். ஆனாலும் முடிவின் நாட்கள் நெருங்கும்போது நிலைமை மேலும் மோசமாகும்.
(2தீமோ 3:1-5; 1தீமோ 4:1).
1) *"மனிதர் ஆரோக்கியமான வசனத்தைப் பொறுக்க மனதில்லாமல் இருப்பார்கள்"*
அநேகர் தங்களைக் கிறித்தவர்கள் என்று அறிக்கையிட்டு, சபைகளில் கூடி, தேவனை மதிப்பது போல் காணப்படுவார்கள்.
ஆனால் புதிய ஏற்பாட்டு ஆதி அப்போஸ்தல விசுவாசத்தையோ அல்லது அநீதியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டுமென்ற பரிசுத்த வேதகாமக் கட்டளையையோ ஏற்க மாட்டார்கள்.
(2தீமோ 3:5; ரோமர் 1:16).
2) *"அவர்கள் சத்தியத்துக்கு செவியை விலக்குவார்கள்"*
(2தீமோ 3:4)
தேவ மனிதன் ஒருவன் செய்யும் ஆரோக்கியமான பரிசுத்த வேதாகம பிரசங்கத்தை சபைகளுக்குள் இருக்கும் அநேகரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
சத்தியத்துக்கு விலகிச் செல்பவர்கள் உண்மை சுவிசேஷத்தை வலியுறுத்தாத பிரசங்கத்தை விரும்புபவர்கள்.
(2தீமோ 2:18;3:7-8;1தீமோ 6:5;தீத் 1:14) தேவனுடைய வசனம், மனம் திரும்புதல், பாவம், ஆக்கினை, பரிசுத்தம், உலகத்திலிருந்து பிரிந்து வாழ்வது இவைகளின் தேவை பற்றி பேசும்போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
(2தீமோ 3:15-17; எரோ 5:31; எசே 33:32).
3. *"கட்டுக்கதைகளுக்கு செவியை சாய்ப்பார்கள்"*
(2தீமோ 3:3) தங்களை விசுவாசிகளென்று அறிக்கை செய்கிறார்கள் அவர்கள் தேவனுடைய வசனத்தின் உயர்ந்த தரத்துக்கு ஏற்ற போதகர்களைத் தேட மாட்டார்கள்.(2தீமோ 1:13-14; 1தீமோ 3:1-10).
ஆனால் தங்கள் சுயநலத்தையும், உலக ஆசைகளையும் நிறைவேற்றுகிறவர்களையே நாடுகிறார்கள். சொற்பொழிவாற்றக்கூடிய வரங்கள், கலை நிகழ்ச்சியால் மகிழ்விக்கக் கூடிய தகுதி, தங்கள் பாவ சுபாவத்திற்கு ஒத்து வாழ்ந்து கொண்டு கிறிஸ்தவர்களாக நிலைத்திருக்கலாம் என்று அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் செய்திகளை உடைய பிரசிங்கிமாரை அவர்கள் தேர்ந்து கொள்வார்கள்.
(ரோம 8:4-13; 2பேது 2)
4) *பரிசுத்த ஆவியானவர் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள்,*
அவருடைய வசனத்துக்குக் கீழ்ப்படிகிறவர்கள் ஆகிய எல்லோரும் நீதிக்காக உபத்திரவம், துன்பம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் படியாக அவர்களை எச்சரிக்கிறார். (2தீமோ 3:10-12;மத் 5:10-12).
மேலும் இரட்சிப்பில் தேவனுடைய வல்லமையை மறுதலிக்கிறது, உலகத்தோடு ஒப்புவிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறதுமான மக்கள், சபைகள், ஸ்தாபனங்களிலிருந்து அவர்கள் பிரிந்து இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கிறார்.
(2தீமோ 3:5;கலா 1:9;1தீமோ 4:1-2;2பேது 2:1;யூதா 3;வெளி 2:24).
நாம் எப்போதும் புதிய ஏற்பாட்டு சுவிசேஷத்திற்கும், அதை பிரதானப்படுத்தும் தேவனுடைய உண்மையான ஊழியருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியமும்
(வெளி 3:20-22) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து இளைப்பாறுதலின் காலங்களும் கிடைக்கும் என்ற நிச்சயத்தோடு நாம் இருக்கலாம். (அப் 3:19-20)
என விசுவாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா.
Comments