நரகம்
நரகம்
(மத் 10:28)
இங்கே நரகம்'என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சொல், (கிரே,'கீயென்னா'
எரே 7:31,ன்படி)
*இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கு.*
எருசலேமின் தெற்கு எல்லைக் கோட்டிலிருக்கும் இந்த பள்ளத்தாக்கு குப்பை மேடாகவும், விக்கிரகங்களை ஆராதிக்கும் இடமாகவும், அக்கினியில் சிறு பிள்ளைகளைப் பலியிடும் இடமாகவும் உபயோகிக்கப்பட்டது. (மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இந்த வழக்கம் கண்டிப்பாக விலக்கப்பட்டிருக்கிறது; லேவி 18:21;20:2-5 ஐ வாசிக்கவும்.) இந்த இடத்தில் தான் யூத சரித்திரத்தில் காணப்பட்ட மிகவும் பொல்லாத பாவங்கள் செய்யப்பட்டன. 'இன்னோம் பள்ளத்தாக்கு'என்ற பெயரில் இருந்து (எபிரேய மொழி-கெஹினோம்) கிரேக்க மொழியின் 'கீனா' என்ற வார்த்தை தோன்றி புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
நரகம் தான், தேவனின் நித்திய நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும் இடம்.
(மத்18:9;மாற் 9:47-48; மத் 10:28)
நரகம்
நித்திய காலமான சித்தரவதை அனுபவிக்கும் இடம். அது தேவனற்றவர்களுக்குரிய இடம். (மாற் 9:43,48)
பரிசுத்த வேதாகமம் ஒரு மனுஷனுடைய வாழ்க்கை உலக மரணத்துடன் முடிந்து விடுவதில்லை. அது எந்தெந்தைக்கும் நித்திய காலமாகத் தொடரும்.
அது தேவனுடைய சமூகத்தில் பரலோகத்திலோ அல்லது தண்டனைக்குரிய ஒரு இடத்திலோ இருக்கும். இழந்து போனவர்களின் எதிர்காலம் பற்றி கீழ்கண்ட விஷயங்களை கவனியுங்கள்.
1) தேவனுடைய சமூகத்தில் கண்டனம் செய்யப்பட்டவர்களுக்கு நித்திய தண்டனைக்குரிய ஒரு இடம் உள்ளது.
(மத் 5:22,29,30; 18:9;23:15,33;மாற் 9:43,45,47;லூக் 10:15;12:5) தொடர்ந்து தண்டனை அனுபவிக்கும் ஒரு அக்கினி கடல் "அந்த அக்கினி ஒருபோதும் அவிந்து போவதில்லை".(மாற் 9:43) "நித்திய அக்கினியாக பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்ட இடம்"
(மத் 25:41)"அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம்".
(மத் 13:42,50)
இருளும் அந்த காலமும் நிறைந்த இடம் (மத் 22:13).
பரலோகத்திலிருந்து பிரிந்திருந்து, சித்திரவதை, வேதனை, ஆகியவற்றை அனுபவிக்கும் இடம்.
(லூக் 16:23)
2) நிருபங்களில் கூறப்படும் போதனைகள், அடிப்படையில் ஒரே விதமானவைகளே. அப்போஸ்தலர்கள் வரப்போகிற தேவனுடைய நியாயத் தீர்ப்பைக் குறித்துப் பேசுகையில் நற்செய்திக்குக் கீழ்படியாதவர்களுக்கு தேவன் நீதியுள்ள ஆக்கினையைக் கொடுக்கும் படியாகவும் (2 தெச 1:5-9) தேவனுடைய பிரசன்னத்தையும் மகிமையையும் விட்டு விலகிச் செல்லும்படியாகவும்
(2தெச 1:10) தேவனுடைய எதிரிகள் யாவரும் அழிந்து நித்திய அழிவாகிய தண்டனையை அடையும் படியாகவும் தேவன் நியாயம் தீர்ப்பார் என்று கூறுகிறார்கள். (பிலி 3:18,19;ரோம 9:22; 1கொரி16:22;
கலா 1:9; 2தீமோ 2:12; எபி 10:27; 2பேது 2:4;யூதா 1:7;
வெளி 14:10; 19:20; 20:10,14;)
3) தீமை செய்கிறவர்களுக்குத் தண்டனை தீர்ப்பு உறுதி என்று பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. அதன் முக்கியக் கருத்து, கண்டனம் செய்யப்படுதல், வேதனை, காலவரையறை இல்லாமல் தேவனை விட்டு பிரிந்திருத்தல் ஆகியவை ஆகும். கிறிஸ்தவர்களுக்கு இந்த கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். அல்லது புரிந்து கொள்வதற்கு கடினமானதாயிருக்கலாம். எனினும் நாம் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்துக்கு அடிபணிந்து, தேவனுடைய தீர்மானத்தையும் நீதியையும் நம்ப வேண்டும்.
4) ஒருவரும் அழிந்து போகாமல் இருப்பதற்காகவே தேவன் தமது குமாரன் இயேசு கிறிஸ்துவை மரிக்கும் படியாக பூமிக்கு அனுப்பினார். என்னும் உண்மையை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
(யோவா 3:16) யாரையும் நரகத்துக்கு அனுப்புவது தேவனுடைய நோக்கமும், விருப்பமும் இல்லை.
(2பேது 3:9). நரகத்திற்குள் பிரவேசிக்க அவர்கள் தேவனால் அருளப்பட்ட இரட்சிப்பை வேண்டாமென்று
எதிர்த்து, ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்கிறார்கள்.
(ரோம 1:16-2:10)
நரகத்தில் உண்மைத்தன்மை பற்றிய அறிவானது எல்லா தேவனுடைய பிள்ளைகளும் தாங்கள் பாவத்தை வெறுக்கவும், வழி விலகினவர்கள் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும்படி தொடர்ந்து நாடவும், இறுதி காலத்தில் தேவன் செய்ய போகும் நீதியான நியாயத்தீர்ப்பு குறித்து மற்ற மக்களுக்கு எடுத்துக் கூறவும் தூண்ட வேண்டும்.
(வெளி 20:14)
மறுபடியும் மறுபடியும் வாசித்து பயனடையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments