சர்வ வல்லமையுள்ள தேவன்.

 சர்வ வல்லமையுள்ள தெய்வம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் (வெளி 1:8). அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.(லூக்1:37) உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. (எரே 32:17) உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே 32:27)

இதை விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என வேதம் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நமக்கு சொல்கிறார்.(மாற் 9:23)

சிலர் இயேசு கிறிஸ்து செய்கிற அற்புதங்களை நம்புவதில்லை அதை விசுவாசிப்பதும் இல்லை. 

கானாவூர் கல்யாணத்தில் நடந்த அற்புதம் இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதமாகும். 

இந்த அற்புதமானது இயற்கைக்கு அப்பாற்பட்டதாகும் இயற்கை விதிகளுக்கு மாறாக இங்கே இயேசு கிறிஸ்து செயல்படுவதை நாம் கவனிக்க முடிகிறது. 

திராட்சை ரசம்   

இயற்கையாக திராட்சை விதை விதைத்து அது முளைத்து அது கொடியாக படர்ந்து பின்பு பூத்து, காய்த்து, பழுத்து, பின்பு பறித்து அதை ஆலையில் பிழிந்து, கொதிக்க வைத்து ஆற வைத்து பருகுவது தான் சுவையான திராட்சை ரசம் ஆகும். 

இப்படி நாம் திராட்சை ரசம் பெற வேண்டுமானால் கிட்டத்தட்ட இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். அதற்காக நிறைய வேலைகளை செய்ய வேண்டியதாக இருக்கும். 

ஆனால் இயேசு கிறிஸ்து ஆறு கற்சாடியில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் அவர் சொன்னபடியே செய்து முடித்தார்கள். என்று இயேசு கிறிஸ்து அதை மொண்டு பரிமாறுங்கள் என்று பரிமாறினார்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனுடைய மகிமை விளங்கியது சாதாரண தண்ணீர் சுவையான திராட்சை ரசமாக மாறியது.   

இது நிமித்தம் சீஷர்கள் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தார்கள் என வாசிக்கிறோம். (யோவான் 2ஆம் அதிகாரம்) 

இங்கே நாம் கற்றுக் கொள்ளக் கூடியது என்னவென்றால் தேவன் எவ்வளவு வல்லமையுடையவர் என்பதை ஒரு விசுவாசி அறிந்து கொள்ள வேண்டும், அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என விசுவாசிக்க வேண்டும். ஒரு துளி சந்தேகமில்லாமல் விசுவாசிக்க வேண்டும். சில நேரங்களில் நம் தேவைகளில் நாம் கலங்கி போகிறோம், சோர்ந்து கூட போய் விடுகிறோம், இது எதனால் நடக்கிறது என்று சொன்னால் நாம் தேவனை புரிந்து அவர் மேல் சரியான விசுவாசத்தை வைக்காத படியினாலே நாம் கலங்குகிறோம் சோர்ந்து போய் விடுகிறோம். சரியான விசுவாசத்தை வைக்கும் பொழுது நாம் பதறாத வாழ்க்கையை கர்த்தர் நமக்கு தருகிறார். விசுவாசிக்கிறவன் பதறான் என்று வேதம் சொல்கிறது. அவர் எந்த சூழ்நிலையிலும் அதிசயமான காரியங்களை செய்வார் என நம்புங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். இன்றைய உயர்ந்த முத்துக்கள் மூலமாக...

 கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா








Comments

Anonymous said…
Amen, Praise the Lord!

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை