தேவனால் பிறந்தவன்

 தேவனால் பிறந்தவன் "பாவஞ்செய்யமாட்டான்".

(1யோவா 3:9)


"பாவஞ்செய்ய " என்ற வினைச்சொல் (மார்த்தனோ) நிகழ்கால முற்றுப்பெறாத செய்வினையாக, தொடர்ந்து செயல்படுவதைக் கொண்டதாகும். 

தேவனால் உண்மையாகப் பிறந்த எவனும் பாவத்தை தன் வாழ்க்கையின் நியதியாகக் கொள்ள மாட்டான் என்பதை வற்புறுத்துகிறார். 

ஏனென்றால் (everyday ) அனுதினமும் பாவத்தைப் பயிற்சி செய்கிறவனிடம் தேவனுடைய ஜீவன் தங்கியிருக்க முடியாது.

(1 யோவான் 1:5-7; 2:3-11,15-17,24-29; 3:6-24; 4:7-8,20)


1) தேவனிடம் எப்போதும் உறவு கொண்டிருக்கும் தன்மையுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை புதிதாகப் பிறத்தல் உண்டு பண்ணுகிறது.

இந்த நிருபத்தில், விசுவாசியின் புதிய பிறப்பைப் பற்றி யோவான் பேசும் ஒவ்வொரு தடவையும், புதிய பிறப்பு ஆரம்பித்த தொடர்ச்சியான நிலைத்த உறவை வற்புறுத்த, அவன் கிரேக்க மொழியிலுள்ள முற்றுப்பெற்ற காலத்தை உபயோகப்படுத்துகிறான்.

(1 யோவான் 2:29;3:9;4:7;5:1,4,)


2) தேவனுடைய ஜீவனைத் தங்களிடம் கொண்டிருக்கும் 

(அதாவது தேவனால் பிறந்த) 

மக்கள் பாவத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது ஆவிக்குரிய பிரகாரம் முடியாததொன்றாகும்.

விசுவாசிகள் தேவனுடைய உயர்ந்த தகுதியிலிருந்து எப்போதாவது பிசகலாம், ஆனால் அவர்கள் பாவத்தைத் தொடர்ந்து செய்யமாட்டார்கள்.

(1 யோவான் 3:6,10).


3) விசுவாசிகள் பாவஞ்செய்யாதபடி தடுத்து நிறுத்துவது அவர்களிலுள்ள "தேவனுடைய வித்து" ஆகும். அதாவது அவர்களில் வாசம் செய்யும் தேவனுடைய ஜீவன், ஆவி, சுபாவம், ஆகியவையாகும்.

(1 யோவான் 5:11-12; யோவா 15:4; 2பேது 1:4).

தேவனை அறியாத ஒருவன் பாவம் செய்யும் போது தேவன் அவன் பாவம் செய்யாதபடிக்கு தடுத்தார் என வேதத்தில் வாசிக்கிறோம்.(ஆதி 20:26).

தேவனுடைய தரிசனத்தை பெற்ற ஒரு வாலிபன் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி என்று சொல்லி தன்னை காத்துக் கொண்டதையும் வேதத்தில் வாசிக்கிறோம். (ஆதி 39:9)

புதிய உடன்படிக்கையின் ஊழியத்தில் அப்போஸ்தலன் பவுல் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதை அறிக்கை செய்கிறான்.

(அப் 24:16;25:8; 1கொரி 4:4)

இன்றைய ஊழியர்கள் பிரசங்கத்தில் சொல்வதை 

பார்க்கும்போது இவர்களும் தொடர்ந்து பாவத்தை பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.


4) விசுவாசத்தினாலும் (1யோவா 5:4), உள்ளே வாசம் செய்யும் கிறிஸ்துவினாலும், ஆவியானவரின் வல்லமையினாலும், எழுதப்பட்ட வேத வசனத்தினாலும் (1தெச 2:10)

எல்லா விசுவாசிகளும் மீறுதலிலிருந்தும், பாவத்திலிருந்தும், நேரத்துக்கு நேரம் (ஒவ்வொரு நிமிடமும்)விடுதலையோடு வாழ முடியும்.


தற்போது திருச்சபை யின் அவல நிலை பாவத்தை ஜெயிக்க முடியாது. 

பாவம் இல்லாத மனிதன் இல்லை. 

நாம் எல்லோருமே பாவிகள் தான். 

ஆகையால் குறை சொல்ல வேண்டாம். நாம் எல்லோருமே குறையுள்ளவர்கள், என போதித்து இரட்சிப்பின் அனுபவத்தை பெறாத ஜனங்களால் சபையை நிறைத்து விட்டார்கள். 

 ஆனால் உண்மை விசுவாசிகள் பாவத்தில் நிலைத்து நிற்க மாட்டார்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை