தவறை சரி செய்யாமல்

 தன் தவறை சரி செய்யாமல் அதற்கு ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுவது சரியானதா ?


நீங்கள் வேதத்தை (பரிசுத்த வேதாகமம்) படிக்கும் போது வேத வசனங்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் அந்த வசனத்தின் படி வாழ்கிறீர்களாவென்று பார்த்து உங்களை சரி இல்லாத விஷயங்களில் சரி செய்து கொண்டால் நீங்கள் பரிசுத்தம் அடைவீர்கள். 


ஆனால் வேத வசனங்களை படித்துவிட்டு அதன் பின்பு உங்கள் வாழ்க்கையை வசனத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் பிறர் வாழ்க்கையை வசனத்தோடு ஒப்பிட்டு பார்த்து அவர் இந்த வசனத்தின்படி வாழவில்லை, இவர் இந்த விஷயத்தில் இந்த வசனத்தின் படி சரியில்லை என்று மற்றவர்களிடம் குற்றம், குறை கண்டுபிடிக்க துவங்கினால் நீங்கள் எப்போது பரிசுத்தம் அடைவீர்கள்? 


இதை தான் இயேசு கிறிஸ்து:

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.


ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.


நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?


இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?


மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

மத்தேயு 7: 1-5

என்று கூறுகிறார்.


இங்கே இயேசு கிறிஸ்து சொல்வது முதலாவது உன்னை சுத்தவானாக காத்துக் கொள். 

இதைத்தான் பேதுருவுக்கு சொன்னார். 

நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரனை  ஸ்திரப் படுத்து

தற்போது யாருமே குணமாக விரும்புவதில்லை 

 ஒரு பதிலைச் சொல்லிவிட வேண்டும் என்பதற்காக

வசனங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். 


அப்போஸ்தலன் பவுல் சபைகளை கண்டிக்க வில்லையா ?

அல்லது உடன் ஊழியர்களையோ அப்போஸ்தலர்களையோ 

கள்ள ஊழியர்களையோ 

இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களையோ 

வேசித்தனம் பண்ணுகிறவர்களையோ கண்டிக்கவில்லையா ?


எல்லாருமே உன் கண்ணில் உத்திரம் என் கண்ணில் துரும்பு என்று பேசினால் இங்கு ஒருவரும் போதகராக இருக்கக் கூடாது. 


கிறிஸ்துவின் வசனத்தை பிரசங்கிக்க எவனுக்கும் இங்கு தகுதி இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். 


எல்லார் கண்ணிலும் துரும்பும், உத்திரமும் இருக்கும்போது மக்களுக்கு முன்பாக எப்படிப்பட்ட சாட்சியை விழங்கப்பண்ணுவீர்கள் ?.


ஒருவன் கிறிஸ்துவை பின்பற்ற மனதாயிருந்தால் என்னை பின்பற்றக் கடவன் என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னது போல இன்று ஒருவர் கூட இல்லையா ?


அப்படியானால் எல்லாரும் பிழைப்பு நடத்த தான் வந்தோமா ?

உண்மையாகவே கிறிஸ்து இருக்கிறாரா? இல்லையா என்கிற சந்தேகமா ?


அதனால் கூட உங்களால் பரிசுத்தமாய் வாழ முடியாது. தேவ பயம் இருக்காது. ஆட்களை கூட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் உங்களுக்கு இருக்குமே ஒழிய பரிசுத்த சந்ததி உருவாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஒருபோதும் வருவதில்லை. வரப்போவதும் இல்லை. 


எனக்கும் இந்த வசனத்தை சொல்லுவீர்கள் என்று நான் நம்புகிறேன். 

உன் கண்ணில் துரும்பு உத்திரம் இதை சரி பண்ணி என்று சொல்லும் போது நீங்கள் உன் கண்ணில் என்ன இருக்கிறது என்பதை எனக்கு சொல்ல வேண்டுமே !!!


பரிசுத்தத்துக்காக முயற்சி பண்ணுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை