திறப்பில் நிற்க
திறப்பில் நிற்க ஒருவனைத் தேடினேன் ஒருவனையும் காணோம்.
சாதாரண ஒரு மனிதனால் திறப்பின் வாசலில் நிற்க முடியுமா ?
வேதம் என்ன சொல்லுகிறது ?
நான் தேசத்தை (முழு உலகத்தை)அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
(எசேக் 22:30)
தேவன் பூமியில் மனுஷனை பார்த்தார்.
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
*எல்லோருமே பாவிகள்.*
*நீதிமான்கள் ஒருவனாகிலும் இல்லை.*
(சங்கீதம் 14:3; 53:3; ரோமர் 3:12;யூதா 1:11).
எசேக் 22:31 இல் தேவனுடைய கோபம் அக்கினியாக மாறியது
யார் அவருக்கு முன்பாக நிற்கக் கூடியவன் ?
எல்லோருமே பாவிகள் என்று வேதம் சொல்லுகிறது.
ஒரு பாவி இன்னோர் பாவிக்காக பரிந்து பேச முடியாது.
பாவிகளுக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பதை அறிந்திருக்கிறோம்.
(யோவா 9:31; ஏசா 59:1,2;)
*அப்படியானால் யார் திறப்பின் வாசலில் நிற்பது ?*
தேவனுடைய கோபத்தை ஆற்றக்கூடிய ஒரு வழிதான் திறப்பின் வாசல் அது
வானத்திற்கும் பூமிக்கும் நடுவாக ஒரு மத்தியஸ்தராக கல்வாரி சிலுவையில் கை கால்களில் ஆணிகள் அடிக்கப்பட்டு, விலாவில் குத்தப்பட்டு, இரத்தம் சிந்தி தன் ஜீவனையே சர்வ லோகத்தின் பாவத்தின் பரிகாரமாக, பலியாக கொடுப்பதாகும்.
இதற்கு தகுதியானவன் பூமியில் உண்டா ?
அப்பொழுது ஒரு குரல் வருகிறது,
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
(எபிரெ 10:7;சங் 40:)
ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
(யோவான் 11:50-52 ; ரோமர்5:6,8,10)
இதனால் இயேசு கிறிஸ்து
தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார்.
(எபிரெயர் 10:9 யோவா 6:38)
அவருடைய சித்தம் என்ன ?
*தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.*
*உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல்,* அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
(யோவான் 3:16,17).
பாவிகளை இரட்சிக்க இயேசு உலகத்தில் வந்தார்.
(1தீமோ 1:15)
பாவத்தின் சம்பளம் மரணம்.
(ரோமர் 6:23)
தம்முடைய மரணத்தினாலே மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், மரணத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், விடுதலை பண்ணும் படி அப்படியானார்.
(எபி 2:14,15)
அது மாத்திரமல்ல முதலாம் உடன்படிக்கையின் காலத்தில் நடந்த அக்கிரமங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு "அவர் மரணமடைந்து", அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்து கொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
ஏனென்றால் எங்கே மரண சாசனமுண்டோ, அங்கே அந்தச் சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாக வேண்டும்.
ஆகையால் தான் கிறிஸ்து இயேசு அக்கிரமத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு
அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார்.
(எபி 9:15,16) இதன் மூலமாக
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
எப்படியெனில், அவரே (இயேசு கிறிஸ்துவே)நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி,
* பகையாக நின்ற பிரிவினையாகிய
நடுச் "சுவரைத்" தகர்த்து,*
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
(எபேசியர் 2:13-16)
கல்வாரி சிலுவையில் இதைத்தான் எல்லாம் முடிந்தது பிதாவே என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்றார்.
இன்றைக்கு உலகத்தையும் உலக மக்களையும் காப்பாற்றுவதற்கு
திறப்பின் வாசலில் நிற்கும்படியாக அல்ல....
சுவிசேஷத்தை அறிவிக்கும்படிக்கு உலகம் எங்கும் புறப்பட்டு போக வேண்டும்.
இயேசு கிறிஸ்து திறப்பின் வாசலில் நின்று எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார்.
அழிந்து போக வேண்டிய நம்மை தம்முடைய மரணத்தினாலும் இரத்தத்தினாலும் மீட்டு பிதாவோடு நம்மை ஒப்புரவாக்கிவிட்டார்.
இந்த சுவிசேஷம் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தம்.
திறப்பின் வாசல் ஜெபம் என்று சொல்லி தேவ சித்தத்தை செய்ய விடாமல் உன்னை முடவனாக மாற்றும்
கள்ள ஊழியர்களிருந்து தப்பித்து ஓடு.
நீயும் ஓடு மற்றவர்களின் தப்புவிக்க ஓடு
இந்த ஓட்டப்பந்தயத்தில் உனக்கு ஒரு ஜீவ கிரிடம் உண்டு.
அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக ஓடு
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
வேதத்தை வாசித்து கள்ள உபதேசத்தில் இருந்து விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள்.
கிறிஸ்துவின் பணியில்
உங்கள் சகோதரன்
சிலுவை ராஜா
Comments